சிறகடிக்க ஆசை: உங்களுக்கு சமைக்க முடியாது! திமிராக பேசிய மீனா.. ஆடி போன விஜயா.. முத்து மாறிட்டாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை எட்டாம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மீனா இனி நான் இந்த வீட்டில் யாருக்காகவும் சமைக்க மாட்டேன் என்று சொல்ல மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர்.

அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் ஒரு வாரமாக ரோகிணி வீட்டில் மாட்டுவாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்போடு வைத்துவிட்டனர். ஆனால் கடைசியில் வழக்கம்போல இந்த முறையும் ரோகிணி வீட்டில் மாட்டாமல் தப்பித்து விட்டார். இதுவரைக்கும் சின்ன விஷயத்தையும் கண்டுபிடித்துவிடும் மீனாவும் முத்துவும் கூட இந்த முறை சொதப்பலோ சொதப்பி வைத்திருக்கிறார்கள்.

Television Kollywood Siragadikka aasai serial

இந்த வாரம் முழுக்க ஏமாற்றியது போதாது என்று அடுத்த வாரத்தில் க்ரிஷ் பிறந்தநாள் வருகிறதாம். அதற்கு ரோகிணியை கூப்பிட்டு இருக்கிறார். கூடவே மீனா ஆன்ட்டியையும் கூப்பிட வேண்டும் என்று க்ரிஷ் சொல்லிக் கொண்டிருக்க, என்ன விஷயம் என்று மீனா மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் ரோகிணி க்ரிஷ் பிறந்தநாளில் மாட்டுவாரா என்று மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தப் போகிறார்கள்.

இது பார்க்கும் ரசிகர்களை கடுப்பாக்கி இருக்கிறது. சீரியல் என்றாலும் ஒரு லாஜிக் வேண்டாமா? என்றுதான் கேள்வி கேட்க வைத்திருக்கிறது. ரவி ரோகிணி வேணும் என்று பால் டம்ளரை தூக்கிப் போட்டதை பார்த்த பிறகும் அது குறித்து முத்து ரோகிணியிடம் கேள்வி கேட்கவில்லை. ரோகிணி க்ரிஷிடம் பாசமாக பழகுவதை பார்த்து அவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை வந்துவிட்டது என்று லாஜிக்கே இல்லாமல் முத்து உருட்டிக் கொண்டிருக்கிறார்.

Television Kollywood Siragadikka aasai serial

இது அதிகமான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் மீனாவை விஜயா அசிங்கமாக திட்டியதற்கு முத்து இனி இந்த வீட்டில் மீனா யாருக்காகவும் சமைக்க மாட்டா. அப்பாக்காக மட்டும்தான் சமைப்பா என்று சொன்னது இப்போதுதான் இயக்குனருக்கு ஞாபகம் வந்திருக்கிறது போல. உடனே நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் மீனா வீட்டில் மாமாவை தவிர வேற யாருக்காகவும் இனி நான் சமைக்க மாட்டேன்.

வீட்டில் கேஸ் அடுப்பு அங்க, இருக்கிறது காய்கறி எல்லாம் பிரிட்ஜில் இருக்கிறது யாருக்கு என்ன வேணுமோ எடுத்து சமைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்களுக்கு ஜூஸ் வேணும்னா அதை போட்டு குடிச்சுக்கோங்க என்று கெத்தாக பேசுவது போன்று காட்சிகளை வைத்து இருக்கிறார்கள். இது நாளைக்கான எபிசோட்டை எதிர்பார்க்க வைக்கிறது.

Television Kollywood Siragadikka aasai serial

ரோகிணி ஏற்கனவே கல்யாணம் முடிந்து ஒரு குழந்தைக்கு அம்மா என்ற உண்மை வீட்டில் தெரிந்தால் மொத்த கதையும் முடிந்துவிடும் என்பதால் இயக்குனர் ஒவ்வொரு முறையும் ரோகிணி மாட்டுவது போன்று காட்டி விட்டு கடைசியில் ரசிகர்களுக்கு டாட்டா சொல்லி கதையை மாற்றி விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த மாதிரி தான் இந்த முறையும் பார்த்த ரசிகர்களை இப்படியே பார்த்துக் கொண்டிருங்கள் என்று ஏமாற்றி விட்டு அடுத்த பிரச்சனையை தொடங்க வைத்திருக்கிறார்.

அதே நேரத்தில் தற்போது வெளியான ப்ரோமோவில் மீனாவின் மாற்றத்தை பார்த்து முத்து அதிர்ச்சியாகி இருக்கிறார். அவருக்கே போன வாரத்தில் தான் பேசியது மறந்துவிட்டது போல . ஒரு பக்கம் விஜயா மீனா சமைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாளே என்று அதிர்ச்சியில் இருக்கும் போது முத்துவும் என்ன நடக்குது இந்த வீட்டில் என்று குழப்பத்தில் இருக்கிறார். அதே குழப்பத்தோடு ரசிகர்களும் நாளை வரை பொறுமையாக இருப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+