சிறகடிக்க ஆசை: முத்துவிற்காக அருணை பிரியும் சீதா.. மீனாவிடம் நறுக்குன்னு கேட்ட கேள்வி.. இது பலருக்கு பாடம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூலை 9ஆம் தேதிக்கான எபிசோடில் முத்து மண்டபத்தை விட்டு கோபமாக வெளியே போனதால் சீதாவும் மீனாவும் முத்துவை தேடி பார்க்க வந்திருக்கின்றனர். அங்கு முத்துவிடம் சீதா கதறி அழுது கொண்டிருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் சீதாவுடைய அம்மா அழுது கொண்டிருப்பதை பார்த்ததும் அருணுடைய அம்மா ஏன் நல்ல நாள் அதுவுமாக ஏன் இப்படி அழுதுட்டு இருக்கீங்க என்று கேட்க, அதற்கு சீதா உடைய அம்மா என்னுடைய பொண்ணு இப்படி ஏமாற்றுவான்னு நான் நினைக்கவே இல்ல என்று சொன்னதும், தன்னுடைய அம்மா முதலில் கல்யாணத்தை முடித்துவிடலாம் என்று சொல்கிறார். அதற்கு சீதாவுடைய அம்மா என்னுடைய மாப்பிள்ளை இல்லாமல் அது மட்டும் நடக்காது என்று சொல்கிறார்.

இதனால் முத்துவை தேடி மீனாவும் சீதாவும் மண்டபத்தை விட்டு வெளியே போகின்றனர். முத்து ஒரு பாரில் குடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது மூன்று டம்ளரில் குடித்துக் கொண்டிருப்பதை பார்த்ததும் அங்கு இருப்பவரை என்னாச்சு என்று கேட்க என்னுடைய பொண்டாட்டி ஏமாத்திட்டா, அந்த அருண்... என்று இன்னொரு டம்ளர் பற்றி பேச போகும்போது அங்கிருப்பவர் மீனாவை பற்றி தப்பாக பேசுகிறார்.
அந்த அருண் கூட உன் பொண்டாட்டி ஓடிப் போயிட்டாளா? என்று கேட்டதும் அதற்கு கோபமான முத்து அந்த ஆளை போட்டு அடித்து என்னுடைய பொண்டாட்டி கண்ணகி அவளை பத்தி தப்பா பேசாத என்று அடித்துக் கொண்டிருக்கும் போது மீனா அங்கு வந்து கண்கலங்கி விடுகிறார்கள். முத்துவிடம் மண்டபத்துக்கு வாங்க நீங்க இல்லாம கல்யாணம் நடக்காது என்று கூப்பிட முத்து வர முடியாது என்று சொல்கிறார். அதற்கு சீதா மாமா இன்னைக்கு என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான நாள் அது நீங்க இல்லாமல் நடக்கக்கூடாது என்று சொல்ல, அதுதான் ஏற்கனவே நடத்திட்டீங்களே என்று முத்து பதிலடி கொடுக்கிறார்.
அதற்கு சீதா முத்து உடைய காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். ஆனாலும் முத்து மனம் இறங்காமல் இருக்கிறார். நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன் என்று மீனா கெஞ்சி கொண்டிருக்கிறார். ஆனால் முத்து அங்கிருந்து கோபமாக போய்விடுகிறார் மறுபக்கத்தில் சீதா அம்மாவிடம் அருண் தேவை இல்லாம இந்த சின்ன விஷயத்தை இவ்வளவு பெருசா ஆக்குறீங்க என்று கேட்டதும், அதற்கு சீதாவின் அம்மா என்னுடைய பொண்ணு யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணனுனது சின்ன விஷயமா? இல்லேன்னு கோபப்படுகிறார்.
அதற்கு அருண் சீதா என்னுடைய பொண்டாட்டி ஏற்கனவே எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு. ஆனா இப்போ இந்த மண்டபத்தை விட்டு அவளா போயிட்டே இருக்கா என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கவே இல்லை என்று கோபப்பட்டதும். உங்களுக்கு இப்பதான் கல்யாணம் முடிஞ்சு நீங்களே இப்படி சொல்றீங்கன்னா என் மூத்த பொண்ணு என் மருமகன் கூட ஒரு வருஷத்துக்கு மேல வாழ்ந்து இருக்கா.. ஆனா அவ புருஷனுக்கு தெரியாம உங்களுக்கு கல்யாணத்தை பண்ணி வச்சிருக்கா.
எங்க குடும்பத்தில் நல்லது கெட்டதுக்காக என் மாப்பிள்ளை எவ்வளவு விஷயங்களை பார்த்து பார்த்து பண்ணிருக்காரு என்று சொன்னதும், அதற்கு அருண் அது அவங்களோட பர்சனல் அதை பற்றி எனக்கு கவலை கிடையாது. இப்போ இந்த மண்டபத்தில் இத்தனை பேர் இருக்காங்க இவங்களுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது மனோஜ் இங்க கல்யாணம் நடக்கிற மாதிரி தெரியல வாங்க நாம போகலாம் என்று சொல்லிக் கொண்டு இருக்க, அதற்கு அண்ணாமலை மனோஜை திட்டிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications