சிறகடிக்க ஆசை: அப்பா போட்டோவோடு வந்த ரோகிணி.. அதிர்ச்சி கொடுத்த முத்து.. மீனாவின் சூப்பர் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜனவரி 24ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி தன்னுடைய நிஜ அப்பாவின் போட்டோவை கொண்டு வந்து குடும்பத்தினரிடம் இதுதான் என்னுடைய மலேசியா அப்பா என்று சொல்கிறார். ஆனால் அதை முத்து நம்பாமல் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். அதே நேரத்தில் முத்து மற்றும் மீனாவிற்கு புது பிரச்சனை வருகிறது.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரோகிணி தன்னுடைய அம்மாவிடமிருந்து தன் நிஜ அப்பாவின் போட்டோவை வாங்குகிறார். அப்போது ரோகிணியின் அம்மா நீ தப்பு மேல தப்பு பண்ற. பொய் சொல்லி ஒரு நாள் மாட்டப்போற என்று அட்வைஸ் பண்ண, அதற்கு வழக்கம்போல ரோகிணி என் வாழ்க்கையை பார்க்க எனக்கு தெரியும். நீ பண்ணுன தப்பால தான் என் வாழ்க்கை இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கு என்று அவரை திட்டி விடுகிறார்.

siragadikka aasai serial vijay tv

பிறகு வீட்டுக்கு வந்த ரோகிணி போட்டோவை காட்டி கதறி அழுகிறார். இதையெல்லாம் உண்மை என்று நம்பிய விஜயா அவருக்கு ஆறுதல் சொல்கிறார். அப்போதும் மனோஜ் நான் இருக்கிறேன் உனக்கு என்று அவரும் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு மனோஜ் ரோகிணியின் அப்பாவுடைய போட்டோவுக்கு பூ மாலை போட்டு கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் விஜயா உங்களுடைய சொத்து எல்லாம் உங்க மகளுக்கு சேர்ந்தால் தான் உங்க ஆத்மா சாந்தியடையும் என்று சொல்ல, அதையெல்லாம் கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். ஸ்ருதி இந்த டைமில் கூட இப்படியா பேசுவது என்று ரவியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அப்போது முத்து இந்த போட்டோவை பார்த்தால் எனக்கு சந்தேகமா இருக்கு. இதுதான் ரோகிணியின் அப்பாவா? இவரை பார்த்தா மலேசியாவில் இருப்பது போல தெரியலையே என்று சொல்ல, அதற்கு அதிர்ச்சியான ரோகிணி இந்த ஒரு போட்டோ தான் என்கிட்ட இருக்கு. நான் என்னுடைய அப்பாவின் பழைய போட்டோவை எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்.

அவர் மலேசியாவில் வேறுவிதமாகத் தான் இருந்தார் என்று சமாளிக்கிறார். ஆனாலும் இதையெல்லாம் முத்துவும் மீனாவும் நம்பாமல் இருக்கின்றனர். அடுத்ததாக செருப்பு தைக்கும் தாத்தா பாட்டி கடையை டிராபிக் போலீஸார் வந்து அப்புறப்படுத்துகின்றனர். அப்போது அவர்கள் கெஞ்சி கொண்டிருக்க, அதற்கு போலீஸ் இரக்கம் காட்டாமல் நடந்து கொள்கிறார்கள்.

அந்த நேரத்தில் முத்துவும் மீனாவும் வந்து தாத்தா பாட்டிக்காக சப்போர்ட் பண்ணி பேசுகின்றனர். அப்போது டிராபிக் போலீஸ் பாட்டியை பிடித்து கீழே தள்ளி விடுகிறார். அதில் பாட்டி கீழே விழுந்ததால் அவருடைய தலையில் அடிபட்டு இருக்கிறது. உடனே முத்து டிராபிக் போலீஸ் சட்டையை பிடித்து முறைக்கிறார்.

இதனால் டிராபிக் போலீஸ் அவரை அடிக்கப் போகும்போது பக்கத்திலிருந்து மற்ற போலீஸ் அவரை தடுத்து பப்ளிக் பாக்குறாங்க இந்த இடத்தில் வேண்டாம் என்று கூட்டிக்கொண்டு போகிறார்கள். பிறகு முத்துவும் மீனாவும் பாட்டியை சீதா வேலை பார்க்கும் ஹாஸ்பிடலில் சேர்க்கின்றனர்.

அவருக்கு தலையில் அடிபட்டு இருப்பதால் மொத்தம் ரத்தம் ஏத்தணும் என்று சொல்கிறார்கள். அடுத்ததாக வீட்டிற்கு வந்த முத்துவும் மீனாவும் இது பற்றி அண்ணாமலையிடம் பேசுகின்றனர். அப்போது மனோஜ்க்கு பாட்டியின் B பாசிடிவ் ரத்தம் என்பதால் அவரை பாட்டிக்கு ரத்தம் கொடுக்க சொல்லி முத்து கேட்க அதற்கு முடியாது என்று மறுத்து விடுகிறார்.

அந்த நேரத்தில் போலீசார் வீட்டிற்கு வந்து முத்துவை டிராபிக் போலீஸை அடித்ததற்காக உன்னை கூட்டிட்டு போறோம் என்று கூட்டிக்கொண்டு போகின்றனர்.‌ ரவியும் ஸ்ருதியும் நாம வக்கீல் பார்த்து பேசுவோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக முத்து போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும்போது மீனா அங்கு வருகிறார்.

siragadikka aasai serial vijay tv

மீனாவை முத்து வீட்டுக்கு போக சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது மனோஜையும் ரோகிணியையும் ஏற்கனவே பணம் ஏமாற்றிக் கொண்டு போன கதிர் மீது கொடுத்த கேஸ் பற்றி விசாரிப்பதற்கு வருகிறார்கள். அப்போது அங்கிருந்த ஏட்டு ஒருவரிடம் காதில் மனோஜ் சொன்ன வார்த்தையை கேட்டு மனோஜை அடிக்கிறார்.

அதைத்தொடர்ந்து வந்த போலீஸ்காரர்கள் எல்லோருமே மனோஜை அடிக்கிறார்கள். பிறகு மனோஜும் ரோகிணியும் ஸ்டேஷனிலிருந்து கிளம்பியதும் அங்கு இன்ஸ்பெக்டர் வருகிறார். அவரிடம் முத்து தான் டிராபிக் போலீஸ் சட்டை பிடித்தது என்று அங்கிருந்து போலீஸ் சொன்னதும் இன்ஸ்பெக்டர் முத்துவை திட்டுகிறார்.

அப்போது மீனா நடந்த விஷயத்தை சொல்லியதால் இன்ஸ்பெக்டர் டிராபிக்போலீஸை திட்டுகிறார். அதோடு முத்து அதிகாரத்தை கையில் எடுத்ததும் தப்பு என்று முத்துவையும் வார்ன் பண்ணி வெளியே அனுப்புகிறார். அப்போது டிராபிக் போலீஸ் இந்த இடத்தில் நீ தப்பிச்சிட்ட ஆனா உனக்கு ஏதாவது பிரச்சனை வரும்போது உன்னை யாரு காப்பாத்துறாங்கன்னு நான் பாக்குறேன் என்று மிரட்டுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+