சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் நாளுக்கு நாள் பரபரப்பான திருப்பங்களுடன் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறது. குறிப்பாக ரேகா - சத்யா காதல் விவகாரம் தற்போது (Siragadikka Aasai serial june 17th episode) கதையின் மையமாக மாறியுள்ள நிலையில், இன்றைய எபிசோட் முழுக்க முழுக்க சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு அதிரடி, சஸ்பென்ஸ் மற்றும் எமோஷனல் காட்சிகளால் நிரம்பியிருந்தது.

சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
ரேகாவை அவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் வைத்து கண்காணித்து வருவதாக சத்யாவுக்கு தகவல் கிடைத்ததும், அவரை எப்படியாவது மீட்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார் முத்து. ஏற்கனவே சத்யாவின் காதலுக்காக பல முறை உதவியிருந்த முத்து, இந்த முறையும் உயிரை பணயம் வைத்து ஒரு துணிச்சலான திட்டத்தை போடுகிறார்.
டாக்டராக மாறிய மீனா
ரேகாவை மீட்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக முத்து, மீனா, சத்யா மற்றும் செல்வம் ஆகியோர் மருத்துவமனை ஊழியர்கள் போல வேடமிட்டு ஆந்திராவுக்கு செல்கிறார்கள்.
ஆம்புலன்ஸை செல்வம் ஓட்ட, மீனா டாக்டர் உடையில் களமிறங்குகிறார். முத்துவும் சத்யாவும் கம்பவுண்டர் கெட்டப்பில் மருத்துவமனைக்குள் நுழைகின்றனர். மருத்துவமனை வாசலிலேயே பலர் அவர்களிடம் கேள்வி கேட்டு விசாரிக்கிறார்கள். ஆனால் முத்துவும் மீனாவும் தங்களது புத்திசாலித்தனத்தால் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லி சமாளிக்கின்றனர்.

ரவுடிகளை ஏமாற்றிய மீனா
இறுதியாக ரேகா அனுமதிக்கப்பட்டிருந்த அறை வரை சென்றதும் புதிய பிரச்சனை காத்திருந்தது. சிந்தாமணியின் அடியாட்கள் அங்கே பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தனர். யார் நீங்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன பரிசோதனை செய்யப் போகிறீர்கள்? என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டனர்.
அப்போது மீனா சரளமாக ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்கிறார். அவர் பேசிய விதத்தையும் தன்னம்பிக்கையையும் பார்த்த அடியாட்கள் சந்தேகத்தை விட்டுவிடுகிறார்கள். அதன் பின்னர் அறைக்குள் சென்ற முத்துவும் மீனாவும் ரேகாவிடம் பேசுகிறார்கள். "லேப் டெஸ்ட் எடுக்கணும்... உடனே அழைத்துச் செல்லணும்" என்று கூறி ரேகாவை வெளியே கொண்டு வர திட்டமிடுகிறார்கள்.
மயக்க மருந்து அடித்து எஸ்கேப்
ஆனால் வெளியே வந்ததும் எதிர்பாராத சிக்கல் உருவாகிறது. அந்த நேரத்தில் ரேகாவை கண்காணித்து வந்த அடியாட்கள் மீண்டும் சந்தேகப்பட ஆரம்பிக்கிறார்கள். அப்போது முத்து போட்ட பிளான் வேலை செய்கிறது.
மயக்க மருந்தை அடியாட்களின் முகத்தில் தெளித்துவிட்டு அனைவரையும் மயங்க வைக்கிறார்கள். சில நொடிகளில் அங்கிருந்தவர்கள் சுருண்டு விழ, முத்து, மீனா, சத்யா மற்றும் ரேகா அங்கிருந்து தப்பித்து ஓடுகிறார்கள்.
கடைசி நிமிடத்தில் வந்த ரேகாவின் அப்பா
எல்லாம் சரியாக முடிந்துவிட்டது என்று நினைத்த நேரத்தில் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. ரேகாவின் தந்தை மருத்துவமனைக்கு வந்து விடுகிறார். இதனால் சில நொடிகள் பதற்றம் நிலவுகிறது.
ஆனால் முத்து மற்றும் மீனா அங்கு ஒளிந்து கொண்டு சரியான நேரத்தை பார்த்து ரேகாவை ஆம்புலன்ஸில் ஏற்றி தப்பிக்கிறார்கள். சிறிது நேரத்தில் அறைக்குள் சென்ற ரேகாவின் தந்தை, அங்கே யாரும் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். மயங்கி கிடந்த அடியாட்களை எழுப்பியபோது, "மூன்று பேர் வந்து ரேகாவை அழைத்துச் சென்றுவிட்டார்கள்" என்ற தகவலை கேட்டு கோபத்தில் கொதிக்கிறார்.
பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்ற முத்து
ரேகாவை மீட்டது மட்டும் போதாது. அவரை பாதுகாப்பாக வைத்திருக்கவும் வேண்டும் என்பதை முத்து நன்றாக புரிந்து கொண்டிருந்தார். அதனால் நேராக தனது ஊரில் இருக்கும் பாட்டி வீட்டிற்கு ரேகாவையும் சத்யாவையும் அழைத்துச் செல்கிறார்.
அங்கு இருவரையும் பார்த்த பாட்டி முதலில் அதிர்ச்சியடைந்தாலும், முத்துவின் வார்த்தையை நம்புகிறார். "நான் சொல்லுற வரைக்கும் இவங்க இங்கதான் இருக்கட்டும். நாங்க எல்லாத்தையும் சரி பண்ணிட்டு வர்றோம்" என்று முத்து சொல்கிறார்.

பாட்டி காலில் விழுந்து அழுத ரேகா
வீட்டிற்கு வந்ததும் ரேகா மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார். பாட்டியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார். வீட்டில் நடந்த பிரச்சினைகள், தன்னுடைய காதலுக்காக சந்தித்த கஷ்டங்கள், தந்தையின் எதிர்ப்பு என அனைத்தையும் நினைத்து கண்ணீர் விடுகிறார். பாட்டியும் அவரை ஆறுதல் கூறி, "கவலைப்படாதே... எல்லாம் நல்லபடியாக நடக்கும்" என்று நம்பிக்கை கொடுக்கிறார். இந்த காட்சிகள் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
அடுத்து என்ன நடக்கப் போகிறது?
ரேகா தற்போது பாதுகாப்பாக இருந்தாலும், அவரை தேடி ரேகாவின் அப்பாவும் அம்மா சிந்தாமணியும் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். முத்து ரேகாவை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தால் என்ன ஆகும்? சிந்தாமணி அடுத்ததாக என்ன திட்டம் போடுவார்? சத்யா - ரேகா காதலுக்கு இறுதியில் வெற்றி கிடைக்குமா? இருவரின் திருமணத்தை முத்து நடத்தி வைப்பாரா?
என்ற கேள்விகளுடன் சிறகடிக்க ஆசை சீரியல் அடுத்த கட்ட பரபரப்புக்கு நகர்ந்துள்ளது. முத்துவின் இந்த துணிச்சலான முயற்சி தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
-
மாஸ்டர் மகேந்திரன் பாவம்.. 3 நிமிட வீடியோவால் மாறிய வாழ்க்கை! இனிதான் பிரச்சனை.. சிறகடிக்க ஆசை நடிகர் ஓபன் -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!














Click it and Unblock the Notifications