சிறகடிக்க ஆசை சீரியலில் இனி இதுதான் கதை? அடுத்தடுத்து வரும் காதல் ட்ராக்.. காரணம் இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது பற்றி பார்க்கலாம். இந்த சீரியலில் புதியதாக வித்யா மற்றும் மீனாவின் தங்கை இருவருக்கும் இரண்டு ஜோடிகள் அறிமுகமாகி இருக்கிறார்கள். அவர்களை வைத்து இனி கதை நகர்வது போன்று மாற்றப்பட்டிருக்கிறது.

பொதுவாக சீரியல்களில் லாஜிக் பார்க்கக் கூடாது என்று சொல்வார்கள். ஆனாலும் ரசிகர்களை சோதிக்கும் வகையில்தான் சில சீரியல்களின் கதைகள் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல சில சீரியல்களில் மட்டும் டிஆர்பியை மையப்படுத்தி கதை நகர்ந்தாலும் ஓரளவிற்கு ரசிகர்கள் மனநிறைவு ஏற்படும் வகையில் கதையை கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள்.

siragadikka aasai serial vijay tv

அந்த வகையில் சிறகடிக்க ஆசையில் ரோகிணி எப்போது மாட்டுவார் என்று எதிர்பார்த்து இருக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துக் கொண்டிருந்தாலும் இந்த சீரியலை சுவாரசியமாக்குவதற்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது அண்ணாமலை குடும்பத்தை பற்றி மட்டுமே கதையை காட்டிக்கொண்டு இருந்தால் ரசிகர்கள் எப்படியும் ரோகிணி எப்போது மாட்டுவார்? முத்துவின் குழந்தை பருவ சம்பவம் என்ன நடந்தது என்று கேள்வி கேட்ட தொடங்கி விடுவார்கள் என்பதற்காக இப்போது மீனாவிற்கு புது எதிரி ஒருவரை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

அதுபோல முத்துவுக்கு டிராபிக் போலீஸ் ஒருவரை எதிரியாக கொண்டு வந்திருக்கிறார்கள். இது போதாது என்று ஏற்கனவே வில்லனாக இருக்கும் சிட்டி சத்யாவிற்கு பிரச்சனை கொடுப்பது போன்று கதை நகர்த்துகிறார்கள். அதனால் ரோகிணி இப்போதைக்கு வீட்டில் மாட்டப் போவதில்லை.

siragadikka aasai serial vijay tv

காரணம் ரோகிணி பற்றிய உண்மைகள் தெரிய வந்துவிட்டால் சீரியலின் மொத்த கதைகளும் முடிந்துவிடும். அதனால் இப்போதைக்கு ரோகிணி பற்றி ரசிகர்களை யோசிக்க விடாத வகையில் பல அதிரடியான திருப்பங்களை வரும் வாரங்களில் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ரோகிணியின் பிரண்டு வித்யாவிற்கு முருகன் என்ற ஒரு கேரக்டரை ஜோடியாக கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களுடைய அலப்பறைகள் அவ்வபோது வருகிறது. அதுவும் வித்யாவிற்கு முருகன் மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அதை வித்யா மீனாவிடம் சொல்லி இருந்தாலும் ரோகிணியிடம் மறைத்து கொண்டிருக்கிறார்.

siragadikka aasai serial vijay tv

இதனால் வித்யா காதலுக்கு மீனா தான் ஹெல்ப் பண்ணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வித்யா பின்னாடி இப்போது சுற்றிக் கொண்டிருக்கும் முருகன் ஆரம்பத்தில் மீனா பின்னாடி சுற்றியவர்தான்‌. அதுபோல முத்துவுக்கும் பழக்கமானவர் தான். அதனால் இவர்களுடைய காட்சிகள் கலகலப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் மீனாவின் தங்கை சீதாவிற்கு டிராபிக் போலீஸ் தான் ஜோடி என்று தெரிகிறது. ஏற்கனவே முத்துக்கும் டிராபிக் போலீஸ்க்கும் சண்டை இருந்தாலும் இனி அவர் மீனா வீட்டில் மருமகனாக வரும்போது என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

siragadikka aasai serial vijay tv

ஏற்கனவே முத்து மீது டிராபிக் போலீஸ்காரர் அருண் கோபத்தில் இருக்கிறார். அது போதாது என்று முத்து நேற்றைய எபிசோடில் செல்வத்தோடு சாப்பிடும்போது கூட போலீஸ்காரரை வம்பு இழுத்து கிண்டல் செய்திருந்தார். இதனால் போலீஸ்காரர் முத்து மற்றும் செல்வத்தின் வண்டி நம்பரை நோட் பண்ணி இருக்கிறார்.

siragadikka aasai serial vijay tv

அதனால் அடுத்த வாரத்திலேயே அவர் பிரச்சனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ ரோகிணி பற்றி கேள்வி எழுப்பும் ரசிகர்களின் மனதை மாற்றுவதற்காக சீரியலில் காதல் ட்ராக் அடுத்தடுத்து வருகிறது. இது சுவாரசியத்தை ஏற்படுத்துமா? அல்லது சொதப்ப போகிறதா? என்று பார்க்கலாம்.

siragadikka aasai serial vijay tv
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+