சிறகடிக்க ஆசை: திருமணத்திற்கு சம்மதித்த முத்து.. அண்ணாமலை சொன்ன விஷயம்.. கதறி அழுத மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூலை ஒன்றாம் தேதிக்கான எபிசோடில் முத்து சீதா மற்றும் அருண் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் அண்ணாமலை சொன்ன விஷயத்தை கேட்டு மீனா கண்கலங்கி அழுது கொண்டிருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் முத்து கார் ஓட்டிக்கொண்டு வரும்போது நம்ம பிரச்சனையை மட்டும் தான் வச்சு யோசிச்சிட்டு இருக்கோம். ஆனா சீதாவோட சந்தோஷத்தை நினைத்து பார்க்கல. மீனாவும் எவ்வளவோ சொன்னா அதையும் கேட்கல, எவ்வளவு முரட்டுத்தனமாக இருந்திருக்கோம், சீதா ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைத்து கொடுக்கணும் என்று நேராக வீட்டிற்கு போகிறார்.

மறுபக்கத்தில் மீனா சோகமாக இருக்க அண்ணாமலை என்ன விஷயம் என்று விசாரிக்கிறார். அப்போது ஒன்னும் இல்ல மாமா என்று சொல்ல, எனக்கு எல்லாமே தெரியும் நீ சீதாவோட கல்யாணத்தை தானே யோசிச்சிட்டு இருக்குற, முத்து கொஞ்சம் பிடிவாதம் தான் ஆனா சொன்னா புரிஞ்சிப்பான். அவன் கிட்ட பேசுறேன் என்று சொல்ல, அப்போது விஜயா அவங்க ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க என்று சொல்லி சொல்கிறார்.
அதற்கு அண்ணாமலை மீனாவும் சீதாவும் அப்படிப்பட்ட பொண்ணுங்க கிடையாது. குடும்பத்துக்கு மரியாதை கொடுக்கிறவங்க என்று சொன்னதும் நான் இப்ப என்ன தப்பா சொல்லிட்டேன் என்று விஜயா சொல்ல, ஊர் உலகத்துல லவ் பண்ணவங்க வீட்டை எதிர்த்து ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலையா? ரவி ஸ்ருதிக்கு கூட இவ தானே கல்யாணத்தை பண்ணி வச்சா இவ குடும்பத்தை பற்றி யோசிச்சாளா? என்று கேட்க, அதற்கு ஸ்ருதி எங்க அப்பா அம்மா சம்மதிச்சு இருந்தா நாங்க ஏன் இப்படி முடிவு எடுக்கப் போறோம் என்று சொல்கிறார்.
அண்ணாமலை முடிஞ்ச விஷயத்தை பற்றி பேசாதீங்க என்று சொல்கிறார். அண்ணாமலை தன் குடும்பத்தின் மீது வைத்த நம்பிக்கையை பார்த்து மீனா அழுது கொண்டிருக்கிறார். அப்போது ஸ்ருதி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிடுங்க, முத்து சம்மதித்த பிறகு எல்லாரையும் கூப்பிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொல்ல, அண்ணாமலை அது தப்புமா அப்படி யாரும் பண்ண மாட்டாங்க அது குடும்பத்துக்கு துரோகம் பண்ற மாதிரி என்று சொன்னதும் மீனா பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார்.
மறு பக்கத்தில் முத்து வீட்டுக்கு சென்று பட்டுப்புடவை இருக்கு நாளைக்கு பொண்ணு பார்க்க வராங்க இந்த புடவையை கட்டிக்கோ என்று கொடுக்க, சீதாவின் முகம் மாறுகிறது. சத்யா எந்த ஊரு மாமா? என்று கேட்க, இந்த ஊருதாண்டா அதுவும் சீதா கேட்ட மாதிரி கவர்மெண்ட் மாப்பிள்ளை, ஒரே பையன் என்று சொல்ல மாமா என சீதா தயக்கமாக சொன்னதும் நீதான் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை வர சொல்லணும் என்று சொன்னதும் சீதா நானா என்று கேட்க அருணை நாளைக்கு பொண்ணு பார்க்க வர சொல்லு என்று சொல்ல அதைக்கேட்டு மொத்த குடும்பத்தினரும் சந்தோஷப்படுகின்றனர்
பிறகு முத்து கிளம்பியதும் சந்திரா நடந்த விஷயத்தை மீனாவுக்கு போன் போட்டு சொல்கிறார் மீனா சந்தோஷத்தில் அண்ணாமலை இடம் சொல்கிறார். அண்ணாமலை நான் தான் ஏற்கனவே முத்து பத்தி சொன்னனே அவன் முன்கோபக்காரன் அவ்வளவுதான். முதலில் எதையும் யோசிக்காமல் பேசிடுவான் அப்புறம் நிதானமா முடிவு எடுத்து சரியாக தான் செய்வான் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications