சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு சப்போர்ட்டுக்கு வந்த பழைய குடும்பம்! விஜயாக்கு பிரச்சனை! ஸ்ருதி அம்மா போட்ட போடு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜனவரி 27 ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணிக்கு சப்போர்ட்டாக அவருடைய முதல் கணவரின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். அதே நேரத்தில் விஜயாவிற்கு புது பிரச்சனையும் வருகிறது. அதுபோல ரவி, ஸ்ருதி பிரச்சனையில் மீனா தலையிட்டு இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் நீத்து ரவியை தான் நான் காதலிக்கிறேன் என்று சொன்னதால் ஸ்ருதி கோபப்பட்டு அம்மா வீட்டிற்கு போய் இருக்கிறார். அதே நேரத்தில் விஜயாவின் வீட்டு பத்திரத்தை வாங்குவதற்காக சிந்தாமணியும் சூழ்ச்சி செய்திருக்கிறார். அதில் விஜயா வசமாக சிக்க இருக்கிறார்.

சூழல் இப்படி இருக்க இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கிரிஷின் பெரியப்பாவும் பெரியம்மாவும் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ரோகிணி திணறுகிறார். பிறகு அம்மாவை கூப்பிட்டு இவங்களை எதற்காக வீட்டிற்கு வர வைத்திருக்கிற, தேவையில்லாத வேலை பாக்குற என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து கிரிஷின் சொந்தக்காரர்கள் ரோகிணியிடம் பிரச்சனை எல்லாம் உங்க அம்மா என்கிட்ட சொன்னாங்க. உன்னை பற்றிய உண்மைகளை எங்க மூலமாக தான் முத்து குடும்பத்திற்கு தெரிய வந்தது என்பது எங்களுக்கு வருத்தமா தான் இருக்கு. ஆனால் என் தம்பிக்கு சேர வேண்டிய சொத்தை உங்களுக்கு தரோம் என்று சொல்கின்றனர்.
ஆனால் ரோகிணி சொத்து எதுவும் வேண்டாம் நான் என் புருஷன் கூட சீக்கிரமா சேர்ந்துடுவேன் என்று தட்டிக் கழிக்கிறார். மறுபக்கத்தில் வீட்டிற்கு வந்த முத்துவும் மீனாவும் கார் ஷெட்டில் நீத்து பேசிய விஷயத்தை ரவியிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த பொண்ணு ஒரு லூசு போல உன்னையும் ஸ்ருதியையும் பிரிக்க ஒரு பிளானோட தான் இருக்கா என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

அதற்கு ரவி எனக்கும் என்ன பண்ணுறதுன்னு தெரியல, ஸ்ருதி போன் பண்ணவே இல்ல, அவ அம்மாதான் போன் பண்ணிட்டு இருக்காங்க. எப்படி அட்டென்ட் பண்ணி பேசுறதுன்னு தெரியாம இருக்கேன் என்று சொல்லி கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஸ்ருதியின் அம்மா சுதா வீட்டிற்கு வந்து மொத்த குடும்பத்தையும் கூப்பிட்டு வைத்து திட்டுகிறார்.
ஏன் என் பொண்ணை இப்படி வீட்டை விட்டு அடிச்சு விரட்டி இருக்கீங்க? அவ ரூமுக்குள்ள உட்கார்ந்து அழுதுட்டே இருக்குறா எங்க யார்கிட்டயும் பேசல என்று கோபப்படுகிறார். அதைக் கேட்டு அண்ணாமலை அதிர்ச்சியடைந்து உங்க பொண்ணு வீட்டை விட்டு போனதே நீங்க சொல்லி தான் தெரியும் என்று சொல்கிறார். அப்போது நடந்த விஷயம் எல்லாவற்றையும் முத்து சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்: அண்ணன்னு நினைச்ச சக்திவேல் இவ்வளவு மோசமானவரா? கோமதிக்கு பெரிய அடி
உடனே சுதா இவர் கொடுத்த இடம்தானே அந்த பொண்ணு இப்படி எல்லாம் பேசுது என்று ரவியை திட்டுகிறார். அதற்கு ரவி நான் என்ன பண்ண முடியும் என்று கேட்க, ஸ்ருதி எவ்வளவோ சொல்லியும் நீங்க தானே அந்த ரெஸ்டாரண்டை விட்டு வரவே இல்லை என்று திட்டுகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமல் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
அப்போது மீனா நானும் ரவியும் போய் ஸ்ருதியிடம் பேசிப் பார்க்கிறோம் என்று சொல்கிறார். பிறகு ஸ்ருதி வீட்டிற்கு வருகின்றனர். அப்போது மீனாவும் ரவியும் கதவை மாறி மாறி தட்டுகின்றனர். அவர் திறக்காததால் சுதா பயத்தில் கத்தி கொண்டு இருக்கிறார். பிறகு மீனா நான் வந்திருக்கிறேன் ஸ்ருதி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொன்னது ஸ்ருதி கதவை திறந்து விடுகிறார். ஆனால் ரதியிடம் பேசாமல் கதவை பூட்டி விடுகிறார்.

பிறகு மீனாவும் ஸ்ருதியும் பேசுகின்றனர். அப்போது மீனா கார் ஷெட்டில் நடந்த விஷயத்தை சொல்ல அதற்கு ஸ்ருதி நீங்க எப்படி அவளை விட்டீங்க? என் இடத்துல நீங்க இருந்தா இப்படி விடுவீங்களா என்று கேட்க, மீனா எனக்கும் அடிக்கணும் போல தான் இருந்தது ஆனால் இவயெல்லாம் அடிச்சா கூட திருந்த மாட்டா என்று சொல்கிறார்.
சிறகடிக்க ஆசையில் செம சம்பவம்! ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் முத்து, மீனா! கடைசியில் கதையே மாறிப்போச்சு
அதற்கு ஸ்ருதி நான் மீண்டும் அந்த வீட்டுக்கு வரவேண்டும் என்றால் ரவி அந்த ரெஸ்டாரண்டை விட்டு வெளியே வரணும், அதேபோல் அந்த நீத்து நான் ரவியை காதலிக்கல என்றும் இனி உங்க வாழ்க்கையில் வரவே மாட்டேன் என்று என்கிட்ட மன்னிப்பு கேட்கணும் என்று கண்டிஷன் போடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications