சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து கேட்ட ஒரே கேள்வி! ஆடிப்போன குடும்பம்.. கடைசியில் நடந்த சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை ஏழாம் தேதிக்கான எபிசோடில் சீதா மற்றும் அருணுக்கு ஏற்கனவே ரிஜிஸ்டர் மேரேஜ் கல்யாணம் நடந்து விட்டது என்ற உண்மை முத்துவிற்கு தெரிய வந்திருக்கிறது. அதே நேரத்தில் மீனாவிடம் முத்து சொன்ன வார்த்தையை கேட்டு மீனா அதிர்ச்சியில் இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜ் வடைக்கு சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது ரவி யாரு என்று பார்ப்பதற்காக வருகிறார். முத்துவிடம் வந்து யார் வடை கேட்டு சண்டை போடுவது என்று கேட்க, இவன்தான் என்று முத்து சொன்னதும் ரவி இரண்டு வடை கொண்டு வந்து வைக்கிறார். அண்ணனுக்கு அவ்வளவு தானடா? என்று கேட்க, எல்லாருக்கும் வரணும் அவ்வளவுதான் கிடைக்காது என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

சீதா ஒரு பக்கம் கல்யாணத்துக்கு தயாராகி கொண்டிருக்கும்போது அருண் ஒரு பக்கம் பிரண்ட்ஸுடன் பேசிக் கொண்டிருக்கிறார். கொஞ்ச நேரத்தில் மாப்பிள்ளை கூட்டிட்டு வர சொல்லி ஐயர் சொன்னதும் அருணுக்கு அவருடைய அம்மா மாலை போட்டு அனுப்பி வைக்கிறார். அருணுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து வைத்த போலீஸும் அங்கு வருகிறார். அவர் தன்னுடைய மனைவியிடம் இது அருணுக்கு இரண்டாவது கல்யாணம் என்று சொல்ல, அதற்கு அவருடைய மனைவி அதிர்ச்சியாகிறார். விஷயத்தை உனக்கு பிறகு சொல்றேன் என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பி விடுகிறார்.

உடனே போலீஸ் ஆபிஸர் மனைவி பக்கத்தில் இருப்பவரிடம் சொல்ல இந்த விஷயம் மண்டபம் முழுக்க பரவி விடுகிறது. அப்போது பூக்கட்டும் பிரண்டு ஒருவர் மீனாவிடம் வந்து இந்த தகவலை சொல்கிறார். அதற்கு மீனா ஆமா இது இரண்டாவது கல்யாணம்தான் ஆனால் முதல் கல்யாணமும் சீதாவோடு தான் நடந்தது. அவர்களுக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வெச்சாச்சு. முதலில் என் வீட்டுக்காரர் சம்மதிக்காததால் இப்படி செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது என்று மீனா சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு அந்த பெண் மீனா விடம், அண்ணா தான் கோவக்காரர் ஆச்சே உண்மையை சொல்லி இருக்கலாம் என்று சொல்ல, அதற்கான நேரம் வரல என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது மண்டபம் முழுக்க இந்த பேச்சு தான் போய்கிட்டு இருக்கிறது. அண்ணனுக்கு தெரிவதற்கு முன்னாடி கல்யாணத்தை நடத்தி வைக்கணும் என்று சொல்லிவிட்டு போகிறார். அந்த நேரத்தில் முத்து வந்து மீனாவை கூப்பிட, முத்துவுக்கு உண்மை தெரிந்து விட்டதோ என்று மீனா பயத்தில் இருககிறார்.

அந்த அருண் என்ன ஜெயிச்சுட்டதா கெத்தா இருக்கிறான். அவன் அப்படி நினைச்சா நினைச்சுட்டு போகட்டும். ஆனா எனக்கு சீதாவோட சந்தோசம் தான் முக்கியம். அதுவும் இல்லாம அவன் போலீஸ்காரன் நான் சாதாரண டிரைவர். ஆனால் என்னுடைய விருப்பத்திற்காக ஒரு குடும்பத்தில் இருக்கிறவங்க காத்துட்டு இருக்காங்க. சீதை என் முடிவுக்காக தான் காத்துக்கொண்டிருந்தா அதனால நான் அவன் ஜெயிச்சுட்டதா, நெனச்சிட்டு இருக்கட்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சந்திரா வந்து மீனாவை அழைக்க முத்து நான் வரவங்களை போய் பார்க்கிறேன் என்று கிளம்புகிறார்.

அப்பொழுது முத்து மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருக்கும் போது அங்கு ரெண்டு பேரும் மாப்பிள்ளைக்கு இது இரண்டாவது கல்யாணமாம் என்று பேசிக்கொண்டு போவதை பார்த்ததும் முத்து என்ன விஷயம் என்று அவர்களிடம் விசாரிக்க, இது மாப்பிள்ளைக்கு இரண்டாவது கல்யாணமாம், மண்டபம் முழுக்க இதை பற்றி தான் பேசிட்டு இருக்காங்க என்று சொன்னதும் முத்து, அந்த அருண் பொய் சொல்லி சீதாவை இரண்டாவது கல்யாணம் பண்ண போறானா? இது சரி தெரிஞ்சா சீதாவே செருப்பை கழட்டி அடிச்சிடுவா இந்த கல்யாணம் நடக்கக் கூடாது என்று கோபமாக மண்டபத்துக்குள் வருகிறார்.

பிறகு அப்படியே கோபமாக அருணை முறைத்துக் கொண்டு மேளத்தாளத்தை நிறுத்தி சொல்கிறார் உடனே அருண் சட்டையை பிடித்து இழுத்து வர, மறுபக்கத்தில் சீதா மீனா சந்திரா அனைவரும் வந்துவிடுகின்றனர். இது அருணுக்கு இரண்டாவது கல்யாணம் என்று முத்து சொன்னதும் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதற்கு அருண் இது எனக்கு இரண்டாவது கல்யாணம் தான். ஆனா முதல் கல்யாணம் சீதாவுடன் தான் நடந்தது என்று சொன்னதும் முத்து அதிர்ச்சியாகி நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+