உண்மையை சொல்லப்போன ரோகிணிக்கு விஜயா வைத்த செக்.. பயத்தில் மீனாவின் அம்மா..திடீர் டுவிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலில் தனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது என்பதை மனோஜ் இடம் சொல்வதற்காக ரோகிணி முயற்சி செய்கிறார்.

ஆனால் அந்த நேரத்தில் சரியாக அங்கே வந்த விஜயா இந்த பிளானை தடுத்து புது பிரச்சனையை உண்டு பண்ணுகிறார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

siragadikka aasai serial July 28th promo and Episode Highlights

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை 28ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில், அறையில் அப்செட் ஆக இருக்கும் ரோகிணி தன்னுடைய கடந்த கால கதையை எல்லாம் நிச்சயம் மனோஜிடம் சொல்ல வேண்டும் என்று போன் செய்து பேச மனோஜ் ரோகிணி பேசுவதை கேட்காமல் ரொமான்ஸ் ஆக பேசிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் அங்க வந்த வரும் விஜயா முகூர்த்த புடவை நகையெல்லாம் எடுத்துக்கொண்டு போவதற்காக பார்வதியோடு வந்து கதவை தட்டுகிறார். அப்போது மேற்கொண்டு பேச முடியாமல் ரோகிணி போனை கட் பண்ணி வைத்து விடுகிறார். அப்போது விஜயா புடவையை கொடுத்து சீக்கிரம் கட்டிக் கொண்டு வந்து விடு என்று சொல்ல ரோகிணி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கிறார்.

அதைத்தொடர்ந்து விஜயா கோலம் போட தெரியாமல் இருக்க அங்கே வந்த உறவினர்கள் சிலர் இந்த கல்யாணமாவது மனோஜ்க்கு நடக்குமா? மனோஜ் இங்க தான் இருக்கானா? இல்லையா? என்று விஜயாவை கிண்டல் செய்கின்றனர். பிறகு மீனா வந்து கோலம் போட அய்யர் மீனாவை பாராட்ட அதைக் கேட்டு விஜயா கடுப்பாகிறார்.

அப்போது அண்ணாமலை முத்துவுக்கு போன் போட்டு சீக்கிரம் வர சொல்ல, மீனா முத்துவுக்கு போன் பண்ணியதும் முத்து வருகிறேன் என்று சொல்லி வைத்து விடுகிறார். எனக்கு எப்பவும் முதல்ல சவாரி தான் முக்கியம் என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் மீனா முத்துவுக்கு போன் பண்ணி நம்ம சைட்ல இருந்து ஏதாவது கல்யாணத்துக்கு செய்யணும் என்று சொல்ல, அதெல்லாம் நாம ஒன்னும் செய்ய வேண்டாம். நான் யார் கேட்டாலும் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி முத்து போனை வைக்கிறார்.

அப்போது ரோகிணி தன்னுடைய பிரண்டிடம் சொல்லி நீ மனோஜை கூட்டிட்டு வா நான் அவன்கிட்ட எல்லா உண்மையை சொன்ன பிறகு தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று சொல்ல, வித்யா மனோஜ் ரூமுக்கு வந்து அவரிடம் ரோகிணி உங்ககிட்ட பேசணும்னு சொல்லி வர சொன்னா என்று சொல்லி பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் விஜய் அங்கு வந்து விடுகிறார்.

அப்போது அங்கு வரும் விஜயா மனோஜ் ரூமில் உனக்கு என்ன வேலை நீ ரோகினி பிரண்டு தானே நீ அவளை போய் ரெடி பண்ணு போ என்று அவளை திட்டி விரட்டி விடுகிறார். இன்னொரு பக்கத்தில் ரவியும், சீதாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சீதா பூ கட்ட கத்துக்கோ அப்போதான் உன் மனைவிக்கு கட்டிக் கொடுக்க முடியும் என்று சொல்ல, அதான் நீ இருக்கியே என்று ரவி சொல்லி கிண்டல் செய்கிறார்.

ரவி சீதாவை பார்த்து சொன்னதை கேட்டு சீதாவின் அம்மா அதிர்ச்சியாகிறார். பிறகு சீதாவை கூப்பிட்டு சும்மா சும்மா அந்த தம்பிகிட்ட பேசிட்டு இருக்காத மீனாவோட மாமியார் பார்த்தா என்ன ஆகும் என்று கோபப்பட, சீதா நீ போமா நானும் ரவியும் மாலை கட்டி கொண்டு வாரோம் என்று அனுப்பி வைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+