Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: விஜயாவை வெளுத்த ஸ்ருதி.. அண்ணாமலை வேற இப்படி பேசிக்கிட்டு.. மனோஜ்க்கு செம அடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: (Siragadikka Aasai serial today episode) விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜனவரி 28ஆம் தேதிக்கான எபிசோடில் ஸ்ருதியை சமாதானம் செய்ய பேசிய விஜயாவிற்கு சரியான அவமானம் கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில் மனோஜ் கொடுத்த ஐடியாவை பார்த்து முத்து கோபத்தில் அவரை அடித்து வெளுத்து வாங்கியிருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் ரவியை தான் காதலிப்பதாக நீத்து சொன்னதால் ஸ்ருதி கோபப்பட்டு தன்னுடைய அம்மா வீட்டிற்கு போய் இருக்கிறார். ஸ்ருதியை சமாதானம் செய்து வீட்டிற்கு கூட்டிட்டு வருவதற்காக ரவியும் மீனாவும் ஸ்ருதி வீட்டிற்கு போய் இருந்தனர். (Siragadikka Aasai Jan 28 episode)

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

அப்போது மீனாவிடம் ஸ்ருதி நான் அந்த வீட்டுக்கு வரணும் என்றால் நீத்து இனி நான் ரவியை காதலிக்க மாட்டேன் என்று வீடியோ வெளியிட்டு சொல்லணும் அதோட என்கிட்ட மன்னிப்பு கேட்கணும், அப்படி நடந்தால் தான் நான் வருவேன் இல்லை என்றால் வரமாட்டேன் என்று ஸ்ட்ரிட்டாக சொல்லிவிடுகிறார்.

இந்த கேட்ட ஸ்ருதியின் பெற்றோர் என்னுடைய மகளின் வாழ்க்கைக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா உங்க மொத்த குடும்பத்தையும் சும்மா விடமாட்டேன் என்று ரவியை திட்டுகின்றனர். வசதி இல்லாத வீட்டில் சம்மந்தம் வைத்தால் இப்படித்தான் ஆகும் என்று புலம்ப, அதனால் ரவி அவமானப்பட்டு நிற்கிறார். அடுத்ததாக ஸ்ருதி சொன்ன கண்டிஷனை பற்றி ரவி முத்து மற்றும் மனோஜிடம் சொல்கிறார்.

நீத்து நாடகம்

உடனே‌ முத்து நீத்துவிடம் பேசி இனிமேல் வேலைக்கு வரமாட்டேன் என்றும், ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லு என சொல்கின்றார். இதைக் கேட்டு ரவியும் நீத்துவுக்கு போன் செய்கிறார். அப்போது நீத்து இப்பதான் உங்களை நினைச்சேன் என்று ரொமான்ஸ் ஆக பேசி ரவியை கடுப்பேத்துகிறார். அதற்கு ரவி கோபப்பட்டு நான் இனி வேலைக்கு வரமாட்டேன் என்று சொல்ல, நான் வேற செஃப் ரெடி பண்ணிட்டேன்...

நீங்க வராதது எனக்கு நஷ்டம் தான். ஆனா அதைவிட எனக்கு காதல் முக்கியம். அதற்காகத்தான் உங்களிடம் காதலை சொல்றதுக்கு முன்னாடியே வேலைக்கு இன்னொருவரை அப்பாயிண்ட்மெண்ட் பண்ணிட்டேன் என்று சொல்கிறார். அதற்கு ரவி நீங்க எதற்காக இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்கன்னு தெரியல, ஆனா உங்களால என்னுடைய வாழ்க்கை கஷ்டப்படுகிறது.

கோபத்தில் ரவி

ஸ்ருதியின் நிலைமையை கொஞ்சமாவது யோசித்து பார்த்தீங்களா? என்று கேட்க, நான் எதற்காக அடுத்தவங்களை பற்றி நினைச்சு பாக்கணும்? நான் உங்களை பற்றி மட்டும்தான் நினைத்துப் பார்ப்பேன் என்று மீண்டும் நீத்து திமிராகவே பேச அதற்கு ரவி கோபமாகி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேளு என்று சொல்ல அதெல்லாம் முடியாது என்று சொல்லி போனை வைத்து விடுகிறார்.

சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு சப்போர்ட்டுக்கு வந்த பழைய குடும்பம்! விஜயாக்கு பிரச்சனை! ஸ்ருதி அம்மா போட்ட போடு
இதைக் கேட்டா மனோஜ் நான் உனக்கு ஒரு சூப்பர் ஐடியா கொடுக்கிறேன், நீ பேசாம நீத்துவிடம் ஓகேன்னு சொல்லிவிடு, ஸ்ருதியிடம் மன்னிப்பு மட்டும் கேட்க சொல்லு, அப்புறம் ரெண்டு பேரு கூடயும் ஜாலியா வாழ்ந்துட்டு இரு என்று சொல்ல, அதற்கு முத்து மனோஜை போட்டு அடிக்கிறார். பிறகு நடந்த விஷயத்தை குடும்பத்திடம் சொல்ல அண்ணாமலை விஜயாவிடம் சொல்லி ஸ்ருதிக்கு போன் செய்து அவரை சமாதான பண்ணி வீட்டுக்கு வர வை என்று சொல்கிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

அசிங்கப்படுத்திய ஸ்ருதி

ஆனால் முதலில் விஜயா மறுத்தாலும் பிறகு ஸ்ருதிக்கு போன் செய்கிறேன். அப்போது விஜயா கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் அவருக்கு பல்பு கொடுக்கிற மாதிரியே ஸ்ருதி பேசிவிட்டு கடைசியில் போனை வைத்து விடுகிறார். இதனால் மொத்த குடும்பமும் மனோஜ் வாழ்க்கையை பார்ப்பதா? ரவி வாழ்க்கையை பார்ப்பதா? என்று தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

மறுபக்கத்தில் ரோகிணி மனோஜ் மனதை மாற்ற பல முயற்சிகளை எடுத்து வருகிறார். ஷோரூம் ஆர்டர் கொடுத்த மேனேஜரை சந்தித்து இந்த ஆர்டர் பறிபோனதால்தான் என்னை விவாகரத்து செய்யும் நிலைக்கு என் கணவர் சென்று விட்டார். அதனால் அந்த ஆர்டரை திருப்பிக் கொடுங்க என்று கெஞ்சி கேட்டு அழுகிறார்.

ஆனால் மேனேஜர், உங்கள் நிலைமையை பார்த்தால் எனக்கு பாவமா தான் இருக்கு இதுக்கு எல்லாம் ஒருத்தரை விவாகரத்து பண்ணுவாரா? என்னால இப்போ எந்த முடிவையும் எடுக்க முடியாது ஆனா பார்த்து சொல்றேன் என்று சொல்லி விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+