மாட்டிக்கிட்டாரு மலேசியா மாமா.. மீனாவால் வீட்டில் வெடிக்கும் பூகம்பம்.. ரோகிணி ஆட்டம் அவ்வளவுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூன் இருபதாம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணியின் மாமாவாக நடிக்க வந்த கறி கடைக்காரரை மீனா மார்க்கெட்டில் பார்த்திருக்கிறார்.
அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி எப்போதுதான் மாட்டுவார்? ஒவ்வொரு முறையும் தப்பித்துக் கொண்டே இருக்கிறாரே என்று ரசிகர்கள் ஃபீல் பண்ணி வருவது இயக்குனருக்கு தெரிந்து விட்டதோ என்னவோ இந்த முறையும் ரோகிணியின் மாமாவாக நடிக்க வந்த கறிக்கடைக்காரரை வைத்து புது பிரச்சனையை உருவாக்கி இருக்கிறார். ஆனால் இந்த முறையாவது ரோகிணி மாட்டுவாரா? அவரைப் பற்றிய ரகசியம் வெளியே வருமா இல்லையா? என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

அந்த வகையில் ரோகிணி வசீகரனால் மிரட்டப்பட்டு வந்த நிலையில் வசீகரனை சிட்டியை வைத்து மிரட்டி வைக்க ரோகினி சொல்லியிருந்த நிலையில் சிட்டி இடம் இருந்து தப்பித்து போன வசீகரன் ரோட்டில் சென்று கொண்டிருந்த பாட்டி மீது பைக்கை மோதிவிட்டு நிற்காமல் போக, அதை பார்த்து துரத்தி வந்த முத்து வசீகரனை பிடித்து அடித்து போலீசிடம் ஒப்படைத்திருக்கிறார்.
ஏற்கனவே தன்னுடைய காரில் வரும்போது ஒரு பெண்ணை தவறாக பேசிக் கொண்டிருந்தார் என்று முத்துவிற்கு நினைவு இருக்கிறது. அதோடு மீண்டும் ஒரு பெண் மீது வண்டியை ஏற்றுவிட்டு நிறுத்தாமல் போய்க் கொண்டிருக்கிறார் என்று கோபத்தில் முத்து வசீகரனை அடித்து போலீசில் போட்டுக் கொடுத்து இருக்கிறார். அதனால் ரோகிணி தப்பித்து விட்டோம் என்று நிம்மதியோடு இருக்கும் நிலையில் அடுத்த வாரமே அவருக்கு பிரச்சனை வர இருக்கிறது.

ஏற்கனவே கடந்த வாரத்தில் விஜயா டான்ஸ் கிளாஸ் தொடங்கியது குறித்த கலகலப்பான காட்சிகள் நடந்து வரும் நிலையில் இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் கடை தெருவில் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது அங்கு எதிர் தரப்பில் ரோகினியின் மாமாவாக நடிக்க வந்த கறி கடைக்காரர் நிற்பதை பார்த்து விடுகிறார்.
அதுபோல அவரும் மீனாவை பார்த்து விட ஐயோ இது ரோகினி வீட்டில் இருந்த பொண்ணு தானே இந்தப் பொண்ணு நம்மை பார்த்துட்டே, நாம வேற கனடாவுக்கு போறோம்னு சொல்லி இருக்கோம்... இப்ப என்ன பண்ண என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ரோகிணியின் மாமாவை நோக்கி மீனாவும் போய்க்கொண்டிருக்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

வழக்கம்போல இந்த முறையும் கறிக்கடைக்காரர் ஏதாவது ஏமாற்றி அங்கிருந்து தப்பித்துப் போகப் போகிறாரா? அல்லது நான் இப்போதுதான் ஊருக்கு வந்தேன் என்று ஏமாற்றி மீண்டும் வீட்டிற்கு போகப் போகிறாரா? ஒருவேளை மீனாவோடு அவரும் வீட்டிற்கு வந்தால் அதைப் பார்த்து ரோகிணியின் நிலைமை என்னாகும்? என்ற பல்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கிறது என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications