சிறகடிக்க ஆசை: முத்துக்கு வந்த சந்தேகம்.. ஸ்ருதி எடுத்த வீடியோ.. சிக்கும் விஜயா.. மனோஜ் கொடுத்த பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஏப்ரல் 25 ஆம் தேதிக்கான எபிசோடில் முத்துக்கு சிந்தாமணி தான் ஆள் வைத்து மீனா பணத்தை பிடுங்கியது என்ற உண்மை தெரிய வருகிறது. அதோடு சிந்தாமணிக்கு யார் உதவி செய்திருப்பார் என்ற சந்தேகமும் முத்துக்கு வருகிறது. அதுபோல விஜயாவிற்கு அண்ணாமலை அதிர்ச்சி கொடுக்கிறார் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடில் விஜயா கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்கும் போது பார்வதி அங்கு வருகிறார். பார்வதி விஜயா சமைப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டு என்னாச்சு என்று கேட்க, அதற்கு விஜயா மீனாவுக்கு அடிபட்டதை சொல்கிறார். உடனே மீனாவுக்கு சப்போர்ட் பண்ணி பார்வதி பேச, அதனால் விஜயா கோபப்படுகிறார். பிறகு பார்வதி நான் மீனாவை பார்த்துட்டு வரேன் என்று சொல்லிவிட்டு மீனாவை போய் பார்க்கிறோம் என்று சொல்லிவிட்டு மீனாவை வந்து பார்க்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

பார்வதி கேட்ட கேள்வி

மீனாவிடம் எப்படி நடந்தது என்று பார்வதி விசாரிக்கிறார். பிறகு உடம்பை பாத்துக்கோ உன்கிட்ட கூட கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தா உன் மாமியாருக்கு பிடிக்காது ஆனால் நீ தான் இந்த வீட்டில் நல்ல மருமக என்று பாராட்டி விட்டு போகிறார். பிறகு பார்வதி விஜயாவிடம் வந்து பேசுகிறார். அப்போது மீனா நடிக்கிறா, அவ பணம் வேணும் என்பதற்காக என்கிட்ட நகை கேட்டா, நான் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது இதற்கெல்லாம் காரணம் அந்த சிந்தாமணினு தோணுது என்று பார்வதி சொன்னதும் விஜயா அதிர்ச்சி அடைகிறார்.

பார்வதி அட்வைஸ்

சிந்தாமணி உன் முன்னாடியே மீனாவை பழிவாங்குவேன், வளர விடமாட்டேன்னு சொல்லுறா நீயும் அவ கூட சேர்ந்து தலைய ஆட்டிகிட்டு இருக்கிற. என்ன இருந்தாலும் மீனா உன் மருமக. இன்னொருத்தங்க முன்னாடி விட்டுக்கொடுக்காத என்று அட்வைஸ் செய்கிறார். மறுபக்கத்தில் முத்து மண்டபத்திற்கு செல்வத்துடன் வந்து மேனேஜரிடம் விசாரிக்கிறார். அப்போது கடைசி வரைக்கும் நான் வெயிட் பண்ணி பார்த்தேன் ஆனால் மீனா வரல அவங்களுக்கு அடிபட்டுருச்சுன்னு கேள்விப்பட்டேன் என்று சொன்னதும் முத்து பணம் எடுத்துட்டு வந்தாங்க வழியில் திருடிட்டு போயிட்டாங்க அப்போதான் அவங்களுக்கு அடிபட்டது என்று சொன்னதும் மேனேஜர் ஐயோ இதெல்லாம் எனக்கு தெரியாது என்று பரிதாபப்படுகிறார்.

சிந்தாமணி பற்றி தெரிந்த உண்மை

அப்போது கடைசி நேரம் ஆர்டர் யாருக்கு போச்சு என்று விசாரிக்க, மேனேஜர் சிந்தாமணி தான் மீனா இனி வரமாட்டாங்க என்று சொன்னாங்க. நான் வேறு வழி இல்லாம தான் அவங்களுக்கு கொடுத்தேன் என்று சொன்னதும் இதற்கெல்லாம் காரணம் சிந்தாமணியாக தான் இருக்கும் என்று முத்துக்கு தெரிகிறது அப்போது செல்வம் அந்த சிந்தாமணி தான் இப்படி பண்ணி இருப்பாங்கன்னு எனக்கு சந்தேகம் இருக்கு ஆனா மீனா பணம் எடுத்துட்டு வராங்க என்கிற விஷயம் சிந்தாமணிக்கு எப்படி தெரிஞ்சது.

முத்துக்கு வந்த சந்தேகம்

அப்போது செல்வம் சிந்தாமணி இதற்கு காரணமாக இருக்கலாம் ஆனால் மீனா பணத்தை எடுத்துட்டு வருவது சிந்தாமணிக்கு எப்படி தெரியும்? அப்போ யாரோ அதை சொல்லிக் கொடுத்திருக்காங்க அதை முதல்ல கண்டுபிடிக்கணும் என்று சொன்னதும் முத்து நான் இதுல யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்காங்களோ அவங்களை சும்மா விட மாட்டேன் என்று சொல்லி காரில் வீட்டிற்கு வருகிறார்.

Siragadikka aasai serial vijay tv

மீனாக்கு பாராட்டு

மறுபக்கம் மீனா வீட்டில் பூ கட்டிக் கொண்டிருக்க விஜயா இப்ப கூட எதுக்கு பணம் சம்பாதிக்கிறதுல முக்கியமா இருக்க என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் முத்து வந்ததும் விஜயாவை மிரட்டி அவரை பேசவிடாமல் செய்கிறார். பிறகு மீனாவின் பக்கத்தில் உட்கார்ந்து எதற்கு மீனா கைவலிக்க பூ கட்டிக்கிட்டு இருக்க என்று கேட்க, இல்லங்க வேற ஒரு மண்டபத்தில் இந்த மாலையை கட்டிக் கொடுத்தா ஆர்டர் தரேன்னு சொல்லி இருக்காங்க அதுக்காகத்தான் ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கிறேன் என்று சொல்ல முத்து மீனாவை பாராட்டுகிறார்.

சந்தோஷத்தில் முத்து

ஒரு இடத்தில் தோற்றுப் போய்விட்டால் அப்படியே உடைந்து போய் இருக்காமல் அடுத்ததாக முன்னேற வேண்டும், அடுத்ததாக முயற்சி செய்ய வேண்டும் என்று மீனா செய்வது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று மீனா தலையில் பூக்களை போட்டு முத்து விளையாடிக் கொண்டிருக்க மீனாவும் சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ரோகிணி தன்னுடைய அறையில் இருந்து கதவை திறந்து வெளியே பார்க்கும்போது இவர்கள் ஜாலியாக விளையாடுவதை பார்த்து கோபம் ஆகிய மனோஜிடம் வெளியே என்ன நடக்குதுன்னு பாரு என்று சொல்ல மனோஜும் வந்து பார்த்து, இவனுக்கு என்ன லூசா? இப்படி பண்ணிக்கிட்டு இருக்கான் என்று திட்டி கொண்டு போகிறார்.

மனோஜின் கோபம்

அப்போது ரோகிணி அவங்களுக்குள்ளும் சண்டை வருகிறது. ஆனால் அடுத்த நிமிஷம் சேர்ந்துருவாங்க நாம தான் இப்படி இருக்கிறோம் என்று சொல்ல மனோஜ் என் வாழ்க்கையில் நடந்த ஏமாற்றம் இன்னொருத்தருக்கு நடந்திருந்தால் இந்த இடத்தில் நீ நின்னு பேசிட்டு இருக்க முடியாது என்று சொல்லிவிட்டு போய் படுக்கிறார். இதனால் ரோகிணி அழுது கொண்டிருக்கிறார்.

விஜயாவுக்கு பதிலடி

அப்போது முத்து மற்றும் மீனா விளையாடும் சத்தம் கேட்டு விஜயா கதவை திறந்து பார்த்து கோபப்படுகிறார். பிறகு அண்ணாமலை கூப்பிட்டு இவங்க என்ன இப்படி பண்ணிட்டு இருக்காங்க கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா என்று சொல்ல, நீ கதவை பூட்டிட்டு வா உனக்கு வயிறு எரிகிறதா என்று தண்ணீர் கொடுத்து குடிக்க செல்கிறார். இதனால் விஜயா கோபமாகிறார். மகளும் மருமகனும் சந்தோஷமா இருந்தா பார்த்து சந்தோஷப்படணும் அதை விட்டுட்டு இப்படி வயிறு எரியக்கூடாது என்று பதிலடி கொடுக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

பீல் பண்ணும் ரோகிணி

அந்த நேரத்தில் ஸ்ருதியும் ரவியும் வீட்டிற்கு வருகிறார்கள். சுருதி இவர்கள் விளையாடுவதை பார்த்து வீடியோ எடுக்கிறார். பிறகு முத்து இவர்களை பார்த்தது வெட்கப்படுகிறார். அப்போது ஸ்ருதி நீங்க விளையாடியது க்யூட்டாக இருந்தது நான் இதை ரிலீஸ் போடணும் நீங்க இன்னொரு முறை பூ போடுங்க என்று சொல்ல முத்து மீனா மீது போட்டு வீடியோ எடுத்துக் கொள்கிறார். பிறகு ஸ்ருதியும் இதுபோல விளையாட ஆசை பட ரவி முடியாது என்று சொன்னதும் முத்து பல குரல் ஆசைப்படுது பண்ணுடா என்று திட்டியதும் ரவியும் பூக்களை அள்ளிப் போடுகிறார். முத்து அதை வீடியோ எடுக்கிறார் அப்போது ரோகிணி வெளியே வந்து இதை பார்த்து மீண்டும் வருத்தப்படுகிறார்.

அருணுக்கு தெரிந்த விஷயம்

பிறகு அடுத்த நாள் காலையில் சீதா அருணுக்கு போன் செய்கிறார். அப்போது அருண் சீதாவின் குரலில் மாற்றம் தெரிவதை பார்த்து என்ன ஆச்சு என்று விசாரிக்க முதலில் சமாளிக்கும் சீதா பிறகு தன்னுடைய அக்காவிற்கு நடந்த விஷயத்தை சொல்கிறார். இதனால் அருண் அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+