சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு புது பெண்ணால் வரும் ஆபத்து.. மனம் மாறும் மனோஜ்.. முத்து கோபத்தில் செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 பிப்ரவரி 21ம் தேதிக்கான எபிசோடில் மனோஜ் ஷோரூம்க்கு வந்த பெண்ணால் ரோகிணி கோபப்படுகிறார். மனோஜ் அந்த பெண் பின்னாடி சுற்றிக் கொண்டிருக்கிறார். அதுபோல மீனா மீது முத்து கோபப்படுகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயாவின் டான்ஸ் கிளாஸில் அவருடைய மாணவர்கள் வெயிட் மிஷின் வாங்கிட்டு வந்ததில் பார்வதி, சிந்தாமணி என ஒவ்வொருவராக வெயிட் பார்க்கிறார்கள். அப்போது பார்வதி எங்கே எல்லாரையும் விட நீதான் வெயிட் அதிகமாக இருப்பா.. நீ இதில் நிற்க முடியாது என்று சொல்ல, அதற்கு விஜயா நான் ஒன்னும் அவ்வளவு வெயிட் கிடையாது என்று சொல்லிக்கொண்டு அந்த மிஷினில் ஏறி நிற்க மிஷின் ரிப்பேர் ஆகிவிடுகிறது.

Siragadikka aasai serial vijay tv

இதனால் எல்லோரும் சிரிக்கிறார்கள். உடனே விஜயா டென்ஷன் ஆகிறார். பிறகு ரதியிடம் எங்க மூன்று பேரில் யார் ஒல்லியா இருக்கிறது நான் தானே என்று கேட்க, கொஞ்ச நேரம் யோசித்த ரதி நீங்க மூணு பேருமே குண்டாக இருக்கீங்க என்று சொல்லிவிடுகிறார். இதனால் எல்லோரும் சிரிக்க அவர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டு நான் இன்னும் மூணு மாசத்தில் டயட்டிலிருந்து உடம்பை குறைப்பேன் என்று விஜயா சொல்கிறார்.

அதற்கு பார்வதி உங்களால உங்க மருமகளை கட்டுப்பாட்டில் வச்சுக்க தெரியல. நீங்க எப்படி உடம்ப குறைக்க முடியும் என்று உசுப்பேத்தி விடுகிறார். ஆனால் அதெல்லாம் என்னால் முடியும் என்று விஜயா சவால் விடுகிறார். மறுபக்கத்தில் மனோஜ் ஷோரூமில் இருக்கும் போது அங்கு ஒரு பெண் கஸ்டமர் வருவதை பார்த்து மனோஜ் ஜொள்ளு வடிக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

அப்போது ரோகிணி அங்கு வந்து நிற்பதையும் கவனிக்காமல் மனோஜ் அந்த பெண்ணை பார்த்துக்கொண்டு இருக்க ரோகிணி அதிர்ச்சியாகிறார். பிறகு மனோஜிடம் நான் அந்த பொண்ணுக்கு என்ன வேணும்னு பார்க்கிறேன் என்று சொல்ல, மனோஜ் இல்ல வேண்டாம் நானே கூட்டிட்டு போறேன் என்று டிவியை காட்டி பேசிக் கொண்டிருக்கிறார்.

பிறகு ஒரு வழியாக அங்கு இருக்கும் ஒரு டிவியை அந்த பெண் செலக்ட் செய்து விடுகிறார். பிறகு பில் போடும் இடத்தில் டிவிக்கு ஆஃபர் இருக்கு அதைவிட ஷோரூம் ஆஃபர் 5% இருக்கு என்று சொல்ல, ரோகிணி இது எப்போதிலிருந்து என்று கேட்க அதற்கு மனோஜ் சமாளிக்கிறார். பிறகு நீங்க அஜித் மாதிரி அழகாய் இருக்கீங்க என்று அந்தப் பெண் சொன்னதும் மனோஜ் வெட்கப்படுகிறார்

பிறகு தான் டயட்டீசியன். என்னோட கான்டக்ட் நம்பர் இதுதான் உங்களுக்கு வேணும்னா கால் பண்ணுங்க என்று சொல்ல, மனோஜ் அதை வாங்கி கொள்கிறார். பிறகு மனோஜ் பில் கொடுத்துவிட்டு 20 நிமிஷத்துல டெலிவரி ஆகிடும் என்று அவரை அனுப்பி விடுகிறார். ரோகிணி நீங்க அஜித்தா அந்த பெண் சொன்னதும் நீ இவ்வளவு வழியுற... ஏகே ஃபேன் கோபப்படுவார்கள் என்று சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

அதற்கு மனோஜ் அந்த பெண் என்னை அப்படி நினைச்சி இருக்கு என்று சொல்ல, அதற்கு ரோகிணி எல்லாம் ஆம்பளைகளும் இந்த விஷயத்துல ஒரே மாதிரி தான் இருக்கீங்க என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து ரோகிணிக்கு அவருடைய அம்மா போன் செய்கிறார். அதனால் தனியாக வந்து ரோகிணி பேசிக் கொண்டிருக்கிறார்.

விஜய் டிவி சீரியல் கதாநாயகனுக்கு தலையில் நடந்த விபரீதம்..இப்படியா பண்ணுவாங்க? வெளியான வீடியோ
அப்போது க்ரிஷ் ஸ்கூல்ல பேரன்ட்ஸ் மீட்டிங் இருக்கு உன்னை வர சொன்னாங்க என்று சொல்ல, நான் வெளிநாட்டில் இருக்கிறேன் என்று சொல்ல வேண்டியது தானே என்று கேட்கிறார். அதற்கு அவருடைய அம்மா நான் சொல்லிட்டேன் கண்டிப்பா வரணும்னு சொல்றாங்க வீடியோ கால் மூலமாக பேசணும்னு சொல்றாங்க என்று சொல்ல நான் செத்துட்டேன்னு சொல்ல வேண்டியது தானே என்று கோபப்படுகிறார்.

ஏற்கனவே அந்த முத்து வேற அங்க வர ஆரம்பிச்சுட்டான் நான் எங்க போனாலும் அவன் எனக்கு தொந்தரவா வந்து நிற்கிறான் என்று கோபப்பட அவருடைய அம்மா ரோகிணியை சமாதானப்படுத்துகிறார். அடுத்ததாக மீனா கார் ஓட்டிக் கொண்டு இருக்க பக்கத்தில் இருந்தபடியே முத்து சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

வரும் வழியில் மீனாவின் தோழி ஒருவர் நிற்க அவர் மீனாவை பார்த்து காரை நிறுத்துகிறார். நீ நல்லா கார் ஓட்டுன பிறகுதான் நான் உன் காரில் வருவேன் என்று சொல்ல, பார்த்தியா உன் கூட இத்தனை நாளா பழகுறாங்க ஆனா உன் மேல அவங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று முத்து கிண்டல் செய்கிறார்.

Top 10 Tamil Serials: முதல் இடத்தை தவறவிட்ட சிங்க பெண்ணே.. மேலே வந்த எதிர்பாராத சீரியல்
அடுத்ததாக கொஞ்ச நேரத்தில் இன்னும் ஒரு சில மீனாவின் தோழிகள் ஒரு இடத்தில் நிற்கிறார்கள். அவர்கள் மீனாவை பார்த்ததும் நாங்கள் உங்கள் காரில் வருவோம். மீனாவை பற்றி எங்களுக்கு நம்பிக்கை இருக்கு அவளால் சரியா தார் ஓட்ட முடியும் என்று சொல்லிக்கொண்டு காரில் ஏறுகிறார்கள். பிறகு காரில் பேசிக்கொண்டே வருகிறார்கள். ஒரு இடத்தில் வந்ததும் முத்து எனக்கு சவாரி இருக்கு என்று சொல்லி மீனாவை அனுப்பிவிட்டு காரில் கிளம்புகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+