சிறகடிக்க ஆசையில் இன்று செம சம்பவம்.. கோர்ட்டில் ரோகிணி சொன்ன விஷயம்! மீனாவுக்கு அதிர்ச்சி! பாயிண்டை பிடித்த நீதிபதி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜனவரி 23ஆம் தேதிக்கான எபிசோடில், ரோகிணி மற்றும் மனோஜ்கான விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெறுகிறது. அதில் முத்து மீனா சாட்சி சொல்லி இருக்கின்றனர். என்ன நடந்தது என்று விரிவாக பார்ப்போம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்துவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போதும் முத்து சோகமாக யோசித்துக் கொண்டிருக்க, மீனா என்னாச்சு என்று விசாரிக்கிறார். அதற்கு அம்மா இந்த வீட்ல யாரு கடனை அடைப்பா என்று கேட்டாங்க, அது எனக்கு வருத்தமா இருக்கு என்று ஃபீல் பண்ணுகிறார்.

நம்மால் முடியாது என்று அவங்க குத்தி காட்டுறாங்க என்று முத்து சொல்ல, அவங்க எப்பவுமே இப்படித்தானே பேசுவாங்க நாம ஒன்னும் என்னைக்கும் குறைந்து போயிடல நாம மாமாவோட பணத்திலும் முன்னேறவில்லை, நம்முடைய சொந்த பணத்தில் தான் முன்னேறி இப்போ ரெண்டு காரு வச்சிருக்கிறோம் என்று முத்துவிற்கு மீனா மோட்டிவேஷனாக அட்வைஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
அதோடு எப்படியாவது நாம இந்த கடனை அடைக்கணும் அப்போதான் அப்பா சந்தோஷப்படுவாங்க என்று முத்து சொல்ல, அதற்கு மீனா நாம அடுத்த கட்டத்திற்கு போற வழிய பாக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதோடு தனக்கு ஒரு அப்பார்ட்மெண்டில் பூ கொடுக்க ஆர்டர் கிடைத்ததே அந்த மேடம் இப்போ ஹாஸ்பிடலில் இருக்காங்க. ஆனால் அந்த ஆர்டர் எனக்கு கிடைக்குமா இல்லையான்னு தெரியல நாளைக்கு போய் பார்க்கணும் என்று மீனா சொல்லிக் கொண்டிருக்கிறார்.
உனக்கு நல்லதே நடக்கும் என்று முத்துவும் அவருக்கு சப்போர்ட்டாக பேசுகிறார். மறுநாள் காலையில் மீனா அந்த அப்பார்ட்மெண்ட் மேனேஜரை பார்க்க போகிறார். அங்கு சிந்தாமணியும் இருக்கிறார். உனக்கு எப்படியும் இந்த ஆர்டர் கிடைக்காது என்று சிந்தாமணி வழக்கம்போல திமிராக பேசிக் கொண்டிருக்கிறார். அதை பார்க்கலாம் என்று மீனாவும் சொல்லி கொண்டிருக்கிறார்.
அப்போது மேனேஜர் ரெண்டு பேரையும் கூப்பிடுகிறார். ரெண்டு பேரும் இந்த ஒரே ஆர்டருக்காக வந்திருக்கீங்க, ஆனால் நான் உங்களுக்கு ஒரே ஒரு விஷயம் தான் சொல்ல முடியும் நீங்க அந்த அப்பார்ட்மெண்டில் ஒரு பூக்கடை போடுங்க, அந்த கடை மூலமாக பூ விற்றுக்கலாம் என்று சொல்ல, மீனா நானும் செய்வேன் என்று சொல்கிறார், சிந்தாமணி நானும் பண்ணுவேன் என்று சொல்கிறார்

இதனால் மீனா ஒரு ஐடியா கொடுக்கிறார். அதாவது நான் பூ கட்டிக்கொண்டு கொடுக்கிறேன் அது எவ்வளவு தரமாக இருக்குன்னு நீங்களே செக் பண்ணி பாருங்க உங்களுக்கு புடிச்சிருந்துச்சுன்னா அந்த ஆர்டரை கொடுங்க என்று சொல்ல மேனேஜர் ஓகே சொல்கிறார். சிந்தாமணி இது எல்லாம் சரிப்பட்டு வராது என்று சொல்ல அவங்க ஓகே சொல்லிட்டாங்க நீங்களும் இதை பண்ணி கொடுங்க எனக்கு புடிச்சிருந்தா செலக்ட் பண்றேன் என்று சொல்லி அனுப்புகிறார்.
அடுத்ததாக ரோகிணியின் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெறுகிறது. அப்போது ரோகிணி தனக்காக வாதாட வக்கீல் இல்லை, என்னிடம் உண்மை இருக்கிறது அதனால நானே எனக்கு பேசுகிறேன் என்று சொல்கிறார். மனோஜ் உடைய வழக்கறிஞர் ரோகிணியின் உண்மையான பெயர் கல்யாணி என்பது, அவருக்கு ஏற்கனவே கல்யாணம் முடிந்தது, அவருடைய மகன் சர்டிபிகேட் என எல்லாவற்றையும் கொடுக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கதையே மாறி போச்சு.. அப்போ வில்லி மயில் இல்லை, இவரா? ஏமாறும் பாண்டியன் குடும்பம்
பிறகு இந்த உண்மை முதலில் மீனாவிற்கு தான் தெரிந்தது என்று சொன்னதும் மீனாவை விசாரிக்கிறார்கள். உங்களுக்கு எப்படி உண்மை தெரிந்தது என்று நீதிபதி கேட்க, தீபாவளிக்கு ஊருக்கு போன இடத்தில் தனக்கு தெரிந்த உண்மையை மீனா சொல்கிறார். பிறகு அந்த உண்மையை ஏன் வீட்டில் சொல்லவில்லை என்று கேட்க, அதற்கு மீனா உண்மையை சொன்னா நானும் என்னுடைய பையனும் தற்கொலை பண்ணிப்போம் என்று மிரட்டுனா அதனாலதான் சொல்லல என்று சொல்கிறார்.
சிறகடிக்க ஆசையில் செம சம்பவம்! ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் முத்து, மீனா! கடைசியில் கதையே மாறிப்போச்சு
பிறகு முத்துவிடம் விசாரிக்கின்றனர் அவரும் தனக்கு தெரிந்த உண்மையை சொல்கிறார். கடைசியாக ரோகிணியிடம் நீங்க பெயர் மாற்றி வைத்தது உண்மையா? என்று கேட்க, நடிகர்கள் எல்லோரும் மாத்துறாங்க அதேபோலத்தான் நானும் ஒரு கட்டத்தில் என்னுடைய பெயரை மாற்றிக்கொண்டேன். அது தப்பா எனக்கு தெரியல என்று சொல்கிறார். அடுத்ததாக நீதிபதி அப்போ உங்களுடைய முதல் கல்யாணத்தை நீங்க மறைச்சதை ஒத்துக்குறீங்களா என்று கேட்க, ஆமாம் என்று ரோகினி சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம்












Click it and Unblock the Notifications