Bigg Boss Finale:பிக் பாஸ் டிஆர்பியை எகிற வைக்க விஜய் டிவி எடுத்த முடிவு! கம்ருதீன், பார்வதி லைவில் வந்து சொன்ன விஷயம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று ஜனவரி 18ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. ஆனால் ஃபினாலே ஆரம்பிப்பதற்குமே ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த சீசனில் ரெட் கார்டு வாங்கி வெளியேற்றப்பட்ட பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும், யாரும் எதிர்பாராத வகையில் மீண்டும் ஃபினாலே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பிக் பாஸ் வரலாற்றில் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய ஒருவர் கூட மீண்டும் உள்ளே வந்ததில்லை. அந்த வகையில், "இது பிக் பாஸ் சீசன் 9 இல்ல... ரீ-என்ட்ரி ஸ்பெஷல் எடிஷனா?" என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஒரு ரசிகர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
"காலைல சொன்னாங்க, பார்வதி கம்ருதீன் வருவாங்கன்னு... உடனே 'அப்படி வாய்ப்பே இல்ல'ன்னு விளக்கம். மாலை வந்ததும் டக்குனு லைவ் போட்டு 'நாங்க ஃபினாலேக்கு வர்றோம்'னு சொல்லிட்டாங்க. சரி... இதுக்கு அப்புறம் வெளியேறினவங்க எல்லாரையும் கூட்டி 'பிக் பாஸ் ரீயூனியன்' பண்ணப் போறாங்களா?" என்று அவர் கலாய்த்துப் பேசுகிறார்.
பின்னணி என்னவென்றால், ரெட் கார்டு விவகாரத்தால் பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருக்கும் ஏற்பட்ட நெகடிவ் இமேஜை சரி செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த ரீ-என்ட்ரி திட்டம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் மற்றும் சில தரப்பினரிடமிருந்து வந்த வேண்டுகோள்கள், அதோடு இருவரும் தனித்தனியாக விஜய் டிவி நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் ஆகியவை இதற்குக் காரணமாக அமைந்துள்ளதாம்.
மேலும், "ஃபினாலே நாளில் ஏதாவது சர்ச்சை இல்லாமல் போனால் டிஆர்பி எப்படி ஏறும்?" என்பதையும் சேனல் தரப்பு கணக்கில் எடுத்திருக்கிறது எனவும் கிசுகிசுக்கப்படுகிறது. அதனால் தான் நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் லைவ் வந்து, தாங்கள் அதிகாரப்பூர்வமாக ஃபினாலேவில் பங்கேற்கிறோம் என்று அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில், பிக் பாஸ் 9 சீசன் முழுவதும் சர்ச்சைகளுக்கும் திருப்பங்களுக்கும் பஞ்சமே இல்லை. இந்த சீசனில் அதிகமான வாக்குவாதங்கள், தனிப்பட்ட குற்றச்சாட்டுகள், ரெட் கார்டு போன்ற கடுமையான நடவடிக்கைகள் ஆகியவை ரசிகர்களிடையே விவாதத்தை கிளப்பின. அந்த வரிசையில், ஃபினாலே நாளில் நடந்த இந்த ரீ-என்ட்ரி சம்பவம், "பிக் பாஸ் ஒரு ரியாலிட்டி ஷோவா... இல்ல டிஆர்பி விளையாட்டா?" என்ற கேள்வியையும் மீண்டும் எழுப்பியுள்ளது.
எப்படி இருந்தாலும், பார்வதி மற்றும் கம்ருதீன் மீண்டும் மேடையில் தோன்றுவது ஃபினாலே நிகழ்ச்சிக்கு கூடுதல் பரபரப்பை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் ரசிகர்கள் ஆரவாரம், சமூக வலைதளங்களில் மீம்கள், கலாய்ப்புப் பதிவுகள் என பிக் பாஸ் 9 ஃபினாலே இன்று முழுக்க பேசுபொருளாக மாறும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications