சிறகடிக்க ஆசை: சிந்தாமணியால் சிக்கும் விஜயா! அண்ணாமலை கேட்ட கேள்வி.. முத்து பிடித்த பாயிண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஏப்ரல் 29ஆம் தேதிக்கான எபிசோடில் சிந்தாமணி மீனாவிடம் இருந்து திருடிய பணத்தை முத்து பிளான் போட்டு எடுத்து விடுகிறார். அதே நேரத்தில் விஜயா மீது குடும்பத்தினருக்கு சந்தேகம் வருகிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் சிந்தாமணி வீட்டில் முத்து பணத்தை எடுத்ததும் வேகமாக அங்கிருந்து வெளியே வருகின்றனர். அப்போது ஸ்ருதியின் தலைமுடி கதவில் மாட்டிக்கொள்ள, ரவி முத்து செல்வம் எல்லோரும் ஓடிவந்து காருக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். அப்போது ஸ்ருதி மட்டும் வராததால் எல்லோரும் பதட்டத்தில் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் சிந்தாமணி அங்கு வந்து விடுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

மாட்டிக்கொண்ட ஸ்ருதி

ஸ்ருதியை பார்த்ததும் அருகில் வந்து நின்று யாருமா நீ என்று கேட்க, ஸ்ருதி தயங்கி கொண்டு நிற்கிறார். அதனால் சிந்தாமணி இப்போதைக்கு உன் கிட்ட பேச முடியாது இரு வரேன் என்று வீட்டிற்குள் போகிறார். அதற்குள் ஸ்ருதி காருக்குள் ஓடி வந்து விடுகிறார். அப்போது சிந்தாமணியின் ஆட்கள் வருமான வரித்துறை என்று சிந்தாமணி இடம் ஆரம்பிக்க சிந்தாமணி எனக்கு அவசரமா போகணும் என்று பாத்ரூம் போகிறார்.

ஸ்ருதி கேட்ட கேள்வி

மறுபக்கத்தில் எல்லோரும் சந்தோஷமாக காரில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஸ்ருதி ரவி தன்னை விட்டுட்டு வந்தது குறித்து அவரை திட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு முத்து நீ ரொம்ப தைரியமான பொண்ணு எப்படியும் இந்த பிரச்சனையை சரி பண்ணிட்டு வந்துருவேனு எனக்கு தெரியும். அதனால தான் நாங்க வெயிட் பண்ணுனோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு சிந்தாமணி பாத்ரூமை விட்டு வெளியே வந்ததும் வருமானவரித்துறையில் இருந்து வந்தாங்க நம்மகிட்ட கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பேன் என்று வந்திருக்காங்க ஆனா வீடு முழுக்க செக் பண்ணி பார்த்து கடைசியில் ஒரு மஞ்சள் பையை மட்டும் எடுத்துட்டு போனாங்க என்று சொன்னதும் சிந்தாமணி அதிர்ச்சி ஆகி ஓடி சென்று பீரோவில் பார்க்க அங்கு பணம் இல்லாமல் இருக்கிறது.

கோபத்தில் சிந்தாமணி

இதனால் அங்கு இருப்பவரை கோபத்தில் அறைகிறார். அந்த நேரத்தில் மீனா போன் போட்டு சிந்தாமணி போலவே என்னம்மா கண்ணு வருமான வரித்துறையில் வந்து காசு எடுத்துட்டு போய்ட்டாங்களா என்று கேட்க, அதற்கு சிந்தாமணி உனக்கு எப்படி தெரியும் என்று கேட்க, எங்க வீட்டு ஆளுக தான் வந்தாங்க என்று சொன்னதும் சிந்தாமணி அதிர்ச்சி அடைகிறார். நீ என்ன வேணா பண்ணுவ, நான் அமைதியா விட்டுடுவேன். ஆனா என் புருஷன் அப்படி கிடையாது.

மீனாவின் திமிர் பேச்சு

நல்லவங்களுக்கு ரொம்ப நல்லவரா இருப்பார். கெட்டவங்களுக்கு ரொம்ப ரொம்ப கெட்டவரா இருப்பாரு என்று சொன்னதும் சிந்தாமணி கோபத்தில் இருக்கிறார். அப்போது சிந்தாமணி நான் போலீசுக்கு போன் பண்றேன்னு சொல்ல, உடனே பண்ணு முதல்ல நீ தான் மாட்டுவ. உனக்கு பணம் எப்படி வந்தது என்று கேட்பார்கள் என்று சொன்னதும் சிந்தாமணி அமைதியாகி விடுகிறார்.

அதிர்ச்சியில் விஜயா

இப்பவும் சொல்லுறேன் வாழு வாழ விடு என்று டயலாக் பேசிவிட்டு மீனா போனை வைக்கிறார். மறுபக்கத்தில் முத்து வீட்டுக்கு வந்து அண்ணாமலையிடம் முக்கியமான விஷயமா பேசணும்பா என்று எல்லாரையும் கூப்பிட்டு வைத்து மீனா கிட்ட இருந்து திருடிட்டு போன பணத்தை கண்டுபிடிச்சாச்சு என்று சொன்னதும், யார் எடுத்துட்டு போனாங்க என்று கேட்க, நம்ம அம்மாவோட பிரண்டு தான் என்று சொன்னதும் விஜயா முழிக்கிறார்.

முத்து சொன்ன உண்மை

அண்ணாமலை யார் என்று கேட்க அந்த சிந்தாமணி தான் அப்பா என்று சொன்னதும் டெக்கரேஷன் ஆர்டர் எடுக்கிறேன் ஒரு அம்மா சொல்லுச்சு அதுவா என்று கேட்க, முத்து ஆமாம் மீனாவுக்கு ஆர்டர் கிடைக்கக்கூடாது என்பதற்காகத்தான் இப்படி பண்ணி இருக்காங்க. இவங்க பின்னாடி வேற யாரோ இருக்காங்க என்று சொல்ல, விஜயா திருதிருவென முழித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+