சிறகடிக்க ஆசை: சீதாவிடம் காதலை சொன்ன அருண்.. மீனா சொன்ன விஷயம்.. ரோகிணிக்கு கிடைத்த அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 பிப்ரவரி 27ஆம் தேதிக்கான எபிசோடில் சீதாவிடம் அருண் காதலை சொல்கிறார். அதற்கு சீதா எதிர்பார்க்காத விஷயத்தை சொல்கிறார். அதுபோல ரோகிணிக்கும் பெரிய பிரச்சனை வருகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜும், விஜயாவும் வயிறு வலியில் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அண்ணாமலை என்ன ஆச்சு என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார். அண்ணாமலையின் சத்தத்தை கேட்டு முத்துவும் மீனாவும் எழுந்து கொள்கிறார்கள். பிறகு என்ன ஆச்சு என்று அவர்களும் வந்து விசாரிக்க இவங்களுக்கு வயிறு வலிக்கிறது என்று அண்ணாமலை சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

அவதிப்படும் விஜயா

மனோஜ் வயிற்றுக்குள் இருந்து ஏதோ சத்தம் வருது என்று சொல்ல, என்ன சத்தம் என்று முத்து கேட்க மனோஜ் கட கடன்னு சத்தம் கேட்குது என்று சொன்னதும் விஜயா எனக்கும் அதே மாதிரி தான் இருக்கிறது என்று சொல்ல முத்து கிண்டல் பண்ணிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ரோகிணி அங்கு வருகிறார். ரவியும் ஸ்ருதியும் வந்துவிடுகிறார்கள்.

ஸ்ருதியின் பஞ்ச்

ஸ்ருதி எப்போதும் சாப்பாடும் சாப்பாட்டை விட்டுட்டு திடீர்னு வேற சாப்பாடு சாப்பிட்டா இப்படிதான் ஆகும் என்று சொல்கிறார். பிறகு மீனா தண்ணீரில் சர்க்கரை உப்பு போட்டு எடுத்து வந்து கொடுக்கிறார். அதற்கு முத்த உங்களுக்கு டயட்டிஷன் உப்பும் சக்கரையும் எடுத்துக்க கூடாதுன்னு சொன்னாங்க ஆனா உங்களுக்கு வந்த பிரச்சனைக்கு அதுதான் இப்போ சரியாகிறது என்று கிண்டல் செய்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

நீ நான் சொன்ன விஷயம்

அதை தொடர்ந்து அடுத்த நாள் மீனா வீட்டில் நடந்த விஷயங்களை தன்னுடைய தம்பி, தங்கையிடம் கோவிலில் வைத்து சொல்லி சிரிக்கிறார்கள். அப்போது மீனாவின் அம்மா உங்க மாமியாருக்கு இந்த வயசுல இந்த வேலை தேவையா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மீனாவுக்கு யாரிடமோ இருந்து போன் வருகிறது. உடனே அவர் இப்போவே வருகிறேன் என்று கிளம்புகிறார்.

அருண் குடும்பம்

அதைத்தொடர்ந்து சத்யாவும் காலேஜுக்கு கிளம்புகிறார். சீதா அம்மாவுக்கு உதவியாக கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அங்கு அருண் அவருடைய அம்மாவை கூட்டிக்கொண்டு கோவிலுக்கு வருகிறார். அவர்களை பார்த்ததும் நலம் விசாரித்து பேசுகிறார். பிறகு அருண் அம்மாவோடு சீதாவும் கோவிலுக்கு கிளம்பியதும் சீதாவின் அம்மா நானும் வரேன் என்று அவர்களோடு கோவிலுக்கு போகிறார்.

Siragadikka aasai serial vijay tv

காதலை சொன்ன அருண்

அப்போது அருண் அம்மாவிற்கு ஒரு இடத்தில் கால் தடுக்கி விடுகிறது. அவரை சீதாவின் அம்மா கை தாங்கலாக கூட்டிக்கொண்டு கோவிலுக்குள் போகிறார். அப்போது சீதாவிடம் அருண் நான் உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும் என்று சொல்கிறார். சீதா என்னவென்று கேட்க எனக்கு சுத்தி வளைச்சு பேச தெரியாது உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்குது. உங்கள கல்யாணம் பண்ணிக்கலாமா? என்று கேட்க, இதை எதிர்பார்க்காத சீதா அதிர்ச்சியாகி நிற்கிறார்.

சீதா முடிவு

அந்த நேரத்தில் கோவிலில் மணி அடிக்கிறது. அப்போது சீதா என்னால் இப்போது கல்யாணத்தை பற்றி யோசிக்க முடியாது. என்னுடைய தம்பி படிக்கணும் வீட்டிற்கு நான் ஏதாவது செய்யணும் என்று நினைக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு அருண் உங்க பொறுப்பு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. அதனால்தான் நான் உங்ககிட்ட நேரடியாகவே பேசுறேன்.

Siragadikka aasai serial vijay tv

நீங்க சம்மதம் சொன்ன பிறகு நான் எங்க அம்மா கிட்ட பேசுறேன். அதற்கு முன்பு அம்மா கிட்ட பேசி அவங்கள ஏமாற்றம் கொடுக்க நான் விரும்பல. டைம் எடுத்துட்டு சொல்லுங்க என்று சொல்கிறார். அந்த நேரத்தில் இருவருடைய அம்மாவும் வருகிறார்கள். அதனால் இந்த பேச்சை அப்படியே விட்டுவிடுகிறார்கள்.

ரோகிணிக்கு அதிர்ச்சி

அடுத்ததாக ரோகிணி ஷோரூமில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது கறிக்கடைக்காரர் மணி அங்கு வருகிறார். அவர் தலையில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு உங்க கணவர் இல்லையா என்று விசாரிக்க, அதற்கு மனோஜ் நீங்க யாரு என் கணவருக்கு தெரிஞ்சவரா என்று கேட்கிறார். இல்ல உங்களுக்கு தெரிஞ்சவர்.

முத்துவின் என்ட்ரி

உங்க கணவர் என்னை பார்த்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இப்படி வந்து இருக்கிறேன் என்று ஹெல்மெட்டை எடுத்ததும் ரோகிணி அதிர்ச்சியாகிறார். பிறகு என்னுடைய உறவினர் வீட்டு கல்யாணத்திற்கு நான் தான் பொருள் எடுத்து தரேன் என்று சொல்லி இருக்கிறேன். அதனால் தான் பொருள் பார்க்க வந்தேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் முத்து ஷோரூமிற்கு வந்துவிடுகிறார். இவன் கண்ணில் மாட்டினால் பிரச்சனை ஆயிடுமே என்று மீண்டும் ஹெல்மெட்டை தலையில் மாட்டிக் கொண்டு மணி நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+