சிறகடிக்க ஆசை: ஸ்ருதி எடுத்த விபரீத முடிவு.. முத்து- மீனா கேட்ட கேள்வி! விஜயா செய்த எதிர்பாராத செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 பிப்ரவரி மூன்றாம் தேதிக்கான எபிசோடில், ரவியை விவாகரத்து செய்வதற்காக ஸ்ருதி முடிவெடுத்து இருக்கிறார். அதே நேரத்தில் ஸ்ருதியை காணாமல் மண்டபத்தில் பெரிய பிரச்சனையும் வெடிக்கிறது. அதுபோல விஜயா செய்த செயலை பார்த்து எல்லோரும் இன்ப அதிர்ச்சி அடைகின்றனர்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கல்யாண நாள் கொண்டாட்டத்திற்காக அனைவரும் மண்டபத்திற்கு வருகின்றனர். அப்போது ரவி எல்லோரையும் வரவேற்றுக் கொண்டிருக்கிறார். அங்கு வந்த செல்வம் நீ சோகமா இருக்காத முத்துவும் மீனாவும் ஸ்ருதியை கூட்டிட்டு வந்துருவாங்க. எனக்கு முத்து எல்லா விஷயத்தையும் சொல்லிட்டான் என்று சொன்னதும் ரவி எனக்கு பயமா இருக்கு அண்ணே என்ன நடக்க போகுதுன்னு தெரியல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு ரவியை செல்வம் சமாதானப்படுத்துகிறார்.

siragadikka aasai serial vijay tv

அடுத்ததாக வந்தவங்க எல்லோரும் ஸ்ருதி வரலையா என்று கேட்க, ரவி விஜயாவிடம் நீங்க டான்ஸ் ப்ரோக்ராம் ஸ்டார்ட் பண்ணுங்க அவ வந்துருவா என்று சமாளிக்கிறார். விஜயா அவர்களின் பரதநாட்டிய கிளாசில் இருக்கும் பசங்களை ஆட சொல்கிறார். அவர்கள் பார்த்து எல்லாரும் கைதட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்ததாக ரவி விஜயாவை டான்ஸ் ஆட சொல்கிறார். விஜயா நான் சுருதி வந்தால் தான் டான்ஸ் ஆடுவேன் என்று சொல்ல, அவ வரதுக்கு லேட்டாகும் நீங்க டான்ஸ் ஆடுங்க என்று விஜயாவை டான்ஸ் ஆட வைக்கிறார். மின்சார கண்ணா பாட்டுக்கு விஜயா டான்ஸ் ஆடிக்கொண்டிருப்பதை பார்த்து ஸ்ருதியின் அப்பா இந்த பொம்பளைக்கு இந்த வயசுல இதெல்லாம் தேவையா என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.

அப்போது பக்கத்தில் இருந்து அண்ணாமலையிடம் உங்க வைஃப் கிட்ட இருக்கிற திறமையை வச்சு சம்பாதிச்சு பெரிய ஆளா ஆகி இருக்கலாம் என்று சொல்ல, அதற்கு அண்ணாமலை அவளுக்கு இருக்கிற திறமையை வச்சு காசு சம்பாதிக்கணும்னு எனக்கு அவசியம் கிடையாது. நான் நேர்மையா சம்பாதிச்ச காசுல தான் என் குடும்பத்தை பார்த்துக்கொண்டேன் என்று பதிலடி கொடுக்கிறார்.

மறுபக்கத்தில் முத்துவும் மீனாவும் ஸ்ருதி டப்பிங் பேசும் ஸ்டுடியோவில் வந்து விசாரிக்க, அவர் லீவ் கேட்டு விட்டு சென்று விட்டதாக சொல்கிறார்கள். அதோடு அவர்கள் இன்னும் ஒரு ஸ்டுடியோவிலும் பேசுவாங்க என்று சொன்னதும் முத்துவும் மீனாவும் அந்த ஸ்டுடியோக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள்.

siragadikka aasai serial vijay tv

அப்போது ரவி போன் பண்ணி மீனா பற்றி ஏதாவது தெரிந்ததா என்று விசாரிக்கிறார். அதற்கு முத்து நடந்ததை சொன்னதும் ரவி மேலும் பதட்டப்படுகிறார். அப்போது மீனா நீங்க அங்க சமாளிங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் விஜயா டான்ஸ் ஆடி முடித்ததும் ரவி என்னமா இவ்வளவு சீக்கிரமா டான்ஸ் ஆடி முடிச்சிட்டீங்க? இன்னும் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுங்க என்று சொல்கிறார்.

அப்போது ஸ்ருதியின் அம்மா பதட்டமாக இருப்பதை பார்த்து அவங்களையும் டான்ஸ் ஆட கூட்டிட்டு போங்க என்று சொன்னதும் ஸ்ருதியின் அம்மாவை வற்புறுத்தி விஜயா டான்ஸ் ஆட கூட்டிட்டு போகிறார். விஜயா, பார்வதி மற்றும் ஸ்ருதியின் அம்மா மூன்று பேரும் டான்ஸ் ஆடி கொண்டிருக்கும் போது அண்ணாமலை ஸ்ருதியின் அப்பாவிடம் உங்க மனைவியும் நல்லா டான்ஸ் ஆடுறாங்க அவங்க திறமையை வச்சி நீங்க நல்லா சம்பாதிக்கலாம் என்று சொல்கிறார்.

இதனால் அவர் மேலும் கோபத்தில் இருக்கிறார். அதைத் தொடர்ந்து விஜயா பார்வதி ஸ்ருதியின் அம்மா மூன்று பேரும் டயர்ட் ஆகி நிறுத்தி விடுகிறார்கள். அப்போது அண்ணாமலையை ரவி பேச சொல்கிறார். அடுத்ததாக அங்கிருந்த எல்லோரும் மாஸ்டர் ஒன்ஸ்மோர் டான்ஸ் ஆடுங்க என்று சொல்ல விஜயாவும் பார்வதியும் மீண்டும் டான்ஸ் ஆடுகிறார்கள்.

அந்த நேரத்தில் பொறுமையை இழந்த ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் ரவியை கூப்பிட்டு உனக்கும் ஸ்ருதிக்கும் எதாவது பிரச்சனையா என்று விசாரிக்க, ரவி அப்படி எல்லாம் இல்லை என்று சொல்கிறார். ஆனால் ஸ்ருதியின் அம்மா எங்களுக்கு ஸ்ருதி பற்றி தெரியும். அவளுக்கு ஏதாவது பிடிக்கலைன்னா இப்படித்தான் பண்ணுவா. ஏற்கனவே அவளுக்கு ஒருமுறை பிறந்தநாளன்று அவங்க அப்பா திட்டிட்டாருன்னு பங்க்ஷன் முடியற வரைக்கும் வீட்டுக்கு வராமல் எங்கேயோ போயிட்டா.

அது போல தான் இப்பவும் பண்ணுன மாதிரி இருக்கு என்று கேட்க, அதற்கு ரவி அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். இதனால் ஸ்ருதியின் அப்பாவும் அம்மாவும் இங்க நடக்கிறதை எல்லாம் பார்த்தா ஏதோ தப்பா இருக்குது. ஏதாவது பிரச்சனை மட்டும் நடந்திருக்குன்னு தெரியட்டும் அப்புறம் இருக்கு என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

siragadikka aasai serial vijay tv

மறுபக்கத்தில் முத்து மீனாவும் ஸ்ருதி பேச போகும் இரண்டாவது டப்பிங் ஆபீஸுக்கு போகின்றனர். அங்கு இருந்த ஒரு பெண் ஸ்ருதி வந்து சின்ன கிளிப்ஸ் பேசி விட்டு போயிட்டாங்க. அவங்க வக்கீல் நம்பர் கேட்டாங்க என்று சொன்னதும் அவருடைய அட்ரஸை வாங்கிக்கொண்டு முத்துவும் மீனாவும் அங்கு போகின்றனர்.

வக்கீல் ஆபீஸில் ஸ்ருதி கோபமாக அமர்ந்திருக்கிறார். அப்போது அவரிடம் எதற்காக இங்கு வந்தீங்க ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க என்று முத்துவும் மீனாவும் ஸ்ருதியிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஸ்ருதி நான் ரவியை விவாகரத்து செய்ய போறேன் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+