சிறகடிக்க ஆசை: பிளாஷ்பேக் பற்றி பேசி முத்து கேட்ட கேள்வி! அழுத அண்ணாமலை.. மனோஜ் கொடுத்த அதிர்ச்சி
சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூன் 27 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் முத்து குடித்துவிட்டு வந்து தன்னுடைய பிளாஷ்பேக் கதையை சொல்லி வீட்டில் எல்லோரிடமும் கேள்வி கேட்டு பார்க்கும் ரசிகர்களையும் கண்கலங்க வைத்து இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்து வீட்டிற்கு குடித்துவிட்டு வந்து மீனாவிடம் புலம்பி கொண்டிருப்பதை அண்ணாமலை பார்த்து விடுகிறார். அண்ணாமலையை பார்த்ததும் என்ன மன்னிச்சிருப்பா என்று முத்து மன்னிப்பு கேட்கிறார். எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று முத்து பேசிக் கொண்டிருக்கும்போது வீட்டில் எல்லோரும் கூடிவிட முத்து மனோஜ் பார்த்து நானாடா இந்த வீட்டை ஆள ஆசைப்படுறேன்? என்னை பார்த்து எப்படிடா இப்படி கேட்க உனக்கு மனசு வந்துச்சு? நீ எப்படிடா இப்படி கேட்கலாம் என்று அடிக்கப் போகிறார்.

பிறகு எல்லோரும் பிடித்துக் கொள்கிறார்கள். என் அப்பா இருக்குற வரைக்கும் நான் இங்கேதான் இருப்பேன். அப்பா இருக்கிற இடம் தான் எனக்கு கோவில், அப்பா இருக்கிற வரைக்கும் தான் இது கோவில் சாமி இல்லன்னா அது ஒரு கட்டடம் தான். என் சின்ன வயசுலயே கூட்டிட்டு போய் பாட்டி வீட்டுல தள்ளிடீங்க அப்போ இருந்து இப்ப வரைக்கும் எனக்கு இந்த வீட்டு மேலேயயோ ரூம் மேலையோ ஆசை வந்தது கிடையாது.

என் அப்பாவுக்காக தான் நான் இந்த வீட்டுக்கு வரேன். அவர் இல்லைன்னா நான் இந்த வீட்டு பக்கம் தலை வெச்சி கூட படுக்க மாட்டேன் என்று சொல்கிறார். முத்து அழுது கொண்டே பழைய கதைகளை பேசியதை பார்த்து அண்ணாமலை கண் கலங்க விஜயா அவன் போதையில் உளறிக்கிட்டு இருக்கான் போய் படுங்க என்று எல்லாரையும் அனுப்பி வைக்கிறார். அடுத்த நாள் காலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக முத்து பட்டை போட்டுக்கொண்டு பூஜை எல்லாம் செய்து பக்தி பழமாக மாறி இருக்கிறார்.

அப்போது அப்பா வீடு கட்ட முடியாம கஷ்டப்படுறது தான் எனக்கு கஷ்டமா இருக்கு என்று முத்து சொல்ல, விஜயா சம்மந்தி அம்மா பெரிய மனசு பண்ணி கொடுக்க வந்த பணத்தையும் நீ தான் கெடுத்துவிட்ட இன்று கிட்ட, அதற்கு முத்து ஸ்ருதி அப்பாகிட்ட இருந்து ஒரு ரூபாய் கூட வாங்க கூடாது என்று முத்து சொன்னதும் ஸ்ருதி ஏன் எதுக்கு என்று கோபப்பட, அவங்க அப்பா நம்ம அப்பாவை எவ்வளவு அவமானப்படுத்தி இருக்காருன்னு சொல்லுடா என்று ரவியிடம் முத்து சொல்கிறார்.

அதற்கு பிறகு இனிமே ரூம் பிரச்சனையை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்று முத்து சொன்னதும் மனோஜ் ஏன்டா நீயும் உன் பொண்டாட்டியும் வீட்டை விட்டு போக போறீங்களா? என்று கேட்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications