சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட்
சென்னை: விஜய் டிவியின் டிஆர்பி ஹிட் சீரியலான சிறகடிக்க ஆசை தற்போது அடுத்தடுத்த அதிரடி திருப்பந்தல் வந்திருக்கிறது. குறிப்பாக மனோஜ் - ரோகிணி உறவில் ஏற்பட்டிருக்கும் புதிய பிரச்சனை ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஸ்ருதியின் வாழ்க்கையை சீரழிக்க நீத்து போடும் சதித்திட்டம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரோகிணி வீட்டுக்கு சென்ற மனோஜ்
சமீபத்திய எபிசோடில், ரோகிணிக்கு பணம் கொடுப்பதற்காக அவரது வீட்டிற்கு செல்கிறார் மனோஜ். வழக்கம்போல் வாசலில் நின்றபடியே பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறுகிறார்.
ஆனால் ரோகிணியோ, "வாசலில் ஏன் நிற்கிறீங்க... உள்ளே வாங்க" என்று அழைத்து செல்கிறார். வீட்டுக்குள் சென்ற மனோஜுக்கு தனது கையால் சமைத்த உணவை பரிமாறுகிறார் ரோகிணி.
வேறு வழியின்றி மனோஜும் அமர்ந்து சாப்பிடுகிறார். அப்போது மனம் உடைந்து பேசும் ரோகிணி, "நான் இப்படி நிம்மதியா உட்கார்ந்து சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு. உங்க அம்மா என்னை அவமானப்படுத்திய நாளிலிருந்து இன்னும் அதிலிருந்து வெளியே வர முடியல" என்று உருக்கமாக கூறுகிறார்.

அதிர்ச்சி கொடுத்த ரோகிணி
அதன்பிறகு எதிர்பாராத வகையில் மனோஜிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறார் ரோகிணி. "நாம இருவரும் தனியாக ஒரு வீடு எடுத்துக்கிட்டு சந்தோஷமா வாழலாம்" என்று சொல்கிறார்.
ஆனால் மனோஜோ அதற்கு சம்மதிக்காமல், "அம்மா இதை ஏற்க மாட்டாங்க. நீ எனக்கு டைவர்ஸ் கொடுத்துடு" என்று நேரடியாக கேட்கிறார். மனோஜின் இந்த பேச்சு ரோகிணிக்கு பெரிய அதிர்ச்சியாக அமைகிறது.

டைவர்ஸ்க்கு 5 லட்சம் ரூபாய் டீல்
ஆனால் அதற்கு ரோகிணி உடனே சம்மதிக்கவில்லை. "உன்னை ஜெயிலில் இருந்து வெளியே எடுக்க நான் 5 லட்சம் ரூபாய் செலவு பண்ணியிருக்கேன். அந்த பணத்துக்காக இன்னும் வட்டி கட்டிக்கிட்டு இருக்கேன். அந்த 5 லட்சத்தை திருப்பி கொடுத்தா உடனே டைவர்ஸ் கொடுத்திடுறேன்" என்று அதிரடி நிபந்தனை விதிக்கிறார்.
இதைக் கேட்ட மனோஜ் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தாலும், இறுதியில் அதற்கும் ஓகே சொல்லிவிடுகிறார். இதனால் மனோஜ் - ரோகிணி உறவு உண்மையிலேயே முடிவுக்கு வரப்போகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நீத்து போடும் கொடூர பிளான்
இதேநேரத்தில் மற்றொரு பக்கம் இன்னும் ஆபத்தான சம்பவம் அரங்கேறுகிறது. ஒரு ரெஸ்டாரண்டில் காத்திருக்கும் நீத்து, ஸ்ருதியின் முன்னாள் காதலனான பிஜுவை சந்திக்கிறார்.
ஸ்ருதியை ஒருதலைப்பட்சமாக காதலித்த பிஜு, காதலை ஏற்க மறுத்ததால் ஆசிட் வீசும் அளவுக்கு சென்றவர். அதற்காக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவித்திருக்கிறார். தற்போது சிறையில் இருந்து வெளியே வந்துள்ள பிஜுவை சந்திக்கும் நீத்து, அவரிடம் ஒரு அதிர்ச்சி டீல் போடுகிறார்.
மோசமான பிளான்
"நான் சொல்றதை நீ செஞ்சா ஸ்ருதி உனக்கு கிடைப்பா. ஸ்ருதி உனக்கு கிடைச்சா ரவி என்கிட்ட வந்துருவான்" என்று கூறி பிஜுவின் பழைய காதலை மீண்டும் தூண்டுகிறார். அதோடு நிற்காமல், "ஸ்ருதியின் உயிர் மாதிரி இருக்கும் ரெஸ்டாரண்டை எப்படியாவது மூடணும்" என்று திட்டமிடுகிறார். இதற்கு பிஜுவும் உடனடியாக சம்மதம் தெரிவிக்கிறார்.

ஸ்ருதிக்கு காத்திருக்கும் ஆபத்து என்ன?
ஏற்கனவே மோசமான பின்னணி கொண்ட பிஜு மீண்டும் ஸ்ருதியின் வாழ்க்கைக்குள் நுழைந்திருப்பது ரசிகர்களை பதற வைத்துள்ளது. நீத்து மற்றும் பிஜு சேர்ந்து தீட்டும் திட்டம் வெற்றி பெறுமா? ஸ்ருதியின் ரெஸ்டாரண்ட் உண்மையிலேயே மூடப்படுமா?
ரவி - ஸ்ருதி உறவில் மீண்டும் புயல் வீசப்போகிறதா? மனோஜ் உண்மையிலேயே ரோகிணிக்கு 5 லட்சம் கொடுத்து டைவர்ஸ் வாங்கப்போகிறாரா? என்ற பல கேள்விகளுடன் சிறகடிக்க ஆசை சீரியல் அடுத்த வார எபிசோடுகளுக்கான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஒருபுறம் டைவர்ஸ் டிராமா... மறுபுறம் பழிவாங்கும் சதி... இன்னொரு புறம் உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடிய முன்னாள் காதலன் என, சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது முழுக்க முழுக்க பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications