Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் 30ம் தேதிக்கான எபிசோடில், விஜயா மற்றும் மனோஜ் செய்த முட்டாள்தனமான விஷயம் மொத்த குடும்பத்திற்கும் தெரிய வந்திருக்கிறது. இதனால் அண்ணாமலை கோபப்படுகிறார். அதே நேரத்தில் சிந்தாமணி பேச்சை கேட்டு விஜயா செய்த செயலால் அவர் ஜெயிலுக்கு போக இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், விஜயாவும் மனோஜும் ரோகிணியை ஆள் வைத்து அடித்த சம்பவம் பெரிய பிரச்சனையாக மாறுகிறது. அதனால் ரோகிணி மாதர் சங்கத்தில் புகார் கொடுக்கிறார். அந்த புகாரின் அடிப்படையில், மாதர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் நேரடியாக விஜயாவின் வீட்டிற்கு வருகிறார்.

அவர் விஜயாவிடம், "நீங்கள் எதற்காக ரோகிணியை அடிச்சிங்க?" என்று கேட்கிறார். அதற்கு விஜயா, "நான் அடிக்கவே இல்லை" என்று மறுக்கிறார். பின்னர் அந்த பெண், ரோகிணியையே அழைத்து என்ன நடந்தது என்பதை சொல்லச் சொல்கிறார். அதற்கு ரோகிணி, "விஜயா என்னை சாட்டையால் அடித்தார், வலி தாங்க முடியாமல் கத்தினேன், அவர்கள் மாறி மாறி அடித்தாங்க" என்று பொய் சொல்கிறார்.

மனோஜ் வாயில் இருந்து வெளியான உண்மை

அப்போது மனோஜ் நடுவில் பேசிக் கொண்டு இருக்கும்போது, நீ தான் அடிச்சிட்டு இருக்கும்போதே மயக்கம் போட்டு விழுந்துட்டியே என்று உண்மையை ஒத்துக்கொள்கிறார். இதனால் சூழ்நிலை மாறுகிறது. பின்னர் விஜயாவும், "நான் நேரடியாக அடிக்கவில்லை, ஒருவரை வைத்து அடிக்க வைத்தேன்" என்று சொல்லி விடுகிறார்.

இதைக் கேட்ட மாதர் சங்க பெண், "உங்க வாயாலேயே உண்மையை சொல்ல வைக்கத்தான் ரோகிணியை இப்படி பேச சொன்னேன்" என்று தெரிவிக்கிறார். அந்த நேரத்தில் அண்ணாமலை கோபமாக விஜயாவையும் மனோஜையும் திட்டுகிறார். "ஒரு பெண்ணை இப்படி அடிக்க உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?" என்று கேட்கிறார்.

வழக்கு, மிரட்டல்

மாதர் சங்க பெண், "ரோகிணியை நீங்கள் கொடுமைப்படுத்தியதற்காக நான் கோர்ட்டில் வாதாடப் போகிறேன். உங்களுக்கு டைவர்ஸ் கிடைக்காது. இந்த வழக்கில் சிறை தண்டனை கூட கிடைக்கும்" என்று விஜயாவை மிரட்டி விட்டு போகிறார். பின்னர் ரோகிணி மனோஜிடம் சென்று "ஐ லவ் யூ மனோஜ்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

இந்த விஷயத்தை முத்துவும் மீனாவும், மனோஜின் டைவர்ஸ் வழக்கை பார்த்து வரும் வக்கீல் கிருஷ்ணாவிடம் சொல்லுகிறார்கள். அதற்கு அவர், இப்படி சிக்கிட்டாங்கனா இனி டைவர்ஸ் கிடைக்குறது கஷ்டம்.. உங்க அம்மாவுக்கு அறிவே இல்லையா ஏன் திரும்பத் திரும்ப இப்படி பண்ணிட்டே இருக்காங்க என்று திட்டுகிறார்.

சிந்தாமணி கூறும் திட்டம்

மறுபுறம் பார்வதி வீட்டிற்கு மீனா வருகிறார் அந்த நேரத்தில் அங்கு விஜயாகும் வருகிறார் மீனாவிடம் வக்கீல் என்ன சொன்னார் என்று விசாரிக்க அதற்கு நடந்த விஷயத்தை சொல்கிறார் பிறகு மீனா போனதும் சிந்தாமணி அங்கு வருகிறார். அவரிடமும் விஜயா நடந்த விஷயத்தை சொல்கிறார் அதற்கு சிந்தாமணி, "மாதர் சங்க பெண்ணை நைசாக பேசி சமாளிக்கலாம். பணம் கொடுத்தா சரியாகிடும்" என்று சொல்கிறார்.

விஜயா "பத்தாயிரமா? இருபதாயிரமா?" என்று கேட்க, சிந்தாமணி "அந்த அளவுக்கு வேலை ஆகாது, ஒரு லட்சம் கொடுக்கணும்" என்று சொல்கிறார். இதைக் கேட்டு விஜயா அதிர்ச்சி அடைகிறார். பிறகு பார்வதியிடம் பணம் கேட்கிறார். ஆனால் அவர் உதவ மறுக்கிறார். அதோடு இந்த மாதிரி பிளான் எல்லாம் நீங்க இனி என் வீட்டில் வைத்து போடாதீங்க என்று திட்டி விடுகிறார். அதற்கு சிந்தாமணி தான் பணத்தை ஏற்பாடு செய்து தருவதாக கூறுகிறார்.

கடைசியில் நடந்தது

கடைசியாக, பணத்தை எடுத்துக்கொண்டு விஜயா, மாதர் சங்க பெண்ணை ஸ்ருதியின் ரெஸ்டாரண்டுக்கு அழைத்து பேசுகிறார். அவர் முன்பு ரோகிணி செய்த தவறுகளை சொல்லி சமாளிக்க முயற்சிக்கிறார். ஆனால் அந்த பெண் அதற்கு சம்மதிக்கவில்லை.

அதனால் விஜயா தனது பையில் இருந்த பணத்தை எடுத்து, அவரின் பையில் வைத்து விடுகிறார். ஆனால் அந்த மாதர் சங்க பெண், இதை விஜயாவுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்து விடுகிறார்.

இதன் மூலம், விஜயா லஞ்சம் கொடுக்க முயன்றது நிரூபணமாகி விடுகிறது. இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது. அடுத்ததாக, இந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு விஜயா கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்திற்கு தெரியாமல் விஜயா செய்த செயல் இப்போ அவருக்கே மீண்டும் பிரச்சனையாக திரும்புகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+