சிறகடிக்க ஆசை: காணாமல் போன ரோகிணி.. முத்துவை சிக்க வைத்த மனோஜ்.. மீனாவிடம் பார்வதி சொன்ன விஷயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மார்ச் 27ஆம் தேதிக்கான எபிசோடில் வீட்டை விட்டு துரத்தப்பட்ட ரோகிணி காணாமல் போய் இருக்கிறார். அதே நேரத்தில் ரோகிணி மீது இருக்கும் கோபத்தை விஜயா பார்வதியிடம் காட்டுகிறார். மறுபக்கத்தில் முத்துவை மனோஜ் புதிய சிக்கலில் சிக்க வைக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் அண்ணாமலை மனோஜிடம் ரோகிணியை கூட்டிட்டு வா என்று சொல்ல, அதற்கு மனோஜ் என்னால அம்மா பேச்சை மீறி எதுவும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டு நீங்கள் என் விஷயத்துல தலையிடாதீங்க என்று கோபப்படுகிறார். இதனால் முத்து கோபப்படுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

கோபப்பட்ட முத்து

அப்பாவுக்கு உன் விஷயத்தில் தலையிட உரிமை இல்லையா? அவர் இல்லனா நாம யாரும் இல்லடா என்று கோபப்பட, ரோகிணி தப்பு பண்ணியதற்கு அம்மா கொடுத்த பனிஷ்மென்ட் கரெக்ட். அம்மா சொல்ற வரைக்கும் நான் எதுவும் செய்ய மாட்டேன். நான் இந்த வீட்டில் இருக்கிறது பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள் நானும் போயிடுறேன் என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார். உடனே முத்து அண்ணாமலையிடம் எல்லாம் பார்த்துக்கலாம் அப்பா சரியாயிடும் என்று ஆறுதல் சொல்ல ஆனால் அண்ணாமலை எதுவும் பேசாமல் சோகமாக போய்விடுகிறார்.

பார்வதி கேட்ட கேள்வி

மறுபக்கத்தில் விஜயா பார்வதி வீட்டிற்கு சென்று நடந்த விஷயங்களை சொல்ல பார்வதி அதிர்ச்சி அடைகிறார். அப்போது வீட்டில் இரண்டு மருமகளை மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடுன என்று பார்வதி கேட்க, அதற்கு நானே செம கோவத்துல இருக்கேன் ஆத்திரத்தை கிளப்பாதே இத்தனைக்கும் காரணம் நீதான் என்று பார்வதி மீது விஜயா பழி போட பார்வதி அதிர்ச்சியாகி நான் என்ன பண்ணுனேன் என்று கேட்கிறார்.

பழி போட்ட விஜயா

அவ மலேசியாவில் இருந்து வந்திருக்க பணக்காரி என்றெல்லாம் சொன்னது நீ தானே என்று சொன்னதும் அவ சொன்னது உண்மை என்று நான் சொன்னேன் ஆனால் நீ தான் பணக்காரினு எதுவும் விசாரிக்காம மனோஜ்க்கு கல்யாணம் பண்ணுனா. நான் ஒன்னும் பண்ண சொல்லலேயே என்று கேட்டதும் என்ன தனியா விடு ஏற்கனவே ரொம்ப டென்ஷனா இருக்கேன் என்று கோபத்தில் இருக்கிறார்.

ரவி ஸ்ருதி எடுத்த முடிவு

மறுபக்கத்தில் முத்து சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க மீனா வீட்டில் யாரும் இல்லாமல் இருக்கிறதை பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்க நானும் இதைத்தான் யோசிச்சிட்டு இருக்கிறேன் என்று சொல்கிறார். பிறகு நடந்த விஷயங்களில் ரவி மற்றும் ஸ்ருதி இடம் போன் பண்ணி சொல்ல அவர்கள் நாங்கள் உடனே கிளம்பி வரோம் என்று சொல்கிறார்கள்.

முத்து சொன்னது நடந்தது

பிறகு முத்துவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கும்போது உங்க அண்ணன் எங்க போனாருன்னு தெரியலையே என்று மீனா கேட்க, என் கணக்குப்படி பார்த்தா இப்போ அவன் பாரில் குடிச்சிட்டு இருப்பான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதேபோன்று மனோஜ் குடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது என் பொண்டாட்டி என்னை ஏமாத்திட்டா என்று புலம்பி கொண்டு இருக்கிறார்.

பார்வதி சொன்ன வார்த்தை

அங்கு இருந்தவர்களும் அதே போல புலம்பி கொண்டிருக்கிறார்கள். இதனால் நாம எல்லாரும் ஒரு குரூப் ஓப்பன் பண்ணிடலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக பார்வதி மீனாவுக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது விஜயா உன்னை எவ்வளவு அசிங்கப்படுத்தினா... அதனால தான் இப்போ அவா அசிங்கப்பட்டிருக்கிறா. அவளுக்கு இதெல்லாம் தேவைதான் என்று சொல்ல மீனா பீல் பண்ணி பேசுகிறார்.

மனோஜ்க்கு ஆப்பு

மறுபக்கத்தில் மனோஜ் தன்னுடைய பார்க் நண்பருடன் பைக்கில் வந்து கொண்டிருக்கும் போது டிராபிக் போலீஸ் அருண் பைக்கை நிறுத்துகிறார். அப்போது மனோஜ் தன்னுடைய பைக்கை நிறுத்தி என் தம்பி யாருன்னு தெரியுமா நா இங்க இருக்கேன்னு தெரிஞ்சா அவன் என்ன பண்ணுவான் தெரியுமா என்று சீன் போட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியாக இங்கே எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+