சிறகடிக்க ஆசை: நகை பற்றி பாட்டியிடம் பேசிய முத்து.. வீட்டிற்கு வந்ததும் விஜயாவுக்கு கிடைத்த அவமானம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை மூன்றாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம். அதில் முத்து பாட்டியை தன்னுடைய வீட்டிற்கு கூட்டிட்டு வரும்போது ஒரு பெண் கழுத்தில் அதிகமான நகை போட்டு இருப்பதை பார்த்து, பாட்டி கேட்ட கேள்விக்கு முத்து பதில் கொடுத்து இருக்கிறார். அதை தொடர்ந்து வீட்டிற்கு பாட்டி வந்ததும் விஜயாவை அவமானப்படுத்தி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனா தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் பண்ணி பாட்டியின் பிறந்தநாளுக்கு வரச் சொல்லி கூப்பிடுகிறார். அதோடு முத்துவும் மீனாவின் அம்மாவை வீட்டிற்கு வரச் சொல்லி கூப்பிடுகிறார். இங்கே தான் சாப்பாடு நீங்கள் எந்த கிஃப்ட்டும் வாங்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும் மீனாவின் அம்மா சும்மா போனா நல்லா இருக்காது ஒரு புடைவையாவது வாங்கிட்டு போகலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

television siragadikka aasai serial

அதைத் தொடர்ந்து முத்து பாட்டியை பஸ் ஸ்டாண்டிலிருந்து வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார். அப்போது முத்து அமைதியாக இருப்பதை பார்த்து பாட்டி என்ன ஆச்சு? ஏன் நீ சோகமா இருக்க? என்று கேட்க, அதற்கு முத்து ஒன்னும் இல்ல சரியா தூங்கல அதான் டயர்டா இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் சிக்னலில் கார் நிற்கும்போது அங்கு ஒரு பெண் கழுத்தில் அதிகமான நகைகளை போட்டுக் கொண்டு வருவதை பார்த்து பாட்டி இந்த காலத்தில் இவ்வளவு நகை போட்டுட்டு தைரியமா வெளியே வராங்களே இப்படி நகை போட்டு இருக்கிறதை பார்த்தாலே திருடன் வீடு வரைக்கும் வந்துருவானே என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

television siragadikka aasai serial

அதற்கு முத்து அவங்க கிட்ட நகை இருக்குனு காட்டுறதுக்காக இப்படி போட்டு இருக்காங்க என்று சொல்ல, அதற்கு பாட்டி இது உண்மையான தங்க நகையா? இல்ல கவரிங் நகையானு தெரியல, இப்போ தங்க நகையையும் கவரிங்கையும் கண்டுபிடிக்கவே முடியலையே என்று பேசிக் கொண்டிருக்க, முத்து ஆமாம் கண்டுபிடிக்க முடியவில்லை... கண்டிப்பாக நான் கண்டுபிடிப்பேன் என்று சொல்ல, பாட்டி நீ எதுக்கு அவங்க நகையை கண்டுபிடிக்க போற என்று சொல்ல முத்து சமாளித்து விடுகிறார்.

பிறகு வாசலில் அண்ணாமலை அம்மாவை வரவேற்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறார். அதற்கு பிறகு மீனா ஆரத்தி எடுக்க செல்ல விஜயா அதை தடுத்து வாங்கி ரோகினியையும் ஸ்ருதியிடமும் கொடுத்து ஆரத்தி எடுக்குமாறு சொல்கிறார். ஆனால் பாட்டி மீனாவை வர சொல்லி மூன்று பேரும் சேர்ந்து எடுக்குமாறு சொல்கிறார்.

television siragadikka aasai serial

வீட்டிற்கு வந்ததும் வீட்டில் தனக்காக அலங்காரம் செய்து வைத்திருப்பதை பார்த்து பாட்டி சந்தோஷப்பட, இது உங்களுக்காக மாமா செஞ்சது என்று மருமகள்கள் எல்லோரும் சொல்ல பாட்டி தன்னுடைய மகன் அண்ணாமலையை பாராட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது பாட்டி என் பிறந்தநாளுக்கு யார் எனக்கு மனசுக்கு பிடிச்ச மாதிரி கிப்ட் தராங்களோ அவங்களுக்கு நானும் ஒரு கிப்ட் கொடுப்பேன் என்று சொல்ல எல்லோரும் ஆச்சரியப்படுகின்றனர்.

television siragadikka aasai serial

விஜயா அது என்ன கிப்ட் என்று கேட்க பாட்டி பக்கத்தில் வர சொல்லி அது கொடுக்கும் போது தெரியும் என்று பல்பு கொடுக்கிறார். அடுத்து ரோகிணியும் மனோஜ் பேசிக் கொண்டிருக்கும் போது நீதானே பாட்டியின் மூத்த பேரன் உனக்கு அவங்களுக்கு என்ன பிடிக்கும்னு தெரியுமா? என்று கேட்க, மனோஜ் அது எனக்கு சரியா தெரியாது. ஆனால் சின்ன வயசுல இருந்தே பாட்டி இப்படி போட்டி வைப்பாங்க.

அதுல முத்து மட்டும் தான் ஜெயிப்பான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு ரோகிணி பாட்டிக்கு நான் மேக்கப் போட்டு விட போறேன். அவங்க என்னுடைய வயசு குறைகிற மாதிரி எனக்கு பரிசு வேணும்னு கேட்டாங்கல்ல.. அது இதுதான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் முத்து வீட்டில் இருந்தால் பிரச்சனை வரும் என்று வீட்டை விட்டு கிளம்பி வெளியே போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+