சிறகடிக்க ஆசை: உன் கையால இனி தண்ணி கூட குடிக்க மாட்டேன்.. அண்ணாமலை அதிரடி.. விஜயா மாறிட்டாங்களே

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை ஜூலை 18ஆம் தேதி என்ன நடக்கப்போகிறது என்று ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மனோஜ் பற்றிய உண்மைகள் எல்லாம் அண்ணாமலைக்கு தெரிய வந்ததும் மனோஜ் விஜயாவை அடித்து வெளுத்து வாங்குகிறார்.

அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்களுக்கு இருக்கிறது. ஒரு வழியாக கடந்த இரண்டு வாரமாக இழுத்துக் கொண்டிருந்த நகை பஞ்சாயத்து நாளையோடு முடிவுக்கு வருகிறது. மீனாவின் நகையை விற்றுவிட்டு கவரிங் நகையாக மாற்றி வைத்தது. மனோஜ் மற்றும் விஜய் என்ற உண்மை மொத்த குடும்பத்திற்கும் தெரிய வைக்க வேண்டும் என்று முத்து பல பிளான்களை போட்டு இருந்தார்.

Television Siragadikka aasai serial

ஆனால் எல்லாமே முதலில் சொதப்பலாகி இருந்தது. கடைசியில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து பிளான் போட்டு அது மூன்று நாட்களாக இழுத்து கொண்டிருக்கிறது. அதுவும் ஒவ்வொரு நாளும் உண்மை தெரிய வந்து விடுமா? என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே மனோஜ் தான் நகையை மாற்றி வைத்தது என்ற உண்மை ரோகிணிக்கு தெரிய வந்திருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் ரோகிணி மனோஜை தப்பிக்க வைத்து விடலாம் என்று முயற்சி செய்திருந்த முயற்சியையும் முத்து உடைத்திருக்கிறார். அதாவது எலுமிச்சை பழத்தை வைத்து எப்படியாவது உண்மையை வரவேற்க வேண்டும் என்று அதில் நூல் கட்டி அங்கே இங்கே சுற்றி வருவது போல முத்து வித்தை காட்டிக் கொண்டிருந்த நிலையில் இதை உண்மை என்று நம்பி பதறிப் போய் தூக்கம் வராமல் மனோஜும் விஜயாவும் சிக்கி தவித்துக் கொண்டிருந்தனர்.

இதனால் அந்த எலுமிச்சை பழத்தை தூக்கி வெளியே போட்டு விட வேண்டும் என்று விஜயாவும் மனோஜும் போட்ட பிளானால் கையும் களவுமாக மொத்த குடும்பத்தின் முன்பும் மாட்டி இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து நாளைக்கு என்று வெளியான வீடியோவில் மனோஜ் தான் உண்மையான நகையை எடுத்தது யார் என்பதை பற்றி உளறி விட, உண்மை தெரிந்ததும் அண்ணாமலை மனோஜை போட்டு அடிக்கிறார்.

அதோடு இந்த உண்மைகளை எல்லாம் என்னிடம் சொல்லவே இல்லையே இன்னும் எத்தனை நாளைக்கு தான் என்னை ஏமாற்றிக் கொண்டே இருப்பாய் என்று அண்ணாமலை விஜயாவிடம் கோபப்படுகிறார். இனி உன் கையால் நான் பச்ச தண்ணி கூட வாங்கி குடிக்க மாட்டேன், உன்னிடம் நான் பேசவும் மாட்டேன் என்று சொல்ல அதற்கு கோபப்பட்டது போல நடிக்கும் விஜயா நான் தானே இந்த வீட்டில் பிரச்சனையாக இருக்கிறேன்.

இந்த வீட்டில் பிரச்சனைக்கு காரணமே நான் தானே என்று சொல்லி கோபமாக அறைக்குள் சென்று கதவை மூடி கொள்கிறார். இதனால் தற்கொலை முயற்சி செய்வது போல விஜயா நாடகம் ஆடப்போகிறார் என்று தெரிய வருகிறது. இதனால் இதை நம்பி அண்ணாமலையும் முத்து குடும்பமும் ஏமாறப்போகிறதா? அல்லது முத்து இதற்கு என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+