சிறகடிக்க ஆசை: அண்ணாமலை வீட்டிற்கே வரும் ஜீவா? வெளியான பார்ட்டி போட்டோ? உடைபடுமா உண்மை?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் நடிகர்கள் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்கள். அதில் ஜீவா மீண்டும் வந்திருப்பதால் மனோஜ் பற்றிய உண்மைகள் உடைபடுமா? என்று கேள்விகள் எழும்புகிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் விஜய் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கிறது. மனோஜிடமிருந்து பணத்தை ஏமாற்றிக் கொண்டு காணாமல் போன ஜீவா மீண்டும் சென்னைக்கு வந்திருந்த நிலையில் ஜீவாவை கண்டுபிடித்த ரோகிணி மற்றும் மனோஜ் அவரிடம் இருந்து 30 லட்சம் பணத்தை வாங்கி இருக்கின்றனர்.

அதோடு அந்த பணத்தை தன்னுடைய அப்பா அனுப்பியது என்று சொல்லி ரோகிணி அண்ணாமலை குடும்பத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ஜீவா சென்னைக்கு வந்திருந்த போது முத்துவின் காரில் வந்ததால் முத்துவோடு ஜீவாவிற்கு அறிமுகமும் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் போலீஸ் ஸ்டேஷனில் முத்து தான் ஜீவாவிற்கு சாட்சி கையெழுத்து போட்டு இருந்திருக்கிறார்.
அதே நேரத்தில் ஜீவா தான் மனோஜை ஏமாற்றிவிட்டு போனது அந்த பணம் கொடுத்ததற்கு தான் நாம் சாட்சி கையெழுத்து போட்டு இருக்கிறோம் என்று உண்மை தெரியாமலே இருக்கும் முத்துவிற்கு இந்த உண்மை எப்போது தெரியவரும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. மறுபக்கத்தில் மனோஜின் ஷோரூம் திறப்பு விழா அன்று ரோகிணியின் தோழி வித்யா, நீ பொய் மேல பொய் சொல்லி சிக்கல் உண்டாக்கிக் கொண்டே இருக்கிற.. ஜீவா பற்றிய உண்மை தெரிய வரும்போது உன்னுடைய நிலைமை என்ன ஆகும் என்று பயமுறுத்தி இருக்கிறார்.
ஆனாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாத ரோகிணி வழக்கம்போல பிரச்சனையை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார். இன்றைய எபிசொடில் முத்து, ஸ்ருதி அம்மா வாங்கி அனுப்பிவிட்ட ஏசியை வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்ததால் எங்களுடைய பிசினஸி பிரச்சனை வந்துவிட்டது என்று ரோகிணி புது பிரச்சனையை கூட்டுகிறார். இது ஒரு பக்கம் இருக்க இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் எல்லோரும் ஒன்றாக சுற்றுலா போயிருக்கின்றனர்.
அப்போது பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட அனைவரும் போட்டோ எடுத்து இருக்கிறார்கள். அதில் ஜீவாவும் இருக்கிறார். இதனால் ஜீவா இனி மீண்டும் சீரியலில் வரப்போகிறாரா? அப்படி வந்தால் வீட்டிற்க்கே வந்து அண்ணாமலையிடம் நான் தான் உங்க பையனை ஏமாற்றியது அவரிடம் இருந்து 27 லட்சம் பணத்தை ஏமாற்றிக் கொண்டு போனதற்கு வட்டியோடு சேர்த்து 30 லட்சம் கொடுத்தேன் என்று உண்மையை சொல்லப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
அதே நேரத்தில் ஒரு வேலை ஜீவா மீண்டும் சென்னைக்கு வந்தால் ,முத்துவை பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்கு ஏதாவது ஒரு சூழ்நிலையில் வரும் போது மனோஜ் பற்றிய உண்மை தெரிந்து மனோஜ் மற்றும் ரோகிணியை இதை சொல்லி மிரட்டுவாரா? என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆனாலும் இந்த சீரியலில் ஒவ்வொரு முறையும் முத்து மற்றும் மீனாவுக்கு தான் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. இந்த முறையாவது மனோஜ் மற்றும் ரோகிணிக்கு பிரச்சனை வருமா? அல்லது வழக்கம் போல இவர்கள் தப்பி விடுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications