சிறகடிக்க ஆசை: விஜயா வீட்டிற்கு வந்த மணி.. முத்துவுக்கு வந்த சந்தேகம்.. சீதா காதலுக்காக சத்யா செய்த செயல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மே 30ஆம் தேதிக்கான எபிசோடில் சீதா காதலுக்காக சத்யா முக்கிய முடிவெடுக்கிறார். அதே நேரத்தில் விஜயாவின் வீட்டிற்கு கறிக்கடைக்காரர் மீண்டும் வந்திருக்கிறார். இதனால் ரோகிணிக்கு மீண்டும் பிரச்சனை வருகிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் சீதா அருணிடம் எங்க மாமாவுடைய விருப்பம் இல்லாமல் இந்த கல்யாணம் நடக்காது, எங்க அக்காவும் மாமாவும் சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்காங்க உங்களுடைய பிடிவாதத்தால அவங்க பிரியக்கூடாது நீங்க என்ன மறந்துடுங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். அருண் சீதாவிடம் நீ என்னை மறந்திருக்க முடியுமா? என்று கேட்க, சீதா எதுவும் பேசாமல் அழுது கொண்டே வெளியே வருகிறார்.

சீதா சொன்ன விஷயம்
அப்போது அருணின் அம்மா வந்து சீதாவை கூப்பிட அதற்கு எதுவும் பேசாமல் போய்விடுகிறார். மறுபக்கத்தில் முத்து சீதாவுக்காக பார்த்த மாப்பிள்ளை வேலை செய்யும் ஆபீசுக்கு வந்து அவரைப் பற்றி விசாரிக்கிறார். அப்போது ஒருவர் அவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கிறது என்று சொல்கிறார். இன்னொருவர் அவர் நிறைய பொய் சொல்வார் என்று சொல்கிறார். அதுபோல இன்னொருவர் குடிப்பார் என்று சொல்கிறார். இப்படியாக மாப்பிள்ளை பற்றி எல்லாமே தவறாக தெரிய இந்த மாப்பிள்ளை சீதாவுக்கு செட்டாக மாட்டார் என்று முத்து அந்த ஆபீஸில் இருந்து கிளம்பி விடுகிறார்.
வீட்டுக்கு வந்த மணி
அடுத்ததாக முத்து மீனாவிடம் தான் மாப்பிள்ளை பற்றி விசாரித்ததாக வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கறிக்கடைக்காரர் மணி முத்து வீட்டு வாசலில் வந்து நிற்க அவரைப் பார்த்ததும் முத்து மலேசியா மாமா வந்திருக்காங்க எல்லாரும் வாங்க என்று கத்தி கூப்பிடுகிறார். வீட்டில் இருக்கும் எல்லோரும் வந்து அவரைப் பார்த்து எதற்காக இவர் வந்திருக்கிறார் என்று கேட்கின்றனர்.
கோபப்பட்ட விஜயா
அப்போது அண்ணாமலை மணியை உள்ளே அழைத்து உட்கார வைக்கிறார். ஆனால் விஜயா அவரை பேச விடாமல் இது என்ன குடும்பமா? இல்ல நாடக கம்பெனியா? இந்த மானங்கெட்டவ தான் நடிக்க சொன்னா உங்க வயசுக்கு அவளுக்கு நீங்க அட்வைஸ் பண்ணி இருக்கணும் என்று மணியை திட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு அண்ணாமலை விஜயாவை திட்டிவிட்டு எதற்காக வந்தார் என்று மனைவியிடம் விசாரிக்கிறார்.
வருத்தத்தில் மணி
அப்போது மணி உங்க நண்பன் பரசு விஷயமா பேச தான் வந்தேன். நான் இந்த வீட்டில் செஞ்ச வேலை எல்லாம் அவருக்கு தெரிஞ்சிருச்சதால என் மேல இருந்த மரியாதை எல்லாம் போயிடுச்சு. என் தங்கச்சி, மாப்பிள்ளை எல்லாரும் என்னை தப்பா நினைச்சுட்டாங்க. உங்க குடும்பத்தில் நான் மன்னிப்பு கேட்டதா நீங்க அவங்க கிட்ட சொன்னாதான் அவங்க குடும்பத்தில் பிரச்சனை இல்லாம இருக்கும் என்று மணி சொல்கிறார்.
முத்து கேட்ட கேள்வி
அண்ணாமலை யோசித்து விட்டு சரி இதுக்கு மேல எந்த தப்பும் பண்ணாதீங்க என்று சொல்கிறார். எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட்டு மணி கிளம்பும் நேரத்தில் அவரை நிற்க வைத்து உங்களுக்கு என் மேல எதுவும் கோபம் இருக்கா? ஏன்னா நான் தானே உங்களை மண்டபத்தில் இருந்து கூட்டிட்டு வந்து உண்மையெல்லாம் சொல்ல வச்சேன். அதனால நீங்க என் பிரேக் வயரை ஏதாவது பண்ணுனீங்களா என்று கேட்கிறார்.
மணி சொன்ன விஷயம்
அதற்கு மணி நான் அப்படியெல்லாம் பண்ண மாட்டேன் தம்பி. இந்த குடும்பம் நல்லா இருக்கணும் என்பதற்காத்தான் நான் ரோகிணிக்கு உதவி செய்தேன். நான் தப்பான ஆளு கிடையாது, உனக்கும் மீனாவுக்கும் எந்த கெடுதலும் நடக்காது ஏன்னா நீங்க ரெண்டு பேருமே ரொம்ப நல்லவங்க. இந்த குடும்பத்துக்காக நிறைய யோசிக்கிறீங்க என்று சொல்லிவிட்டு மணி கிளம்புகிறார். மறுபக்கத்தில் சீதா வீட்டிற்கு சோகமாக வர சீதாவின் அம்மா என்ன நடந்தது என்று விசாரிக்கிறார்.
சத்யா எடுக்கும் முடிவு
அதற்கு சீதா இனி அருண் என்னிடம் பேச மாட்டார். அவர் என்னை நினைக்க வேண்டாம் என்று நான் சொல்லிட்டு வந்துட்டேன் என்று சொல்லிட்டு கதவை பூட்டி கொள்கிறார். இதனால் சீதாவின் காதலுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று சத்தியா போனை எடுத்து யாருக்கோ போன் செய்கிறார். மறுபக்கத்தில் முத்து மாப்பிள்ளையை விசாரிக்க போன விஷயத்தைப் பற்றி செல்வத்திடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications