சிறகடிக்க ஆசையில் செம சம்பவம்! ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் முத்து, மீனா! கடைசியில் கதையே மாறிப்போச்சு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜனவரி 22ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி முத்து மற்றும் மீனா மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறார். ஆனால் ஸ்டேஷனில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்திருக்கிறது, என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி செய்த சூழ்ச்சிகள் எல்லாம் எப்போது மொத்த குடும்பத்தில் இருக்கும் தெரியவந்திருக்கிறது. அப்போது மீனாவின் தோழிகள் ரோகிணியை கடத்திக்கொண்டு போய் வண்டியில் வைத்து அடித்து இருந்தனர். இதைக் கேள்விப்பட்ட அண்ணாமலை முத்து, மீனாவை திட்டுகிறார் .

என்னதான் இருந்தாலும் நம்ம குடும்பத்து விஷயத்தை நீங்கள் அடுத்தவங்க கிட்ட சொன்னது தப்பு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு மனோஜும் விஜயாவும் அவ எல்லாம் அடி வாங்குற ஆளுதான், என்னை விட்டு இருந்தா நான் எல்லாம் அவளை வெட்டியே போட்டு இருப்பேன் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
அதற்கு அண்ணாமலை இனி ரோகிணி விஷயத்தில் ரொம்ப கவனமா இருக்கணும், முதலில் நாம்தான் ஸ்டேஷனுக்கு போயாகணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு விஜயா அதெல்லாம் தேவையில்லை நான் அந்த ரோகிணியை இந்த குடும்பத்தை விட்டு பிரிச்சு வைக்க போறேன், அவளுக்கும் நமக்கும் இனி சம்பந்தமே இல்ல. அவள டைவர்ஸ் பண்ணுவதற்காக ஏற்பாடுகளை எல்லாம் நான் செஞ்சிட்டு இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் முத்து மீனாவை தேடி போலீஸ் வருகின்றனர். ஸ்டேஷனில் உங்க மேல ரோகிணி கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க, அதனால நீங்க உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு வரணும் என்று சொல்கின்றனர். அதற்கு அண்ணாமலை நான் சொன்னது போலவே நடந்துச்சு. அந்த பொண்ணு லேசு பட்ட ஆளாக தெரியல என்று சொல்கிறார். அப்போது விஜயா இவளுக்கு இவ்வளவு தைரியம் வந்துட்டா? போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டாளே இவளை சும்மா விட கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
கடைசியில் முத்துவும் மீனாவும் ஸ்டேஷனுக்கு போகின்றனர். அங்கு ரோகிணி ஸ்டேஷனில் இருக்கிறார். அவர் இவங்க ரெண்டு பேரும்தான் என்ன சரமாரியா அடிச்சு கொலை பண்ண பாத்தாங்க, இவங்க ரெண்டு பேரால எனக்கு உயிருக்கு ஆபத்து இருக்கு, என் புருஷன் கிட்ட இருந்து என்ன பிரிச்சு வச்சது இவங்கதான் இனி அவர் கூட என்ன சேரவே விட மண்ட மாட்டேன்னு சொல்றாங்க என்று குற்றசாட்டு வைக்கிறார்.
அதோடு, முத்து சின்ன வயசுலயே ஒருத்தரை கொலை பண்ண முயற்சி செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு போனவர் என்று சொல்கிறார். மீனாவும் பூக்கட்டுகிறேன் என்கிற பெயரில் மிரட்டி மண்டபத்தில் ஆர்டர் பிடிக்கிறார். கூட பூ கட்டுற சில பெண்களை அடியாளாக வச்சிருக்க என்று பொய் மேல பொய் சொல்லிக்கொண்டே போக அதனால் கடுப்பான மீனா ரோகிணியை அடிக்கப் பாய்கிறார்.
இதை சாதகமாக பயன்படுத்திய ரோகிணி பாத்திங்களா சார் உங்க முன்னாடியே அடிக்கிறார்கள்... இவங்களால என் உயிருக்கே ஆபத்து என்று கெஞ்சி நாடகம் போடுகிறார். இதை நம்பிய போலீஸ் முத்துமீனா மீது எஃப் ஐ ஆர் போட சொல்கிறார். அப்போது மீனா நாங்க எதுவுமே பண்ணல என்று சொல்ல, அதற்கு முத்து நம்ம தப்பே பண்ணல நீ இங்க கெஞ்சுறதுக்கு நாம கோர்ட்டில் பார்த்துக்கொள்ளலாம் என்று தனியாக உட்காருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்: உண்மை முகத்தை காட்டிய சக்திவேல்! கோமதிக்கு இது தேவையா? மீண்டும் மயிலால் பிரச்சனை
அந்த நேரத்தில் அங்கு இருக்கும் ஒரு பெண் போலீஸின் குழந்தை மூச்சு விட முடியாமல் திணறுகிறது. அதை பார்த்து பதறிய முத்து, மீனாவும் உடனடியாக குழந்தைக்கு முதல் உதவி செய்கின்றனர். அந்த குழந்தையின் தொண்டையில் சிப்ஸ் சிக்கி இருப்பதால் அதை வெளியே வர வைக்கின்றனர். இதையெல்லாம் பார்த்து இன்ஸ்பெக்டர் முத்து மீனா மீது தவறு இல்லை என்பதை புரிந்து கொள்கிறார்.
பிறகு ரோகிணியிடம் உன் மேல தான் சந்தேகமா இருக்கு, நீதான் நாடகம் போடுறியா? உண்மையில் இவங்க உன்னை அடிச்சாங்களா? என்று கேட்க, அதற்கு முத்து ரோகினி செய்த ஏமாற்றி வேலைகள் எல்லாவற்றையும் சொல்கிறார். இதை கேட்டதும் போலீஸ் ரோகிணியை திட்டிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் வந்த அருண் ரோகிணியின் மொத்த பிராடு வேலையையும் போட்டுக் கொடுக்கிறார். இதனால் இன்ஸ்பெக்டர் ரோகிணியை திட்டி விட்டு அவர் மீது கேஸ் பைல் பண்ண சொல்கிறார். அப்போது முத்து டைவர்ஸ் கேஸ் நடக்கிறது அது முடிஞ்சா போதும் சார் இந்த கேஸ் எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். பிறகு முத்துவும் மீனாவும் ஸ்டேஷனிலிருந்து வீட்டிற்கு வருகின்றனர்.
அடுத்து சிந்தாமணியின் பேச்சைக் கேட்டு கடன் கொடுத்த பைனான்சியர் விஜயா வீட்டிற்கு வந்து வீட்டு பத்திரத்தை கேட்கிறார். மொத்த கடனையும் நானே அடிச்சிடுவேன் நீங்க பத்திரத்தை கொடுத்தால் போதும் என்று கேட்கிறார். சிந்தாமணியின் சூழ்ச்சி தெரியாமல் விஜயா சரி என்று சொல்ல, அப்போது முத்துவும் மீனாவும் அண்ணாமலையிடம் இந்த நபரை நம்ப வேண்டாம் என்று சொல்கின்றனர்.
அதனால் அண்ணாமலை அந்த பைனான்ஸியரை அனுப்பி வைக்கிறார். அதற்கு விஜயா எனக்கு என்ன தோணுதோ அதைத்தான் நான் செய்வேன் கடனை அடைக்கிற வழியத்தான் பாக்கணும். யாருமே இங்க பணம் தரப்போவதில்லை என்று மட்டம் தட்டி பேசுகிறார்.












Click it and Unblock the Notifications