Siragadikka aasai: கைது செய்யப்பட்ட ரோகிணி, ஸ்டேஷனில் சொன்ன வார்த்தை! சிக்கியும் அடங்கல! விஜயாவுக்கு விழுந்த அடி
சென்னை: ஆகஸ்ட் 1, 2025: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடு, பல நாளாகக் குடும்பத்திற்குள் குழப்பங்களை ஏற்படுத்தி வந்த ரோகிணியின் சதியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. முத்துவைக் காப்பாற்ற போலீஸ் ஸ்டேஷன் சென்ற மீனா, சிட்டி மற்றும் அவரது ஆட்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ரோகிணியின் துரோகத்தை வீட்டுக்குள் வந்து அம்பலப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மீனா - ரோகிணியின் மோதல்
இன்றைய எபிசோடில், போலீஸ் ஸ்டேஷனில் சிட்டி, "ரோகிணி சொல்லிதான் இப்படி செஞ்சோம்," என்று உண்மையைக் கூறுகிறார். இதைக்கேட்ட போலீஸ்காரர்கள், முத்துவை வெளியில் வரவைத்துவிட்டு, சிட்டியையும் அவரது ஆட்களையும் சிறைக்குள் அடைக்கின்றனர். பிறகு மீனாவை வீட்டுக்கு அனுப்பி, ரோகிணியுடன் பேசி வரச் சொல்கின்றனர்.
வீட்டிற்கு வந்த மீனா கோபத்துடன் ரோகிணியை அழைத்துப் பேச, குடும்பத்தினர் அனைவரும் கூடிவிடுகின்றனர். அப்போது மீனா, "எல்லா வேலையும் நீங்க பண்ணிட்டு, என் புருஷனை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போகும் போது அமைதியா நிக்கிறீங்க," என்று கோபமாகப் பேசுகிறார். இதற்கு மனோஜ், "என் பொண்டாட்டி என்ன பண்ணா? அவன் பண்ண தப்பை மறைக்கிறதுக்கு என் பொண்டாட்டி மேல பழி போடாத," என்று ரோகிணிக்கு ஆதரவாகப் பேசுகிறார். "வாயை மூடுங்க! அவர் அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டுப் போகும்போது என் மனசுல எவ்வளவு வலியும் பயமும் இருந்தது என்று எனக்குத்தான் தெரியும். அப்போ கூட ஒரு வார்த்தை வாயைத் திறந்து சொல்லல," என்று மீனா ஆவேசமாகப் பேசுகிறார்.
அண்ணாமலையின் கோபம்
மீனா, "தீபன் வீட்ல ஆள வச்சு அடிச்சது என் புருஷன் கிடையாது. அந்தச் சிட்டிதான் அடிச்சிருக்கான். இந்த ரோகிணிதான் ரெடி பண்ணி அடிக்கச் சொல்லி இருக்காங்க," என்று சொல்ல, ரோகிணி, "எதுக்கு மீனா உளறிக்கிட்டு இருக்கீங்க? எனக்கு அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை," என மறுக்கிறார்.
ஆனால், சிறிது நேரத்தில் போலீஸ் வந்து, "ரோகிணி யார்?" என்று கேட்க, மனோஜ், "என்னோட வைஃப் தான்," என்று சொல்கிறார். "இவங்கதான் சிட்டிகிட்ட சொல்லி தீபன் குடும்பத்தை அடிக்கச் சொல்லி இருக்காங்க," என்று போலீஸ் சொல்ல, குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியாகி நிற்கின்றனர். விஜயா கோபமாக, "நான் அடிக்கச் சொன்னேனா?" என்று ரோகிணியிடம் கேட்கிறார்.
விஜயாவின் ஆதங்கம்
அண்ணாமலை, "நீ இந்த வீட்டில் நிறைய தப்பு பண்ணி இருக்க. அதெல்லாம் மன்னிச்சு உன்னை ஏத்துக்கிட்டு இருந்தோம். இப்போ கற்பூரத்தை அணைச்சு சத்தியம் செய்த பிறகும் இது மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கியா?" என்று சத்தம் போட்டுப் பேசுகிறார். ரோகிணி, "நான் அடிக்க சொல்லல, பேசத்தான் சொல்லுவேன்," என்று சமாளிக்க, "நீ எதுக்கு அவன்கிட்ட எல்லாம் பேசிக்கிட்டு இருக்க?" என்று மனோஜ் கேட்கிறார். விஜயா, "உங்களுக்கு எல்லாமே தெரிஞ்சு தான் நடக்குதா?" என்று கேட்க, மனோஜ், "எனக்கு எதுவுமே தெரியாதுமா," என்று மறுக்கிறார். அப்போது மீனா, "இவள் இன்னும் பொய் சொல்லிட்டுதான் இருக்கா," என்று உண்மையை வெளிப்படுத்துகிறார்.
ரோகிணியின் கைது
ரோகிணி, "ஆண்டி என்கிட்ட பத்து லட்ச ரூபாய் பணம் கேட்டாங்க. அது எப்படி என்னால ரெடி பண்ணி கொடுக்க முடியும்? அதனால பேசி சமாதானப்படுத்த முடியுதான்னு பேச சொன்னேன். அவ்வளவுதான்," என்று பொய் சொல்கிறார். அதற்கு அண்ணாமலை, "உன் நியாயமெல்லாம் இருக்கட்டும். முத்துவை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டுப் போகும்போது எதுக்கு வாயை மூடிட்டு இருந்த?" என்று கேட்டவுடன் ரோகிணி அமைதியாக நிற்கிறார்.
போலீஸ்காரர்கள் ரோகிணியை அழைத்துச் செல்ல, "நான் வர மாட்டேன்," என்று அவர் மறுக்கிறார். ஆனாலும் அவர்கள் வலுக்கட்டாயமாக ரோகிணியை அழைத்துச் செல்ல, மனோஜ், "ரோகிணி," என்று கூப்பிட, எல்லோரும் அமைதியாக இருக்கின்றனர். இறுதியாக, ரோகிணியை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
விஜய் டிவி ரசிகர்களுக்கு ஷாக்! பாக்கிய லட்சுமியை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு டாப் சீரியல்!
அதைத்தொடர்ந்து ஸ்டேஷனுக்கு வந்த ரோகிணியிடம் இன்ஸ்பெக்டர் விசாரணை செய்கிறார். அப்போது ரோகிணி வழக்கம் போல நான் தீபன் வீட்டில் போய் அடிக்க சொல்லவே இல்ல என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு சிட்டி சிரித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications