சிறகடிக்க ஆசை: விஜயாவுக்கு கிடைத்த அதிர்ச்சி.. மீனாவுக்கு தெரிய வந்த பெரிய உண்மை.. கோபத்தில் ஸ்ருதி, ரவி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial March 16th Episode ) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் 13 ஆம் தேதிக்கான எபிசோடில், வீட்டிற்கு வேலைக்கு வந்த பெண் விஜயாவை லெப்ட் ரைட் வாங்கி இருக்கிறார். அதே நேரத்தில் மீனாவிற்கு ஒரு பெரிய உண்மை தெரிய வந்து இருக்கிறது. அதைக் கேட்டு ஸ்ருதி மற்றும் ரவி இருவரும் கோபத்தில் இருக்கின்றனர். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடின் (Siragadikka Aasai serial today episode) ஆரம்பத்தில், ரவி முத்து மனோஜ் மூன்று பேரும் குடித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது மனோஜ் தன்னுடைய கல்யாணம் நின்னு போய்விட்டது என்று புலம்பி கொண்டு இருக்க, முத்து தன்னுடைய நண்பர் ஒருவர் கல்யாணம் செய்த கதையை சொல்லி மனோஜை இன்னும் குழம்பு வைத்துக் கொண்டிருக்கிறார்.
விஜயாவுக்கு அவமானம்
அதை தொடர்ந்து அடுத்த நாள் காலையில் விஜயா வீட்டிற்கு வேலைக்கு கேட்டிருந்த பெண் வருகிறார். வீட்டுக்கு வந்ததும் அவர் விஜயாவை இன்டர்வியூ செய்வது போல கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார். அப்போது விஜயா இந்த வீட்டில் மூன்று பசங்களும் நாங்க மட்டும்தான் இருக்கிறோம் என்று சொன்னதும் உங்க மருமகள் இல்லையா? அவங்க எங்க போனாங்க? எப்போ திரும்பி வருவாங்க? என்று கேள்வி கேட்கிறார்.
அதோடு, மருமகள்கள் இல்லன்னா எனக்கு பாதுகாப்பு இருக்காது அப்போ நீங்க தான் நான் சமைத்து முடிக்கிற வரைக்கும் கிச்சன் வாசலில் காத்திருக்கணும். மூணு நேரம் சமைக்கிறதுக்கு 10,000 தரணும். சனி ஞாயிறு விடுமுறை தரணும். எனக்கு காபி போட்டு வைக்கணும் என்றெல்லாம் கண்டிஷன் அடுக்கிக் கொண்டே போக, அதனால் விஜயா அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு அந்த பெண்ணை வேலைக்கே வேண்டாம் என்று சொல்ல அந்த பெண்ணும் இதைத்தான் நானும் நினைச்சேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போய் விடுகிறார். பிறகு அண்ணாமலை உனக்கு மருமகள்கள் இருந்தவரைக்கும் இதுபோல தொந்தரவு இல்ல, இப்போ வீட்டில் மருமகள் இல்லை என்றதும் அடுத்தவங்க எல்லாம் அசிங்கப்படுத்தி விட்டு போகிறார்கள் என்று திட்டி விட்டு போகிறார்.
மன்னிப்பு கேட்ட முத்து
அதை தொடர்ந்து இந்த விஷயத்தை முத்து மீனாவிடம் சந்தோஷமாக வந்து சொல்கிறார். உடனே மீனா அத்தை பாவம் அவங்களுக்காக நான் எனக்கு தெரிஞ்சவங்களை வேலைக்கு அனுப்புறேன் என்று சொல்ல, அப்படி மட்டும் செய்யாத. அப்படி செஞ்சா அவங்க நல்லா சமைச்சா அம்மா உன்னை தேடவே மாட்டாங்க. நீ அந்த வீட்டுக்கு வந்தா கூட உள்ள விடவே மாட்டாங்க என்று சொன்னதும் அப்போ என்னையும் இந்த வீட்டில் வேலைக்காரங்களா தான் நீங்களும் நினைக்கிறீஙகளா என்று மீனா கோபப்படுகிறார்.
மீனா சொன்ன விஷயம்
முத்து எவ்வளவோ சமாதானம் சொன்னாலும் மீண்டும் மீண்டும் கோபப்பட்டுக் கொண்டிருக்க கடைசியில் முத்து தோப்புக்கரணம் போட்டு மீனாவை சமாதானம் செய்கிறார். அதைத்தொடர்ந்து ஸ்ருதி ரெஸ்டாரண்டில் ரவி புதியதாக ஒரு உணவை சமைத்து அதற்கு ஸ்ருதியின் பெயரை வைத்து இருக்கிறார். அதை சாப்பிட்டு பார்த்ததும் ஸ்ருதி செமையா இருக்கிறது என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார்.
அதிர்ச்சியில் ஸ்ருதி
அப்போது அங்கு மீனா பதட்டமாக வருகிறார். என்ன ஆச்சு என்று ரவியும் ஸ்ருதியும் கேட்க, நீத்து ரெஸ்டாரண்ட் மூடிட்டா என்று நாம சந்தோஷப்பட்டோம் ஆனால் இப்போ அவ ஒரு பூக்கடை திறந்து இருக்கா அந்த கடைக்கு பூ சப்ளை பண்றது சிந்தாமணி தான். ஆனா அந்த கடைக்கு பெயர் ரவி பேரில் வைத்திருக்கிறா என்று சொன்னதும், ஸ்ருதி கோபப்படுகிறார். ரவி என்னதான் சமாதானம் சொன்னாலும் ஸ்ருதி சரியாகவில்லை. பிறகு இது பற்றி விஜயாவிடம் பேசுவதாக ரவி சொல்கிறார். இப்படியாக எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications