சிறகடிக்க ஆசை: தாம்பூல தட்டுடன் வந்த ஸ்ருதி அம்மா.. ரோகிணிக்கு கிடைத்த அவமானம்.. விஜயாவை கிழித்த மீனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஏப்ரல் 28ஆம் தேதிக்கான எபிசோடில் ரவி மற்றும் ஸ்ருதி ரெஸ்டாரண்ட் தொடங்குவதற்காக ஸ்ருதியின் அம்மா பணம் கொடுக்கிறார். அதை வைத்து விஜயா ரோகிணி மற்றும் மீனாவை அசிங்கப்படுத்துகிறார். கடைசியில் விஜயாவை மீனா கோபத்தில் திட்டி இருக்கிறார் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜ் குளித்துக் கொண்டிருக்கும் போது ரோகிணி தன்னுடைய பிரண்டு மகேஸ்வரி இடம் மகேஷ் என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் அதை ஆண் நண்பரிடம் பேசுவதாக மனோஜ் புரிந்து கொள்கிறார். இதனால் மனோஜ் கோபத்திலும் அதிர்ச்சியிலும் இருக்கிறார். அதை பார்த்ததும் ரோகிணி இதை வைத்து இனி மனோஜை தொந்தரவு செய்ய வேண்டும் என்று பிளான் போடுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

விஜயாவுக்கு இன்ப அதிர்ச்சி

மறுபக்கத்தில் ஸ்ருதியின் அம்மா தாம்பூலத்தில் செக் வைத்து கொடுக்க, விஜயா மற்றும் அண்ணாமலை என்ன விஷயம் என்று விசாரிக்கின்றனர். அதற்கு என்னுடைய மாப்பிள்ளையும் ஸ்ருதியும் ரெஸ்டாரண்ட் ஓபன் பண்ண போறாங்க என்று விஷயத்தை சொன்னதும் இதை முன்னாடியே சொல்லலையே என்று அண்ணாமலை கேட்கிறார்.

கோபப்பட்ட முத்து

உடனே முத்து அப்பா அம்மா கிட்ட சொல்லாம நீயே முடிவு எடுத்துட்டியா டா என்று ரவியிடம் கேட்க, நான் எந்த முடிவும் எடுக்கல நாங்க பேசிட்டு இருந்தோம் அவ்வளவுதான். அதுக்குள்ள ஸ்ருதி எல்லாம் பண்ணிட்டா என்று சொன்னதும், ரவி வேலை செய்யும் ரெஸ்டாரண்டில் இவனோட சாப்பாட்டுக்காக தான் அங்க இவ்வளவு பேரு சாப்பிட வராங்க ஆனா அதை அந்த நீத்து ஒத்துக்குற மாட்டேங்குறாங்க அதனால்தான் புது ரெஸ்டாரண்ட் ஓபன் பண்ணனும்னு நினைக்கிறேன் என்று சொல்கிறார்.

ஸ்ருதி அம்மா கொடுத்த பணம்

அதற்கு ஸ்ருதியின் அம்மா இதில் 10 லட்சம் இருக்கு மாப்பிள்ளை இது அட்வான்ஸ் தான் நீங்க ரெஸ்டாரண்ட் தொடங்குங்கள் எவ்வளவு பணம் வேணும்னாலும் கேளுங்க தரோம். எங்களுடைய சொத்து எல்லாமே உங்களுக்கும் ஸ்ருதிக்கும் மட்டும்தான் என்று சொல்கிறார். இதை பார்த்து சந்தோஷப்படும் விஜயா இவங்கதான் சம்பந்தி, இவங்க ஒருத்தராவது இப்படி எல்லாம் பண்ணுறாங்களே... இங்க ஒருத்தி பூக்கடை இன்னொருத்தி சாக்கடை என்று மீனா மற்றும் ரோகிணியை அசிங்கப்படுத்தி பேசுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

அசிங்கப்படுத்திய மீனா

விஜயா பேச்சைக் கேட்டு அண்ணாமலை கோபப்பட்டு விஜயாவை திட்டுகிறார்.. அதற்கு ஒரு மீனா எங்க வீட்டில் கஷ்டப்பட்டாலும் வரவங்க எல்லாருக்கும் சாப்பாடு போட்டு தான் எங்க அப்பா அனுப்புவாங்க. ஆனா இங்கே இவ்வளவு பெரிய வீடு இருக்கு எத்தனை பேரு சாப்பிட்டு இருக்காங்க? நீங்க யாருக்கு சாப்பாடு போட்டு இருக்கீங்க? என்று கோபப்பட்டு திட்டுகிறார். இதனால் அண்ணாமலையும் மீனாவுக்கு சப்போர்ட்டாக விஜயாவை திட்டிக் கொண்டிருக்கிறார்.

தோழிகளின் அட்வைஸ்

அப்போது ஸ்ருதி எங்க அம்மா பணம் கொடுத்துட்டாங்கன்னு நீங்க மற்ற ரெண்டு மருமகள்களையும் அசிங்கப்படுத்தி பேசாதீங்க. எங்க அம்மாவிடம் நாங்க கடனாகத்தான் பணம் வாங்குறோம். எங்களுக்கு வருமானம் வந்ததும் பணத்தை திருப்பி கொடுத்துவிடுவோம் என்று சொன்னதும் விஜயா கோபப்பட்டு அங்கிருந்து போகிறார். மறுபக்கத்தில் மீனா சீதா காதலிக்கும் விஷயம் பற்றியும் வீட்டில் நடக்கும் பிரச்சனை பற்றியும் தன்னுடைய தோழிகளிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு எல்லோரும் முத்து இப்ப இப்படித்தான் சொல்லுவாரு கல்யாணம் ஆனா புரிஞ்சிக்குவாரு நல்ல வரனை விட வேண்டாம் என்று மீனாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+