பாண்டியன் ஸ்டோர்ஸ்: அண்ணன்னு நினைச்ச சக்திவேல் இவ்வளவு மோசமானவரா? கோமதிக்கு பெரிய அடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 2026 ஜனவரி 26 ஆம் தேதிக்கான எபிசோடில், பாண்டியன் வீட்டிற்கு விருந்துக்கு வந்த சக்திவேல் செய்த பிரச்சனையால் புது பிரச்சனை வெடித்திருக்கிறது. என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பாண்டியன் வீட்டிற்கு வந்த சக்திவேல் எப்படியாவது இங்கே ஒரு பிரச்சனை பண்ண வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தார். அதனாலயே அவர் சாப்பாடை சாப்பிடாமல் யோசித்து கொண்டு இருந்தார். அப்போது ராஜியிடம் உனக்கு நாங்க பார்த்து வைத்த பையனை ஞாபகம் இருக்கா? அந்த பையனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு.

இப்போ ஸ்விட்சர்லாந்தில் போய் செட்டில் ஆகிட்டாங்க. நீ இவனை கல்யாணம் பண்ணிட்டு கஷ்டப்பட்டுட்டு இருக்க என்று சொன்னதும் எல்லோரும் அதிர்ச்சியாகின்றனர். அப்போது ராஜி நான் இப்போ சந்தோஷமா தான் வந்துட்டு இருக்கேன் சித்தப்பா என்று சமாளிக்கிறார். ஆனால் சக்திவேல் அதையெல்லாம் கேட்காமல் நீ சந்தோஷமா வாழுறேன்னு சொல்லி நம்பிட்டு இருக்க, உன் வாழ்க்கை சந்தோஷமாகவே இல்லை என்று கோபமாக பேசுகிறார்.
அப்போது காந்திமதி வாய மூடிட்டு சாப்பிடுடா, எந்த மாதிரி சூழ்நிலையில் ராஜி கல்யாணம் நடந்துச்சுன்னு உனக்கு தெரியுமில்ல என்று சொல்கிறார். அதற்கு சக்திவேல் அது எல்லாம் ஞாபகம் இருக்கு, ராஜி யாரையோ நம்பி ஓடிப்போய் ஏமாந்துடுச்சு. அது தப்புதான் அந்த பிள்ளையை அங்க வச்சு பார்த்தவன் என்ன பண்ணி இருக்கணும்? நம்மகிட்ட வந்து ஒப்படைச்சிருந்திருக்கணும் அப்படி பண்ணி இருந்தா இவன் நல்லவன் ஆனா இந்த கதிர் என்ன செஞ்சான்?
ராஜியை கல்யாணம் பண்ணி நம்ம குடும்பத்தை அசிங்கப்படுத்தி இருக்கிறான் என்று சொல்ல, அதற்கு கோமதி என் பையனுக்கு அந்த மாதிரி புத்தி எல்லாம் இல்லை என்று சொன்னதும் பாண்டியன் இலையில் சாப்பாடு வச்சிட்டு எதுக்காக தேவையில்லாத விஷயங்களை எல்லாம் பேசிட்டு இருக்கீங்க சாப்பிடுவோம் என்று சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்: உண்மை முகத்தை காட்டிய சக்திவேல்! கோமதிக்கு இது தேவையா? மீண்டும் மயிலால் பிரச்சனை
அதற்கு சக்திவேல் ராஜி பண்ணுன வேலையால குமாருக்கு இன்னும் கல்யாணம் நடக்கல. அந்த ரணம் இன்னும் எல்லார் மனசுலயும் இருக்கு என்று ஏத்தி விடுகிறார். அப்போது சரவணன் இல்லன் மட்டும் இந்த நல்லவனுக்கு கல்யாணம் ஆகி இருக்குமா? என்று பேசி விடுகிறார். இதைக் கேட்டு குமார் கோபப்பட, கோமதி அமைதியாக இருக்க சொல்கிறார்.
அந்த சமயத்தில் பாண்டியனுக்கு கடையில் இருந்து போன் வர, அவர் கடைக்கு போயிட்டு வரேன் என்று கிளம்புகிறார். அவர் போனதும் சக்திவேல் இவன் எதுக்காக அந்த நேரத்துல ராஜியை கல்யாணம் பண்ணுனான்? ஒருவேளை அம்மா மூலமா வந்து சேர வேண்டிய சொத்தெல்லாம் தன் மூலமாக வந்துடுன்னு சொல்லி திட்டம் போட்டு கல்யாணம் பண்ணி இருக்கிறானோ பிச்சைக்கார பையன் என்றெல்லாம் திட்டிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு கோபமான கோமதி என் பையன் அப்படி எல்லாம் சொத்துக்கு ஆசைப்படுறவன் கிடையாது என்று பேசுகிறார். அப்போது ராஜி எதற்கு சித்தப்பா நடந்த விஷயத்தை பேசிட்டு இருக்கீங்க? நான் இப்போ சந்தோஷமாக வாழ்வதை பற்றி நினைக்கவே மாட்டேங்கிறீங்க என்று கேட்கிறார். ஆனாலும் சக்திவேல் விடாமல் நீ எப்படியோ வாழ வேண்டிய பொண்ணு இந்த ஒண்ணும் இல்லாதவன கல்யாணம் பண்ணிக்கிட்டு பேசிகிட்டு இருக்க என்று கோபப்படுகிறார்.
Bigg Boss Finale:பிக் பாஸ் டிஆர்பியை எகிற வைக்க விஜய் டிவி எடுத்த முடிவு! கம்ருதீன், பார்வதி லைவில் வந்து சொன்ன விஷயம்
இப்படியே வாக்குவாதம் பெருசாகி கொண்டே போக அதை பார்த்து பதறிப் போன காந்திமதி ஏன்டா இப்படி வெண்ணை திரண்டு வர நேரத்துல பானையை போட்டு உடைக்கிறா.. அதற்கு சக்திவேல் உன் உத்தம பேரன் ராஜியை நம்மகிட்ட வந்து ஒப்படைச்சிருக்க வேண்டியதுதானே எதுக்காக அந்த சமயத்துல கல்யாணம் பண்ணனும்னான்? திட்டம் போட்டு நம்மளை பழிவாங்க தானே இது எல்லாம் பண்ணி இருக்கிறான் என்று மீண்டும் மீண்டும் சொன்ன விஷயத்தை சொல்லிக் கொண்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications