சிறகடிக்க ஆசை: சிந்தாமணியின் கணவர் மீனாவிடம் சொன்ன வார்த்தை.. விஜயாவை அசிங்கப்படுத்திய முத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஏப்ரல் 18-ஆம் தேதிக்கான எபிசோடில் திமிராக பேசிக்கொண்டிருந்த விஜயாவிற்கு முத்து பதிலடி கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் சிந்தாமணியின் கணவர் மீனாவிடம் முக்கிய விஷயத்தை சொல்லி இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து அண்ணாமலையிடம் மீனா மண்டபத்திற்கு 2 லட்சம் அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என்று பணத்தை பற்றி பேச ஆரம்பித்ததும் விஜயா உடனே அவன் என்ன கேட்க வரான்னு புரியலையா, இந்த வீட்டோட பத்திரத்துக்கு மேல இன்னும் அதிகமாக காசு வாங்கி கொடுக்க சொல்றாங்க என்று சொல்ல மனோஜ் கரெக்ட்டா சொன்னீங்க அம்மா, வேற எதுக்காக பேசி இருப்பான் என்று இருவரும் முத்து பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

Siragadikka aasai serial vijay tv

முத்து சொன்ன விஷயம்

அப்போது முத்து பேசி முடிச்சிட்டீங்களா நான் என்ன பேச வரேன்னு தெரியாம நீங்களா ஒன்னு பேசி முடிச்சிட்டீங்களா என்று கேட்கிறார். அதற்கு ஸ்ருதி நீங்க அவசர குடுக்கனு அன்னைக்கே சொன்னேன் இல்ல கரெக்டா தான் இருக்கு. அவர் என்ன சொல்ல வரார்னு தெரியாமலே நீங்களே ஏதாவது பேசி கடைசியில் மொக்கை வாங்குறீங்க என்று விஜயா அசிங்கப்படுத்துகிறார்‌.

அண்ணாமலை கேட்ட கேள்வி

உடனே மீனாவை பார்த்து விஜயா நீ தான் சொந்த காலில் நிற்பேன்னு சொல்லுவியே இப்ப எதுக்கு காசு கேட்கிறா என்று கேட்க, அத்த நாங்க காசுக்காக பேசுவது உண்மைதான் ஆனால் அது உங்க வீட்டோட பத்திரத்தை வைத்து இல்ல என்று சொல்ல, அதற்கு முத்து நான் பாட்டிகிட்ட பணம் கேட்கலாமா என்று அண்ணாமலை இடம் கேட்க, அதற்கு அண்ணாமலை எனக்கு அவங்க எப்படி செய்வார்களோ அதே போல உனக்கும் செய்வாங்க என்னை மாதிரி தான் உன்னையும் வளர்த்தாங்க என்று சொல்கிறார்.

அசிங்கப்பட்ட விஜயா

அதோடு விஜயாவிடம் எங்க அம்மா கிட்ட காசு வாங்க என்கிட்ட பர்மிஷன் கேட்கிறான். அவனை பற்றி நீ இவ்வளவுதான் புரிஞ்சி வச்சிருக்கியா என்று திட்டி விட்டு செல்கிறார். பிறகு எல்லோரும் சென்றுவிட மீனா பாட்டியிடம் கேட்க வேண்டாம் என்று முத்துவிடம் சொல்கிறார். அவங்களே கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறாங்க அதுவும் கையில் இல்லனா திடீர்னு யார்கிட்டயாவது வாங்கி கூட கொடுப்பாங்க. நம்ம அந்த கஷ்டத்தை பாட்டிக்கு கொடுக்க வேண்டாம்.

மீனா சொன்ன விஷயம்

ஏற்கனவே ஒரு பைனான்சியர் எப்போ வேணாலும் காசு தரேன்னு சொல்லி இருக்காரு அவர்கிட்ட கேட்டு பார்க்கிறேன் என்று சொல்கிறார். மறுபக்கத்தில் விஜயா பார்வதி வீட்டிற்கு வந்து பார்வதிக்கு கேசரி கொடுக்கிறார். எதுக்கு என்று பார்வதி கேட்க சந்தோஷமான விஷயம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் சிந்தாமணியும் வந்து விடுகிறார். என்ன மாஸ்டர் டான்ஸ் கிளாஸ் லீவ் என்று சொன்னீங்க ஆனா என்னை வர சொல்லி இருக்கீங்க எதுக்கு என்று கேட்க, அதற்கு விஜயா வீட்டில் மீனா பணம் கேட்ட விஷயத்தை பற்றியும், தான் தர முடியாது என்று சொன்ன விஷயத்தை பற்றி சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

கோபப்படும் பார்வதி

அதோடு அவங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றால் அது என்னுடைய மாமியாரால் தான் முடிக்கும் ஆனால் அவங்களும் ரெண்டு நாளில் பணம் கொடுக்க மாட்டாங்க. அதனால அந்த ஆர்டர் அவளால் எடுக்க முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்க, இவர்கள் இருவரும் பேசுவதை பார்த்து பார்வதி கோபப்படுகிறார். அடுத்ததாக மீனா பைனான்சியரை (சிந்தாமணியின் கணவர்) சந்தித்து விஷயத்தை சொல்லி பணம் கேட்க அவர் கொடுக்க மறுக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

மீனாவுக்கு ஏமாற்றம்

உங்களை நம்பி வந்தா திடீர்னு முடியாதுன்னு சொல்லுறீங்களே சார் என்று கேட்க, அதற்கு பைனான்சியர் 2 லட்சம் முன் பணம் கொடுத்து உனக்கு ஆர்டர் கிடைக்கலைன்னா என்ன பண்றது என்று சொன்னதும் நான் மீனா வருத்தமாக வெளியே போகிறார். மீனா போனதும் அங்கிருந்த நபர் நீங்க இதைவிட அதிகமான அமௌன்ட் எல்லாம் கொடுத்து இருக்கீங்க இந்த பொண்ணுக்கு ஏன் கொடுக்கல என்று கேட்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

பயப்படும் பைனான்ஸியர்

சிந்தாமணிக்கு எதிராக அந்த பொண்ணு வேலை செய்தா அவா ஆர்டர் பிடிக்க என்ன வேணாலும் பண்ணுவா. அது இந்த பொண்ணுக்கு நல்லது இல்ல என்று சொல்ல, அதற்கு அந்த நபர் அவங்க உங்களை நம்பி வந்த பொண்ணு என்று சொன்னதும் அதற்கு ஃபைனான்சியர் அந்த பொண்ணுக்கு எப்போது என்ன செய்யணும்னு எனக்கு தெரியும் என்று சொல்கிறார்.

முத்துவுக்கு வந்த பிரச்சனை

அடுத்ததாக மீனா பைக்கில் வந்து கொண்டிருக்கும் போது முத்து போன் பண்ணி பேசுகிறார். அப்போது பணம் கிடைக்காத விஷயத்தை பற்றி மீனா சொல்லி வருத்தப்படுகிறார். பிறகு முத்து காரில் வந்து கொண்டிருக்கும்போது டிராபிக் போலீஸ் அருண் காரை நிறுத்துகிறார். அருண் முத்துவிடம் வண்டியை விட்டு கீழே இறங்கு குடிச்சிருக்கியா என்று கேட்க, அதற்கு முத்து நான் குடிக்கல என்று சொல்கிறார். அப்போ இதில் ஊது என்று அருண் சொன்னதும் நான் குடிக்கல அதனால் ஊத மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+