சிறகடிக்க ஆசை: ஸ்ருதி கொண்டு வந்த லெட்டர்.. ஆடி போன ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ்! ஆப்பு வைத்த முத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜனவரி 30 ஆம் தேதிக்கான எபிசோடில் தன்னுடைய திருமண நாளை பிரமாண்டமாக கொண்டாட வேண்டும் என்று முடிவு எடுத்து இருக்கிறார். அதே நேரத்தில் முத்துவால் ரோகிணிக்கு புது பிரச்சனை வருகிறது.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் இன்ஸ்பெக்டர் வீட்டில் மீனா பூவை கொடுத்துவிட்டு முத்துவை கைது செய்தது குறித்து இன்ஸ்பெக்டர் மனைவியிடம் சொல்ல, உடனே அவர் கொஞ்சம் வெயிட் பண்ணு இப்போ சார் வந்திருவாரு நீயே அவர்கிட்ட பேசு என்று சொல்கிறார். மறுபக்கத்தில் ஸ்டேஷனுக்கு சென்று தன்னுடைய காரை போலீஸ் ஆபிசர் தூக்கிட்டு வந்தது குறித்து அங்கிருந்த கான்ஸ்டபிள் கிட்ட முத்து பேசிக் கொண்டிருக்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

கான்ஸ்டபிள் நீ நோ பார்க்கிங்கில் போனது தப்பு தானே, போலீசாரங்களை அடிக்க கை ஓங்குனா என்ன நடக்கும்னு இப்பவாது உனக்கு புரியுதா? இனி உனக்கு பிரச்சனை மேல பிரச்சனை தான் வந்துகிட்டு இருக்கும் என்று முத்துவுக்கு மேலும் பயம் காட்டுகிறார். அந்த நேரத்தில் இன்ஸ்பெக்டர் அங்கு வருகிறார். அவர் முத்துவிடம் விசாரித்துவிட்டு காரை தூக்கிட்டு வந்த போலீஸ் ஆபீஸாரை திட்டுகிறார்.

நோ பார்க்கிங் போனால் ஃபைன் போட வேண்டியதுதானே எதற்காக காரை தூக்கிட்டு வந்த? அவன் வேலைக்கு போக வேண்டாமா? அவனுக்கு வருமானம் கிடைக்க வேண்டாமா? என்று திட்டிவிட்டு, முத்துவிடம் இதுதான் உனக்கு கடைசி. ஒவ்வொரு முறையும் நீ ஏதாவது பிரச்சனையில் மாட்டி உன் பொண்டாட்டி என்கிட்ட வந்து பேசுறாங்க. அவங்க சொன்னதனால் தான் இப்போ உனக்கு காரை வெளியே எடுக்க ஹெல்ப் பண்ணுனேன்.

television siragadikka aasai serial vijay tv

இனி என்கிட்ட வந்து நிற்க கூடாது என்று சொல்லி வார்ன் பண்ணி வெளியே அனுப்புகிறார். மறுபக்கத்தில் ரோகிணி தூங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது கையில் குச்சியுடன் மனோஜ் நின்று கொண்டிருக்கிறார். அவரிடம் விஜயா ஏண்டா இப்படி நிக்குற என்று கேக்க, அதற்கு சாமியாரு சொன்னது போல ரோகிணியே அடிக்கணும் என்ன பண்றதுனு தெரியல என்று சொல்ல,

விஜயா, உன் பொண்டாட்டி தான நீ தான் அடிச்சு எழுப்பவேண்டும் என்று சொல்ல, மனோஜ் ரோகிணியின் காலில் அடிக்கிறார். அதனால் ரோகிணி வலியில் துடிக்கிறார். பிறகு ரோகிணி நீ இப்படி அடிச்சா நான் செத்து போயிருவேன் என்று அழுது கொண்டிருக்கிறார். அதை பார்த்து மனோஜ் ஃபீல் பண்ணிக் கொண்டிருக்க அதற்கு விஜயா இப்ப அழுவது ரோகிணி கிடையாது அவருடைய அப்பா.

television siragadikka aasai serial vijay tv

நீ பாவம் பாக்காம பரிகாரம் செஞ்சா தான் ரோகிணி திரும்பவும் நமக்கு கிடைப்பா. இல்லன்னா நீ தான் தூக்கத்தில் அவளிடம் மிதி வாங்கணும் என்று பயம் காட்டுகிறார். முத்து மீனாவுக்கு போன் பண்ணி நன்றி சொல்கிறார். பிறகு வீட்டிற்கு வந்த முத்துவும் மீனாவும் ரொமான்ஸ் ஆக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்தது ரவியும் ஸ்ருதியும் தங்களுடைய திருமண நாளை பெருசா கொண்டாட போவதாக இன்விடேஷன் உடன் வந்து வீட்டில் எல்லோரையும் கூப்பிடுகின்றனர். அப்போது இன்விடேஷனில் விஜயா திருமண பங்க்ஷனில் டான்ஸ் ஆடுவதாக போட்டிருக்கிறது. அதை பார்த்ததும் விஜயா ரொம்பவும் சந்தோஷப்படுகிறார்.

television siragadikka aasai serial vijay tv

அதுபோல கார் சர்வீஸ் முத்து பார்ப்பதாகவும், மீனா பூ டெக்கரேஷன் செய்வதாகவும் போடப்பட்டிருக்கிறது. அப்போது முத்து எங்க எல்லார் பெயரையும் போட்ட சரி ஆனா இந்த மனோஜ் என்ன செய்யப் போறான்? அவன் பெயரை எதுக்கு போட்டா? என்று கேட்க, ரோகிணியும் மனோஜும் அதிர்ச்சியில் கோபப்படுகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+