சிறகடிக்க ஆசை: ரோகிணி போட்ட பிளான்.. கதறும் குடும்பத்தினர்! பாயிண்டை பிடித்த முத்து.. சிக்கிய விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025, ஜனவரி 3ஆம் தேதி எபிசோடில் அண்ணாமலை குடும்பத்தினரை புது பிளான் போட்டு ரோகிணி ஏமாற்றுகிறார். அதே நேரத்தில் விஜயா சொன்ன வார்த்தையால் முத்து முக்கிய முடிவு எடுக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயாவிடம் அண்ணாமலை ரோகிணி மட்டும் தப்பு பண்ணல, மனோஜ் சேர்ந்து தான் தப்பு பண்ணி இருக்கிறான். உன் மகன் ஒன்னும் சின்ன குழந்தை கிடையாது. ஆனால் நீ ரோகினிக்கு மட்டும் தண்டனை கொடுக்கிறது சரியா? உன்னுடைய பையன் கூட தான் உன்கிட்ட உண்மையை மறைச்சான். நீ ஏன் அவனை எதுவும் சொல்லல என்று கேட்க, அதற்கு விஜயா ரோகிணி தான் சொல்ல வேணாம்னு சொல்லி இருப்பா என்று மீண்டும் மகனுக்காக சப்போர்ட் செய்கிறார்.

அதற்கு அண்ணாமலை மனோஜ்க்காக தானே அவளும் செஞ்சா சரி விடு. ஆனா அவங்க ரெண்டு பேரையும் பிரிச்சு வச்சிருக்கறது என்ன நியாயம்? என்று கேட்கிறார். அதோடு இப்படி நீ பிரிச்சி வைக்கிறதுனால வாழ்க்கையே பிடிக்காமல் ரோகிணி மலேசியா போயிட்டா என்ன பண்ணுவ? என்று கேட்க விஜயா அதிர்ச்சி அடைகிறார்.
மறுபக்கத்தில் ரோகினி வித்யா வீட்டில் உட்கார்ந்து அழுது கொண்டே இருக்கிறார். வித்யா அவருக்கு ஆறுதல் சொல்ல, அதற்கு ரோகிணி ஆன்ட்டி இப்படி கோபப்படுவாங்கன்னு நான் நினைக்கல. பார்லர் விஷயம் தெரிஞ்ச போது கூட திட்டுன மாதிரி இப்பவும் திட்டுவாங்கன்னு தான் நினைச்சேன்.

ஆனால் இதுக்கெல்லாம் காரணம் முத்துதான் என்று முத்துவை திட்டிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் அண்ணாமலை விஜயாவிடம் ரோகிணிக்கு சப்போர்ட்டாக பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் மனோஜ் வர மனோஜிடம் ரோகிணி எங்கே என்று விஜயா கேட்டதும் அவ கடைக்கு வரல, எங்க போனான்னு தெரியாது என்று மனோஜ் சொல்கிறார்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த முத்து மீனா விடம் நான் உனக்கு நல்ல புருஷன். யார் பேச்சை கேட்டு உனக்கு போன் பண்ணி விசாரிக்காமல் என்னால இருக்க முடியாது மீனா என்று நக்கல் செய்து கொண்டிருக்கிறார். அப்போது விஜய்யா மனோஜிடம் ரோகிணிக்கு போன் பண்ணி பாரு என்று சொல்ல, ரோகிணிக்கு போன் பண்ணும் போது ரோகிணி போனை எடுக்காமல் இருக்கிறார்.

அடுத்ததாக வித்யாவுக்கு போன் பண்ணும் படி முத்து மீனாவிடம் ஜாடையாக சொல்ல, மனோஜ் வித்யாவுக்கு போன் செய்கிறார். அவரையும் ரோகிணி போனை எடுக்க வேண்டாம் என்று ரோகிணி சொல்லி விடுகிறார். பிறகு வித்யாவுக்கு போன் பண்ணி கொண்டே இருக்க, வித்யாவை போனை எடு ஆனால் இங்கே வரலைன்னு சொல்லு என்று ரோகிணி சொன்னதும் அதேபோல வித்யா சொல்கிறார்.
அதோடு அம்மா வீட்டுக்கு வர சொன்னாங்க இப்போ அம்மா போன் பண்ண சொன்னாங்க அதனால நான் போன் பண்றேன்னு மனோஜ் சொல்ல, அதை வைத்து வித்யா ரோகினியை குழப்புகிறார். பிறகு வேறு வழி இல்லாமல் ரோகிணி மீண்டும் வீட்டிற்கு வருகிறார். அந்த நேரத்தில் ரோகிணி எங்க இருப்பாங்க என்று எல்லோரும் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

பிறகு ரோகிணியை பார்த்ததும் ஸ்ருதி வாங்க நீங்க வீட்டுக்கு வராமல் வேறு எங்கேயோ போயிட்டீங்க என்று நான் நினைச்சேன் என்று சொல்கிறார். பிறகு ரோகிணி விஜயாவிடம் மன்னிப்பு கேட்கிறார். அதற்கு விஜயா இனிமே இது போல நடக்கக்கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்க, முத்து எவ்வளவு பெரிய உண்மையை மறைச்சிருக்காங்க ஆனா இவங்களை இப்படி லேசுல விட முடியாது என்று மனோஜ் பெயரில் இருக்கும் ஷோரூம் உரிமையை அப்பா பெயரில் மாற்றம் செய்ய சொல்லிக் கொண்டிருக்கிறார். இதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications