சிறகடிக்க ஆசை: பிசினஸ் தொடங்கிய மறுநாளே மனோஜ் செய்த தில்லாலங்கடி வேலை.. முத்து காட்டிய அதிரடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் புதிய ரெஸ்டாரன்ட் ஒன்றை இன்றைய எபிசோடில் திறந்திருக்கிறார். அதை தொடர்ந்து நாளைக்கு என்று வெளியான வீடியோவில் பிசினஸ் தொடங்கிய மறுநாளே கடைக்கு போகாமல் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் விஜய் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று வெளியான வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் முத்து ஒரு முதியவருக்கு உதவி செய்திருந்த நிலையில் அவர் முத்துவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது நான் என்னுடைய ஷோரூமை விற்கப் போகிறேன் என்று சொல்ல,

உடனே முத்து அதை தன்னுடைய அண்ணனுக்கு வேண்டும் என்று கேட்டு மனோஜுக்காக புது பிசினஸ் வைப்பதற்கு ரெடி செய்து கொடுத்திருக்கிறார். ஆனால் பிசினஸ் தொடங்குவதற்கு முன்பே மனோஜ் மற்றும் ரோகிணி முத்துவை பிரித்து விட்டிருக்கின்றனர். ஆனாலும் அதை நினைத்து வருத்தப்படாத முத்து மற்றும் மீனா இன்று மனோஜின் ஷோரூம் திறப்பு விழாவில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
ஆனாலும் வழக்கம்போல விஜயா மீனாவை ஷோரூம் திறப்பு விழாவில் வைத்தும் அவமானப்படுத்துகிறார். ஆனால் முத்துவின் பாட்டி மீனாவுக்கு சப்போட்டாக விஜயாவை திட்டி விடுகிறார். இது ஒரு பக்கம் இருக்க நாளைக்கு என்று வெளியான வீடியோவில் மனோஜ் வேலைக்கு போகாமல் வீட்டில் தூக்கிக் கொண்டு இருக்க அதை பார்த்து அண்ணாமலை இவன் பிசினஸ் தொடங்கிய பிறகும் இப்படி வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தால் எப்படி பிசினஸில்கவனம் செலுத்துவான் என்று கேட்கிறார்.
உடனே விஜயா மனோஜை சென்று எழுப்பி கொண்டிருக்கிறார் அப்போது முத்து கோபமாக ரூமுக்குள் போகிறார். ஏற்கனவே மனோஜ் மற்றும் ரோகிணி இந்த வாரம் முழுக்க ஹாலில் தான் படுக்க வேண்டும் என்று பாட்டி சொல்லி இருக்கிறார். ஆனாலும் தற்போது வெளியான வீடியோவில் மனோஜ் ரூமுக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறார். இதனால் முத்து தன்னுடைய ரூம் என்று சண்டை போட போகிறாரா? அல்லது பிசினஸ் சரியாக கவனி என்று திட்ட போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications