சிறகடிக்க ஆசையில் இன்று செம சம்பவம்.. விஜயாவிற்கு அடுத்தடுத்து அசிங்கம், இது தேவையா? மனோஜ் பாவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜனவரி 14-ஆம் தேதிக்கான எபிசோடில் விஜயா மற்றும் மனோஜ்க்கு தான் அவமானம் நடந்திருக்கிறது. இதுவரைக்கும் மீனாவை பாடாய் படுத்தி வந்த விஜயா இன்று போகும் இடமெல்லாம் அசிங்கப்பட்டு இருக்கிறார் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய உண்மைகளை மறைத்ததற்காக மீனா மீது கடும் கோபத்தில் இருக்கிறார் முத்து. அவர் கோபத்தால் வருத்தத்தில் இருக்கும் மீனா சாப்பிடாமல் இருந்து, ரோட்டில் மயக்கம் போட்டு விழுந்து விடுகிறார். இதனை தொடர்ந்து ரவியும் ஸ்ருதியும் மீனாவை அவருடைய அம்மா வீட்டுக்கு கூப்பிட்டு வருகின்றனர்.

இந்த தகவல் தெரியவர, முத்துவும் மாமியார் வீட்டுக்கு வந்து மீனாவை பார்க்கிறான். ஆனால் மீனா மீதான கோபம் குறையாத நிலையில், அடுத்ததாக அண்ணாமலை வீட்டுக்கு வருகிறார். அவரைக் கண்டதும் மீனா, அவரது காலில் விழுந்து, "நான் உண்மையை மறைச்சுட்டேன் மாமா... எனக்கு வாழவே பிடிக்கலை" என்று கதறி அழுகிறாள்.
இதனை கேட்டு அனைவரும் பதற, அண்ணாமலை, "இந்த பிரச்சனை எல்லாமே சரியாகும். எனக்கு உன் மேல கோபம் எதுவும் இல்லை... வருத்தம் தான்" என்று ஆறுதல் கூறுகிறார். பின்னர் முத்துவிடம், "மீனாவை சாப்பிட வை" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
மீனாவுக்கு ஆறுதல்
இதனை தொடர்ந்து, மீனாவுக்காக சாப்பாடு போட்டு முத்துவே ஊட்டி விடுகிறான். அவள் வேண்டாம் என்று சொல்ல, "நானும் சாப்பிடலை... இப்போ நீ சாப்பிடுறியா இல்லையா?" என்று கேட்கிறான். இதனால் மனம் உருகும் மீனா, சாப்பிட ஆரம்பித்து முத்துவுக்கே ஊட்டி விடுகிறாள். இந்த காட்சியை சீதா, மீனாவின் அம்மா, சத்யா மூவரும் பார்த்து சந்தோஷப்படுகின்றனர்.
ரோகிணி விவகாரத்தில் வெடித்த விஜயா
இந்தப்பக்கம், பார்வதி வீட்டுக்கு கடும் கோபத்துடன் கிளம்பி வரும் விஜயா, "ரோகிணி பற்றி எல்லா விஷயமும் தெரிஞ்சு தான் எங்க தலைல கட்டுனியா? என் பையன் வாழ்க்கையே போச்சு" என்று கொந்தளிக்கிறாள்.
அதற்கு பார்வதி, "உனக்கு அந்த பொண்ணை அறிமுகம் மட்டும் தான் பண்ணி வைச்சேன். வேற எதுவும் நான் பண்ணலை. அவள் பணக்கார பொண்ணுன்னு நினைச்சு கல்யாணம் பண்ணி வைச்சது நீ தான்" என்று சொல்லி விடுகிறாள்.
இதனால் அதிர்ச்சியடைந்த விஜயா, "இனிமேல் அந்த ரோகிணியால என் பையன் வாழ்க்கைக்கு எந்த தொந்தரவும் வரக்கூடாது. அவளை சென்னையை விட்டே போக சொல்லு" என்று கூறுகிறார். ஆனால் அதற்கு பார்வதி, "அதெல்லாம் என்னால பண்ண முடியாது" என்று மறுத்து விடுகிறாள்.
இதற்கிடையில் சிவன் இடையில் புகுந்து, "இதைப்பத்தி பேச நீங்க போலீஸ் ஸ்டேஷன் தான் போகணும்" என்று சொல்ல, விஜயா கடும் கோபத்தில், "ஆள் விட்டு பேசுறியா? என் பிரச்சனையை நானே பார்த்துக்கிறேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறாள்.
மனோஜின் பரிதாப நிலை
நேராக வீட்டுக்கு வரும் விஜயா, ரூமில் இருக்கும் மனோஜை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். அவன் அங்கேயே முடங்கிக் கிடப்பதை பார்த்து வருத்தத்தில் அவரை ஹாலுக்கு அழைத்து வந்து, "இனிமேல் உனக்கு அந்த ரோகிணி வேண்டாம். நான் வேற கல்யாணம் பண்ணி வைக்கிறேன்"
என்று சொல்கிறாள்.
அதே நேரத்தில் வீட்டுக்கு வரும் அண்ணாமலையிடம், "உங்களுக்கு தெரிஞ்ச வக்கீல் யாராச்சும் இருக்காங்களா? அந்த ரோகிணியை நம்ம பையன் வாழ்க்கையை விட்டு முழுசா அனுப்பனும்" என்று விஜயா கேட்கிறாள். அதற்கு அண்ணாமலை, "அவசரத்துல எந்த முடிவும் எடுக்க முடியாது"
என்று கூறி விடுகிறார்.
புதிய அதிர்ச்சி
அதே சமயத்தில் ஸ்ருதியின் அம்மா வீட்டுக்கு வந்து, "இந்த வீட்டு சம்பந்தின்னு சொல்லவே எனக்கு அசிங்கமா இருக்கு. அந்த ரோகிணிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தை கூட இருக்குதாமே. அவளோட பேரே அது இல்லையாம்ல" என்று கூற, விஜயா என்ன பதில் பேசுவது என்று தெரியாமல் தலைகுனிந்து நிற்கிறாள்.
உடனே அண்ணாமலை பதிலடி கொடுத்து, "எங்க குடும்பத்துக்கு என்ன அசிங்கம் வந்துச்சுன்னு நீங்க பார்த்தீங்க. உங்களோட பொண்ணு இங்க இருக்கிறது பிடிக்கலைன்னா, ஸ்ருதிக்கிட்ட பேசுங்க. எங்கக்கிட்ட பேச வேண்டாம்" என்று கூறுகிறார்.
இதனால் கடுப்பாகும் ஸ்ருதியின் அம்மா அங்கிருந்து கிளம்பி போகிறாள். மனோஜும் இந்த சம்பவங்களால் மீண்டும் ரூமுக்குள் சென்று கதவை சாத்திக் கொள்கிறான். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications