விஜயா சொன்ன வார்த்தையை கேட்டு அதிர்ச்சியில் அண்ணாமலை.. பதறும் மீனா.. மனோஜின் திடீர் மனமாற்றம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை நான்காம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் பாட்டியின் பிறந்தநாளுக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்று எல்லோரும் பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் முத்து வீட்டை விட்டு வெளியே போனதை நினைத்து மீனா பதறி போய் இருக்கிறார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மனோஜ் பாட்டிக்கு என்ன கிப்ட் கொடுக்கலாம் என்று யோசித்து கொண்டு இருக்கும்போது அவருக்கு சின்ன வயசில் பாட்டியின் நவரத்தின மாலை தொலைந்து போன விஷயம் ஞாபகத்திற்கு வர, அதையே வாங்கிக் கொடுக்கலாம் என்று சொன்னதும் ரோகிணியும் சூப்பர் என்று சொல்லி வாங்க கிளம்புகின்றனர்.

அப்போது மனோஜ் ஏற்கனவே பாட்டிக்கு வாங்கி வைத்த புடவையை எடுத்துக்க அதை ரிட்டன் பண்ணிடலாம். நவரத்தின மாலை வாங்கிட்டா புடவை எதுக்கு? பணம் மிச்சமாகும் என்று சொல்கிறார். அடுத்ததாக விஜயா அண்ணாமலையிடம் வந்து உங்க அம்மாவுக்கு என்ன கிப்ட் தர போறீங்க என்று கேட்க, அண்ணாமலை அதான் அம்மா வேண்டாம் என்று சொல்லிவிட்டாங்களே என்று சொல்ல, விஜயா அவங்க அப்படித்தான் சொல்லுவாங்க இருந்தாலும் நாம வாங்கி கொடுத்தா சந்தோஷப்படுவாங்க என்று சொல்ல இதைக் கேட்டு அண்ணாமலை அதிர்ச்சி அடைகிறார்.
அதற்கு விஜயா எனக்கு அத்தை மேல அக்கறை இருக்கு என்று சொல்லிவிட்டு வெளியே வந்து பார்வதிக்கு போன் போட்டு உன் வீட்டில் பையன் ரூமில் ஒரு டிவி இருக்குல்ல அதை பேக் பண்ணி எடுத்துட்டு வா, எங்க அத்தைக்கு கிப்ட்டா கொடுத்து ஸ்பெஷல் கிப்ட் நான் வாங்கிக்கிறேன். அதுல உனக்கு பங்கு தருகிறேன் என்று பேசுகிறார். அடுத்ததாக ஸ்ருதி ரவியிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது எனக்கு கிப்ட் எல்லாம் வேண்டாம், ஆனால் சின்ன வயசுல இருந்து நான் போட்டின்னு வந்துட்டா நான் தான் ஜெயிப்பேன்... இப்பவும் நான் தான் ஜெயிக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அண்ணாமலை மீனாவிடம் முத்து பற்றி விசாரிக்க, விஜயா அவன் எங்கேயாவது குடிக்க போய் இருப்பான் நாலு காலோட வருவான் பாருங்க என்று நக்கலாக பேச, மீனா அவர் அப்படி எல்லாம் பண்ண மாட்டாரு என்று சொல்கிறார்.

பிறகு சீதா கொண்டு வந்து கொடுத்த போனை வைத்து மீனா பாட்டியை வீடியோ எடுக்கிறார். அடுத்து பாட்டியும் முத்து பற்றி விசாரிக்க முத்துக்கு மீனா போன் பண்ணி பார்க்க போனை முத்து எடுக்காததால் ஒருவேளை சோகத்தில் குடிக்க போயிட்டாரோ என்று மீனா சந்தேகப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications