சிறகடிக்க ஆசை: அண்ணாமலை குடும்பத்துக்குள் அடுத்த பஞ்சாயத்து.. இது பலருக்கு பாடம்! விஜயாவுக்கு விழுந்த அடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மே 26 ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி மற்றும் மனோஜை சேர்த்து வைப்பதற்காக மொத்த குடும்பத்தினரும் முடிவெடுத்திருக்கின்றனர். ஆனால் விஜயா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார். கடைசியில் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜ், ரவி, முத்து மூன்று பேரும் மொட்டை மாடியில் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர்கள் மனைவியோடு இருக்கும் பிரச்சனை குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் மனோஜ் தன்னுடைய நண்பர் சொன்ன விஷயத்தை சொன்னதும் முத்து ஆமாடா நீ பேசாம இருந்தா உன் பொண்டாட்டியும் உன்னை விட்டுட்டு போயிருவா பார்த்துக்கோ என்று பயமுறுத்துகிறார்.

ரவி கம்ப்ளைண்ட்
அப்போது ரவியும், ஸ்ருதி தனியா ரெஸ்டாரண்ட் ஓபன் பண்ணனும்னு சொல்றா, அது எப்படி செட் ஆகும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் மீனா, ரோகிணி, ஸ்ருதி மூன்று பேரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்களும் மூன்று பேரும் கணவர்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். மீனா சீதா லவ் பண்ணுகிற விஷயத்தை சொல்லி முத்து அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது பற்றியும் சொல்லிக் கொண்டிருக்கிறார்
ஸ்ருதி அட்வைஸ்
அப்போது முத்து பண்ணுவது தப்பு என்று ஸ்ருதி சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு ரோகிணி செய்த தப்பு குறித்தும் மீனா மற்றும் ஸ்ருதி கேள்வி எழுப்புகின்றனர். இதனால் ரோகினி கோபப்படுகிறார். அப்போது உங்க புருஷனை முதலில் கரெக்ட் பண்ண கத்துக்கோங்க அவர் ஆன்ட்டி என்ன சொன்னாலும் அப்படியே கேட்கிறாரு என்று ஸ்ருதி ரோகிணிக்கு அட்வைஸ் கொடுக்கிறார். மறுநாள் காலையில் விஜயாவிடம் பேசும்போது ரோகிணியும் ஷோரூம்க்கு வரவேண்டும் என்று மனோஜ் சொல்கிறார்.
விஜயா எடுத்த முடிவு
அதற்கு விஜயா முடியாது என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது அண்ணாமலை எதுக்கு நீ இப்போ இவ்வளவு பிடிவாதம் பிடிச்சிட்டு இருக்குற? எல்லாத்துக்கும் காரணம் உன்னுடைய பேராசை தான். நீ தான் அவங்களை பிரிச்சு வச்சுட்டு இருக்க என்று திட்டியதும் விஜயா, ரோகிணியை எங்க வேணாலும் கூட்டிட்டு போ, எப்படி வேணாலும் இரு என்று கோபமாக சொல்கிறார். ஆனால் இதை கேட்டு மனோஜ் சந்தோஷப்படுகிறார்.
அருண் அம்மா பேச்சு வார்த்தை
கடைசியில் விஜயா இனிமே என்கிட்ட பேசாத, உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று சொல்லிவிட்டு வெளியே போய் விடுகிறார். அந்த நேரத்தில் மீனாவுக்கு சீதா போன் செய்து அருணின் குடும்பத்தினர் நம்ம வீட்டுக்கு பேச வராங்க என்று சொன்னதும் மீனா முத்துவிடம் ஏமாற்றிவிட்டு அம்மா வீட்டுக்கு போகிறார். அங்கு எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் அருணும் அவருடைய அம்மாவும் வருகின்றனர். அருணை வீட்டுக்கு வெளியே நிற்க வைத்துவிட்டு அவருடைய அம்மா மட்டும் வந்து மீனா குடும்பத்திடம் பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications