சிறகடிக்க ஆசை: முத்து பார்த்த விஷயம்.. சிக்கும் மணி? விஜயா கொடுத்த அதிர்ச்சி.. மாஸ் காட்டிய ஸ்ருதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மார்ச் 20ஆம் தேதிக்கான எபிசோடில் பரசுவின் மகள் திருமணத்தில் பல எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறுகிறது. முத்து குடும்பத்திடம் கறிக்கடைக்காரர் மணி நொடியில் தப்பித்து விடுகிறார். அதே நேரத்தில் விஜயா அண்ணாமலை குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அண்ணாமலை முத்து ரவி மூன்று பேரும் சாப்பிட போகிறார்கள். ஆனால் அதற்கு முன்பு மனோஜ் தனியாக உட்கார்ந்து நன்றாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அதை பார்த்ததும் முத்து நீ இவன் என்னவோ பொண்டாட்டியை விட்டுட்டு சாப்பிட மாட்டேன்னு சொன்னா? ஆனா இங்க பார்த்தா முதல் ஆளா சாப்பிட்டுட்டு இருக்க என்று கேட்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

மனோஜ் செய்த செயல்

அதற்கு மனோஜ் சாப்பாடு நல்லா இருக்கு உட்கார்ந்து சாப்பிடுங்க என்று சொல்கிறார். பிறகு எல்லோரும் சேர்ந்து சாப்பிடுகிறார்கள். அந்த நேரத்தில் இவர்கள் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் போது கறிக்கடைக்காரர் மணி போன் பேச அவர்களை தாண்டி போகிறார். ஆனால் அவர்கள் அதை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர்.

அடுத்ததாக மீனாவுடன் வேலை செய்யும் நபர்கள் மாலையை எடுத்துக் கொண்டு வந்து கொண்டிருக்கும்போது கறிக்கடைக்காரரை பார்க்கிறார்கள். அவரிடம் நலம் விசாரித்து விட்டு நீங்க என்ன இந்த கல்யாணத்துக்கு வந்திருக்கீங்க என்று கேட்க அதற்கு கறிக்கடைக்கார் இது என்னுடைய தங்கச்சி பையனுடைய கல்யாணம்தான் நான் தான் எல்லாமே முன்னாடி நின்று நடத்துறேன் என்று சொல்கிறார்.

மீனாவிடம் தப்பித்த மணி

அப்போது மீனாதான் இங்கே ஆர்டர் எடுத்தது என்று காட்டிக் கொடுக்கும் போது மீனா போய்க் கொண்டிருக்கிறார். அதனால் கறிக்கடைக்காரர் மீனாவின் முகத்தை சரியாக பார்க்கவில்லை. பிறகு அவர் அங்கிருந்து போன கொஞ்ச நேரத்தில் மீனாவுடன் வந்த பெண் மீனாவிடம் நாம அன்னைக்கு கறிக்கடைக்கு போனோம் இல்ல அவர்தான் மாப்பிள்ளையோட தாய்மாமா என்று சொல்கிறார்.

மீனா அன்னைக்கு தான் அவரை பார்க்க முடியல இன்னைக்காவது பார்க்கணும் என்று சொல்ல, அவர் இப்போ போயிட்டாரு பிறகு பாத்துக்கலாம் என்று அங்கிருந்து எல்லோரும் கிளம்புகிறார்கள். அடுத்ததாக விஜயா வரும்போது ஸ்ருதி இந்த புடவையில் நீங்க நல்லா இருக்கீங்க போட்டோ எடுப்போம் என்று அவரே போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார். பிறகு ஸ்ருதியும் விஜயாவும் போட்டோ எடுத்துக் கொண்டிருக்க இதை பார்த்த ரோகிணியும் வருகிறார்.

ஸ்ருதி செய்த செயல்

மூன்று பேரும் போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மீனா அங்கு வர அவரையும் சேர்த்து போட்டோ எடுக்கலாம் என்று ஸ்ருதி சொன்னதும் விஜயா நான் போறேன் என்று அங்கிருந்து போகிறார். இதனால் மீனாவின் முகம் மாறுகிறது. ஆனால் ஸ்ருதி வாங்க நாம ரெண்டு பேரும் சேர்ந்து எடுக்கலாம் என்று மீனாவோடு போட்டோ எடுக்கிறார்.

ஆனால் மீனா ஒரு போட்டோ போதும் என்று சாப்பிட கிளம்புகிறார். அங்கு விஜயா, ரோகிணி, ஸ்ருதி, மீனா நான்கு பேரும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் முத்து அங்கு வந்து எதையோ பார்த்து அதிர்ச்சியாகி மீண்டும் அண்ணாமலையிடம் ஓடுகிறார். அங்கு அவரிடம் அப்பா வாங்க ஒரு விஷயத்தை காட்டணும் என்று கூப்பிட்டு வந்து இங்கு மாமியார் மருமகள் எல்லோரும் சேர்ந்து சந்தோஷமாக பேசிக்கொண்டே சாப்பிடுவதை காட்டுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

சந்தோஷத்தில் அண்ணாமலை

அண்ணாமலை இந்த காட்சியை பார்த்து சந்தோஷப்படுகிறார். எல்லோரும் அவர்களுடைய மனைவிகளுக்கு பரிமாறி மாறி மாறி சாப்பாடு ஊட்டி கொள்கிறார்கள். அங்கிருந்த போட்டோகிராபரை கூப்பிட்டு அதை போட்டோவும் எடுத்துக் கொள்கிறார்கள். அடுத்ததாக பரசு அங்கு வந்து அண்ணாமலை குடும்பத்திடம் மாப்பிள்ளையின் தாய் மாமனை அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு கறிக்கடைக்காரரை தேடி அலைகிறார்.

கறிக்கடைக்காரர் மணி கிச்சனில் சமையல்காரரிடம் சாப்பாடு அருமையாக இருந்தது என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் பரசுராமன் உங்களை அண்ணாமலை குடும்பத்திடம் அறிமுகப்படுத்தலாம் என்று கூப்பிடுகிறார். அந்த நேரத்தில் சமையல்காரர் மயக்கம் போட்டு விழுந்து விடஅவரே ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

Siragadikka aasai serial vijay tv

மணி எடுத்த முடிவு

பிறகு அவரால் சமையல் செய்ய முடியாது என்பதால் இனி சாப்பாடு எப்படி செய்ய என்று எல்லோரும் பதறிக் கொண்டிருக்கும் போது, மணி எனக்கு சமையல் தெரியும் நான் பாத்துக்குறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு இந்த விஷயத்தை பரசுராமன் அண்ணாமலை இடம் வந்து சொல்கிறார். அப்போது அண்ணாமலை தனக்கு மாத்திரை போடுவதற்காக சுடுதண்ணி வேண்டும் என்று சொல்ல முத்து நான் போய் சமையல் கட்டில் வாங்கிட்டு வரேன் என்று கிளம்புகிறார்.

வரும் வழியில் ரவி முத்துவிடம் பேசுகிறார். அவரிடம் பேசிவிட்டு முத்து கிச்சனில் சமையல் செய்பவர்களிடம் வந்து சுடுதண்ணீர் கேட்கிறார். அதே பக்கத்தில் மணியும் வேலை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் முத்து இப்போதைக்கு பார்க்காதது போல காட்டப்படுகிறது. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+