சிறகடிக்க ஆசை: குறும்படம் போட்ட முத்து.. மனோஜை அடித்து துவைத்த விஜயா.. ரோகிணி இப்படி பேசிட்டாங்களே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை 12ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் மனோஜ் 4 லட்சம் ஏமாந்த விசயத்தை வீடியோ ஆதாரத்தோடு முத்து வீட்டில் சொல்ல விஜயா புது நாடகம் போட்டு மொத்த குடும்பத்தையும் ஏமாற்றுகிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் செல்வம் பிரிட்ஜ் வாங்க வேண்டும் என்று பாதி விலைக்கு கிடைக்கும் என்று சொன்ன தலைக்கு முத்துவை கூட்டிக்கொண்டு போகிறார் அங்கு மனோஜ் கடையில் இருந்த அதே பிரிட்ஜ் 5000 ரூபாய் தான் என்று சொல்லவும் செல்வம் அதை வாங்குவதற்காக பணத்தை கொடுக்க போக அந்த நேரத்தில் அங்கு வரும் போலீசார் சுற்றி வளைத்து அனைவரையும் கைது செய்கின்றனர்.

முத்துவும் மனோஜும் நாங்கள் இந்த கடையில் பொருள்கள் வாங்க தான் வந்தோம். எங்களை எதற்கு கைது செய்கிறீர்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் போலீஸ் நம்பாமல் அவர்களையும் சேர்த்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போகின்றனர். பொருட்களை பாதி விலைக்கு விற்றவர்கள் மனோஜ் ஷோரூமில் ஏமாற்றியவர்கள் தான் என்பது அப்போது முத்துவுக்கும் செல்வத்திற்கும் தெரியாமல் ஜெயிலுக்குள் இருக்கின்றனர்.
சிறகடிக்க ஆசை சீரியல் செய்த சாதனை.. எல்லா இடத்திலும் No. 1.. காரணம் எதிர்நீச்சல் சீரியலா?
அந்த நேரத்தில் அங்கு பொருட்களை ஏமாந்த கடைக்காரர்கள் ஒவ்வொருத்தராக ஸ்டேஷனுக்கு வந்து தங்களுடைய பொருள்கள் எதுவோ அதை எடுத்து செல்ல, மனோஜ் ஓடி வந்து என்னுடைய பொருள் எதுவும் இல்லை சார் என்று சொல்ல மனோஜ் குரலை கேட்டதும் முத்து மறைந்திருந்து அவர் பேசுவது எல்லாவற்றையும் வீடியோவாக எடுக்கிறார்.

பிறகு ஏமாந்த கடைக்காரர் எங்களிடம் ஏமாற்றியதில் முத்துவும் செல்வமும் இல்லை என்று சொன்னதை கேட்டு போலீஸ் அவர்களை விடுதலை செய்ததும் வீட்டுக்கு வந்த முத்து ஸ்டேஷனில் நடந்த அனைத்தையும் படம் போட்டு காட்ட எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். ரோகிணி இடம் முத்து உன் புருஷன் இப்படி பிசினஸ் பண்றதுக்கு தான் நீ இவன பார்த்து எங்கெல்லாம் கத்துக்க சொன்னியா என்று கேட்க ரோகிணி பதில் எதுவும் சொல்லாமல் நிற்கிறார்.

அப்போது இந்த நாலு லட்சம் பணம் எப்படி வந்தது என்று ஸ்ருதி கேட்டதும் முத்து மனோஜை மடக்கி பிடித்து கேள்வி கேட்கிறார். ஒருவழியாக மனோஜ் உண்மையை சொல்லலாம் என்று வரும்போது விஜயா இடையில் புகுந்து மனோஜை அடித்து யார்கிட்ட கடன் வாங்குன என்று அழுத்தி கேட்க மனோஜ் என் பிரண்டு சந்தோஷ் கிட்ட கடன் வாங்கினேன் என்று பொய் சொல்கிறார்.

விஜய் திரும்பவும் அவனை அடிக்க ரோகிணி விட்டுடுங்க ஆண்டி அவன் ஏமாந்து போய் தான் நிக்கிறான் யாரையும் ஏமாத்தலையே என்று சப்போர்ட் செய்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications