சிறகடிக்க ஆசை: மனோஜுக்கு வந்த லெட்டர்.. எழுதியது இவர்தானா? ரோகிணிக்கு சிக்கல் வந்தாச்சு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க ஆசை சீரியலில் ஜூலை 27ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மனோஜுக்கு ஒரு கடிதம் ஒன்று வந்திருக்கிறது. அதை பார்த்து ரோகிணி அதிர்ச்சியாகி இருக்கிறார். அந்த கடிதத்தில் என்னதான் இருக்கிறது என்று பார்க்கலாம்.
அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே நகை திருடிய விஷயம் வீட்டிற்கு தெரிய வந்திருக்கும் நிலையில் மனோஜ் மற்றும் விஜயா வீட்டில் மாட்டி இருக்கின்றனர். ஆனாலும் வழக்கம்போல விஜயா நாடகம் போட்டு இந்த முறையும் தப்பி இருக்கிறார்.

அதே நேரத்தில் அண்ணாமலை விஜயாவிடம் பேச மாட்டேன் என்று முரண்டு பிடித்துக் கொண்டு இருந்ததால் முத்து பாட்டியை கூட்டிட்டு வந்திருக்கிறார். பாட்டி வீட்டிற்கு வந்து அண்ணாமலை மற்றும் விஜயாவை பேச வைத்திருக்கிறார். அதோடு வீட்டிற்குள் புருஷன் பொண்டாட்டிக்குள் அன்பு அதிகரிப்பதற்காக எல்லா தம்பதிகளும் தோசை ஊற்ற சொல்லி அவர்களை மாறி மாறி ஊட்டி கொள்ள சொல்லி இருக்கிறார்.
அதை தொடர்ந்து நாளைக்கான எபிசோடில் மனோஜ் ஷோரூமில் இருக்கும் போது அவருக்கு ஒரு மொட்டை கடிதம் வந்திருக்கிறது. அதில் உங்களை சுற்றி சூழ்ச்சிகள் இருக்கிறது. உங்க பக்கத்தில் இருக்கவங்கள நம்பாதீங்க. அதனால் உனக்கு பாதிப்பு வரப்போகிறது பார்த்து கவனமாக இருங்கள் என்று அதில் எழுத பட்டிருக்கிறது. அதை படித்துக் கொண்டிருக்கும் போது ரோகிணி என்னவென்று விசாரிக்க அதை பார்த்து மனோஜ் பதறிப் போய் விடுகிறார்.
அந்த கடிதத்தை பார்த்து ரோகிணி மற்றும் வித்யா இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதே நேரத்தில் இந்த கடிதத்தை யார் எழுதியிருப்பார்கள் என்று குழப்பமும் இருக்கிறது. அதே நேரத்தில் மனோஜிடம் இது யாராக பிராங் பண்ணுவாங்களா இருக்கும் என்று ரோகிணி சமாளித்து பார்க்கிறார். ஏற்கனவே கடந்த வாரத்தில் மனோஜ் கடையில் வேலை பார்க்கும் இருவர் மனோஜ் சரியான ஏமாளியாக இருக்கிறார், அதனால் நாம நம்முடைய வேலையை காட்டிவிடலாம் என்று சிரித்துக் கொண்டிருந்தனர்.

இதனால் அவர்கள் தான் இந்த கடிதத்தை எழுதி இருக்கிறார்களா? அல்லது ஜெயிலுக்கு போன ரோகிணியின் பழைய பிஏவா என்ற கேள்வியும் இருக்கிறது. எது எப்படியோ இனி ரோகிணிக்கு அடுத்த பிரச்சனை வரப்போகிறது. இதுவரைக்கும் ரோகிணி மாட்டாமல் இருக்கும் நிலையில் இப்போது மனோஜ் வீட்டிற்கு கொடுக்க இருக்கும் 29 லட்சம் ரூபாய் ரோகிணி அப்பாவிடம் கேட்க சொல்லி விஜயா சொல்லி இருக்கிறார். ஏற்கனவே ரோகிணி சிட்டியிடம் வட்டிக்கு அதிகமான பணம் வாங்கி இருக்கிறார். அதனால் இனி எப்படி இந்த பிரச்சனையில் இருந்து வெளியே வரப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications