சிறகடிக்க ஆசை: மீண்டும் பிரச்சனையில் சிக்கும் மனோஜ்- ரோகினி! விஜயாவுக்கு விழுந்த அடி! அண்ணாமலை கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பிரபல சீரியல் 'சிறகடிக்க ஆசை'யின் இன்றைய எபிசோடில், ரோகிணியால் ஏற்பட்ட பிரச்சனையால் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் விஜயாவின் புது திட்டம் ஆகியவற்றை மையமாக வைத்து நகர்கிறது. ரோகிணி மீண்டும் வீட்டிற்கு வந்த நிலையில், குடும்பத்தினர் அவளால் ஏற்பட்ட அவமானம் குறித்துப் பேசுகின்றனர்.

Siragadikka aasai serial vijay tv

ரோகிணியால் ஏற்பட்ட குழப்பம்

ரோகிணி வீட்டிற்கு வந்ததும், இந்தப் பிரச்சனை தொடங்கியதற்கு விஜயா தான் காரணம் என்கிறார் முத்து. அதற்கு விஜயா, "நான் என்ன செய்தேன்?" என்று கேட்க, "நான் இவள் மேல் பாசமாக இருந்தேன்," என்று முத்து சொல்கிறார். அதற்கு விஜயா, "அது மலேசிய மருமகளுக்குக் கிடைத்த மரியாதை. பணம் இல்லை என்று தெரிந்ததும் பாசமும் போச்சு," என்று பதிலளிக்கிறார்.

மீனா டான்ஸ் கிளாஸ் நடத்தியபோது நடந்த விவாகரத்து குறித்து அண்ணாமலை, "அப்போ நீ கண்டிச்சு இருக்கலாம். இல்லை வராதீங்கன்னு சொல்லி இருக்கலாம்," என்று கூறுகிறார். ரவியும், "நீங்க அப்போ சொல்லி இருந்தா இந்தப் பிரச்சனையே இல்லை," என்கிறார். இதைக் கேட்ட முத்து, "டான்ஸ் கிளாஸ் நடத்தினது இவங்க. பணம் ஐடியா கொடுத்தது அந்த ஓடுகாலி. ஆள் வச்சு அடிச்சது இந்த பார்லர் அம்மா. ஆனால் ஜெயிலுக்குப் போனது நானு. என் பொண்டாட்டி கடைசியில் என்னை வெளியில் எடுக்க அலைய வேண்டி இருந்தது," என்று கோபத்துடன் பேசுகிறார். விஜயா, "எனக்குத் தெரிந்த கலையை நான் சொல்லித் தர நினைச்சது தப்பா?" என்று கேட்க, "இருந்தாலும் நீ கவனமாக இருந்திருக்கணும்," என்று அண்ணாமலை கூறுகிறார்.

மனோஜின் புது முயற்சி

ரோகிணியிடம் "இனிமேல் இப்படித் தப்பு செய்யாத," என்று அண்ணாமலை சொல்லிவிட்டுச் செல்கிறார். இதனால் கடுப்பான விஜயா, இரவு முழுவதும் தூங்காமல் உட்கார்ந்திருக்கிறார். என்ன ஆனது என்று அண்ணாமலை கேட்க, "நீங்க பேசினதை ஜீரணிக்க முடியலை. அவ அடியாளை வச்சு மிரட்டினதுக்கு எனக்கு என்ன சம்பந்தம்? நான் ஏன் இங்கே இருக்கணும்? எங்கயாவது போறேன்," என்கிறார். அதற்கு அண்ணாமலை, "நீ உன் பசங்களை உன் குடும்பமா நினைத்தால், பேசினது தப்பாகத் தெரியாது. எனக்கு நெஞ்சு வலி வர வச்சிடாதே. பெருமைப்படுற மாதிரி ஏதாவது செய்," என்று கூறுகிறார்.

மறுநாள் காலை, மனோஜ் ஷோரூமில் இன்ஸ்டால்மெண்ட் திட்டம் ஒன்றை தொடங்க, அதற்கு அமோக வரவேற்பு கிடைத்து, 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் வருகிறது. ராஜா மற்றும் ராணி, "இன்னும் நிறைய செய்யலாம்," என்று மனோஜை ஊக்கப்படுத்துகின்றனர்.

டாக்டர் பட்டம் கனவில் விஜயா

பின்னர், விஜயா மற்றும் பார்வதி கோயிலுக்குச் செல்கின்றனர். அப்போது விஜயா, "அடுத்த என்ன கிளாஸை தொடங்கலாம்," என்று பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது பார்வதியின் தோழி, "சமூக சேவை செய்பவர்களுக்கு டாக்டர் பட்டம் வாங்கித் தருகிறேன்," என்று கூறுகிறார். இதைக்கேட்டு விஜயா, தானும் சமூக சேவை செய்வதாகப் பில்டப் செய்து பேசுகிறார். மீனாவை தானே கட்டி வைத்தது போலவும், கிரிஷை படிக்க வைப்பது போலவும் பெருமையாகச் சொல்கிறார். அதற்கு ஆதாரங்கள் வேண்டும் எனத் தோழி கேட்க, "இனிமே என்ன செய்தாலும் ஆதாரம் வச்சுக்கோங்க," என்று சொல்லிவிட்டுச் செல்கிறார். விஜயா இனி என்னென்ன சதி வேலைகள் செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+