சிறகடிக்க ஆசை: சீதா சொன்ன வார்த்தையால் முத்து எடுத்த விபரீத முடிவு.. பணத்துக்காக வசமாக சிக்கிய ரோகிணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூன் 28ஆம் தேதிக்கான எபிசோடில் சீதா சொன்ன வார்த்தையால் முத்து அதிர்ச்சியில் இருக்கிறார். அதே நேரத்தில் ஸ்ருதியின் அம்மாவிடம் பணத்திற்காக ரோகிணி வசமாக சிக்குகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் சீதா மனசை தெரிஞ்சுக்காமல் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்காதீங்க என்று மீனா திட்டியதால் முத்து அவரை மருத்துவமனையில் சென்று சந்திக்கிறார். அப்போது உனக்கு எப்படி மாப்பிள்ளை பார்க்கணும் என்று முத்து கேட்டதும், சீதா ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி நிற்கிறார். அப்போது முத்து உனக்கு ஐடியில் இருக்கிற மாப்பிள்ளை பார்க்கவா? அரசு வேலையில் இருக்கும் மாப்பிள்ளை பார்க்கவா? என்று கேட்டதும் சீதா முத்து கேக்குற கேள்விகள் எல்லாவற்றிற்குமே அருணை நினைத்து பதில் சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

கவர்மெண்ட் வேலை பார்க்கும் மாப்பிள்ளை வேண்டும், வீட்டிற்கு ஒரு பையனா இருக்கணும் என்று சொன்னதும் முத்துவும் சந்தோஷமாக சரி என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வருகிறார். சீதா இந்த விஷயத்தை மீனாவிற்கு ஃபோன் போட்டு சொல்கிறார். பிறகு வீட்டுக்கு வந்த முத்து நடந்த விஷயத்தை மீனாவிடம் சொல்கிறார். ஆனால் மீனா கண்டிஷன்ஸ் சொன்னதெல்லாம் அருண் நெனச்சி தான் சொன்னா இது கூட உங்களுக்கு தெரியலையா? என்று கேட்டதும் முத்து கோபமாகி சீதாவிடம் போய் கேட்கலாம் என்று மீனாவை சீதா வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருகிறார்.

மறுபக்கத்தில் ரோகிணி ஸ்ருதியின் அம்மா வீட்டிற்கு வந்து நிற்கிறார். அந்த நேரத்தில் ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் ஸ்ருதியை எப்படி அந்த வீட்டை விட்டு வெளியே கூட்டிக்கொண்டு வருவது என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ரோகிணியை பார்த்ததும் பேச்சை நிறுத்தி விடுகிறார்கள். ரோகிணி அவர் ஸ்ருதியின் அம்மாவிடம் 2 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்க, முதலில் அதிர்ச்சியாகும் ஸ்ருதியின் அம்மா கொஞ்சம் வெயிட் பண்ணு நான் அப்பாவிடம் கேட்டுட்டு வந்து சொல்லுறேன் என்று வந்து ஸ்ருதியின் அப்பாவிடம் கேட்கிறார்.

முதலில் அவர் பணக்கார வீட்டில் எல்லாம் இந்த மாதிரி பட்டவங்க பணத்துக்காக தான் வருவாங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு சிறிது யோசித்து அந்தப் பொண்ணு கேக்குற பணத்தை கொடுத்து அனுப்பு, அண்ணாமலை வீட்டுக்குள் கலகம் செய்து இந்த பொண்ணு வச்சு தான் ஸ்ருதியை கூட்டிக்கொண்டு வரணும் என்று பிளான் போடுகிறார். அதனால் ஸ்ருதியின் அம்மாவும் சரி என்று ரோகிணியிடம் வந்து நீ வீட்டுக்கு போ பணத்தை அனுப்புறேன் என்று சொல்லி அனுப்புகிறார்.

பிறகு ரோகிணி வெளியே போகும் போது எங்களுக்காக சில விஷயங்கள் நீ செய்யணும் என்று சொல்ல, உங்களுக்காக என்ன வேணாலும் செய்வேன் என்று சொல்லிவிட்டு ரோகிணி போகிறார். அடுத்த கட்டத்தில் சீதா வீட்டிற்கு முத்துவும் மீனாவும் வருகிறார்கள். அந்த நேரத்தில் சீதா வெளியே போயிட்டு வந்ததை பார்த்து அவருடைய அம்மா எங்க போயிட்டு வர என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது முத்துவும் மீனாவும் அவசரமாக வந்ததும் சீதாவின் அம்மா என்ன விஷயம் என்று கேட்க, நடந்த விஷயத்தை முத்து சொல்கிறார். அதோடு நீயே சொல்லு சீதா சொன்ன கண்டிஷன் எல்லாம் அந்த அருணை நினைத்து இதை எல்லாம் சொல்லை தானே என்று கேட்க, மீனா தலையசைப்பதை பார்த்து, இல்ல மாமா நான் அருணை நெனச்சு தான் அந்த கண்டிஷன் எல்லாம் சொன்னேன் என்று சொன்னதும் முத்து அதிர்ச்சியாகி கோபமாக அந்த வீட்டை விட்டு வெளியே போகிறார். இதனால் சீதாவின் அம்மா அவரை போட்டு அடிக்க மீனா சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+