சிறகடிக்க ஆசை: முத்துவின் ஈகோவால் பரிதாப நிலையில் சீதா.. லெப்ட் ரைட் வாங்கிய விஜயா.. மீனா உடைத்த உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூன் 5-ம் தேதிக்கான எபிசோடில் சீதா மயக்கம் போட்டு விழுந்துவிட, அதனால் முத்துவும் அருணும் மருத்துவமனைக்கு வருகின்றனர். அப்போது இருவரும் மாறி மாறி மீண்டும் பிரச்சனையில் ஈடுபடுகின்றனர். அதே நேரத்தில் முத்துவின் நடவடிக்கை மீது விஜயாவிற்கு சந்தேகம் வருகிறது.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து எதற்காக குடித்துவிட்டு வந்தான் என்று அண்ணாமலை கேட்டதும் சீதா, அருண் காதல் பிரச்சனை பற்றி மீனா சொல்கிறார். இதனால் அண்ணாமலை சீதா படிச்ச பொண்ணு அதனால நல்ல முடிவுதான் எடுத்திருப்பா. ஆனா முத்து ஒருத்தங்கள பிடிக்கலன்னா இப்படித்தான் பண்ணுவான். நான் அவன்கிட்ட பேசுறேன் என்று சொல்ல, அதற்கு மீனா வேண்டாம் நீங்க பேசுனா நான் சொல்லித்தான் நீங்க பேசுறீங்கன்னு அவர் என் மேல கோபப்படுவாரு. அதனால நானே அவரிடம் பக்குவமா பேசுறேன் என்று சொல்லி விடுகிறார்.

கிண்டல் செய்த முத்து
பிறகு அண்ணாமலை போனதும் விஜயா வந்து எதற்காக முத்து நேற்று குடிச்சிட்டு வந்து பிரச்சனை செய்தான்? உங்களுக்குள் என்ன பிரச்சனை? என்று விசாரிக்க அதற்கு மீனா எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் முத்து வருகிறார். முத்துவை பார்த்ததும் என்னடா நடக்குது? என்று விஜயா கேட்க, இங்கே நான் தான் நடக்கிறேன் எனக்கு வழக்கம் போல முத்து கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்.
பரிதாப நிலையில் மனோஜ்
அப்போது விஜயா கோபப்பட்டு திட்டிக் கொண்டிருக்கும் போது ரோகிணியும், மனோஜும் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது மனோஜ் வாயில் கட்டு போட்டு இருக்கிறது. இதை பார்த்து என்னாச்சுடா என்று விஜயா விசாரிக்க, அதற்கு ரோகிணி அவர் கீழே விழுந்துட்டேன் அதனால பட்டுவிட்டது என்று சொன்னாரு. அதனால்தான் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிட்டு வரேன் என்று சொல்கிறார். உடனே விஜயா நீ என்கிட்ட சொல்லி இருக்கலாமே என்று மனோஜிடம் கேட்க, அதற்கு மனோஜ் வாய் பேச முடியாததால் சைகையில் பேசுகிறார்.
ரோகிணி செய்த செயல்
இதை சாதகமாக்கி கொண்ட ரோகிணி நான் இரவு கீழே விழுந்தேன், அந்த நேரத்தில் உங்களை வந்து எழுப்ப முடியுமா? அதான் எனக்கு ரோகிணி இருக்காளே.. அதனால அவளை எழுப்பினேன் என்று சொன்னதாக சொல்கிறார். அதைக் கேட்டு விஜயா கோபப்பட அதற்கு மனோஜ் பதில் சொல்ல முடியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் சீதா படுத்து இருக்கும்போது சீதாவின் அம்மா வந்து சாப்பிட சொல்லி கூப்பிடுகிறார்.
ஹாஸ்பிடலில் சீதா
ஆனால் சீதா அசையாமல் இருக்க, பிறகு பார்க்கும்போது அவருக்கு காய்ச்சல் அதிகமாக இருக்கிறது. மயக்கத்தில் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது. உடனே சத்யாவும் அம்மாவும் சேர்ந்து ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கொண்டு போகிறார்கள். இவர்கள் ஆட்டோவில் பதட்டமாக போவதை அருண் பார்த்து ஆட்டோ பின்னாடியே போய்க்கொண்டிருக்கிறார். பிறகு ஹாஸ்பிடலில் சீதாவை சேர்த்ததும் சீதாவின் அம்மா மீனாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல அங்கு முத்துவும் சீதாவும் ஹாஸ்பிடலுக்கு வருகின்றனர்.
மீண்டும் சண்டை
அதே நேரத்தில் மருந்து வாங்கிக்கொண்டு உள்ளே வரும் அருணை முத்து பார்த்ததும் இருவரும் அதிர்ச்சியில் நிற்கின்றனர். அப்போது முத்து வழக்கம் போல அருணிடம் வாதம் செய்கிறார். இருவரும் மீண்டும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications