மீனா மீது விழுந்த திருட்டுப்பழி.. பொறுமையை இழந்த முத்து.. இப்படியா பேசுவீங்க விஜயா? அண்ணாமலை சபாஷ்
சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலில் மார்ச் 30ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம். அந்த வகையில் ரோகிணியின் அப்பா பங்க்ஷன்க்கு வராததால் விஜயா கடும் கோபத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் ரோகிணி விஜயா மற்றும் அண்ணாமலையை மீண்டும் ஏமாற்றி விடுகிறார்.
மறுபக்கம் முத்து சரக்கு அடிப்பாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் பயந்து போய் இருந்த நிலையில் நான் என்னுடைய மனைவியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்று சொல்லி முத்து குடிப்பதை மறுத்துவிட்டார். ஆனால் ஃபங்ஷனில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது அதை பற்றி பார்க்கலாம்.

இந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரோகிணிக்கு நலங்கு வைத்து தாலி பிரித்து போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதே நேரத்தில் ரோகிணி அனுப்பிய ஆள் முத்துவை குடிக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்க முத்து சரக்கு ஊத்தி கையில் வைத்துக்கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் அண்ணாமலை முத்துவை காணாததால் ஷாக் ஆகி விடுகிறார்.
அப்போது மீனாவும் முத்து இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை தேடுகிறார். மறுபக்கத்தில் ரோகிணி விஜயாவை நினைத்து பயத்தில் இருக்கும்போது மண்டபத்திற்குள் முத்து இல்லாததை பார்த்த வித்யா ரோகிணியிடம் முத்துவை அந்த ஆளு குடிக்க கூட்டிட்டு போயிட்டாரு என்று சொன்னதும் ரோகிணிக்கு சந்தோஷம் வருகிறது. ஆனால் அதை அனுபவிக்க விடாமல் டக்கென்று விஜயா வந்து உங்க அப்பா எப்ப தான் வருவாரு? அவர் வருவாரா? இல்லையா? என்று கேட்க,

அதற்கு ரோகிணி நான் போன் பண்ணிட்டு தான் இருக்கேன் அத்தை ஃபோன் போகவில்லை என்று சொல்ல.. என்னை என்ன கேனச்சி நினைச்சுட்டு இருக்கியா? வரமாட்டார்னா வரலனு சொல்லி தொலைய வேண்டியதுதானே? ஸ்ருதியோட அம்மா கிட்ட வேற உங்க அப்பா வந்துருவாருன்னு சொல்லி வச்சிருக்கேன். அவங்க வேற கேட்டுக்கிட்டு இருக்காங்க என்று கோபப்படுகிறார்.
அதே நேரத்தில் மீனா, அண்ணாமலை, பரசு எல்லோரும் முத்துவை தேடி அலைகின்றனர். மீனா மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து பார்க்க அப்போது முத்து கையில் சரக்கு டம்ளரோடு எதிரில் இருப்பவர் குடித்துக் கொண்டு இருக்க அவருக்கு கம்பெனி கொடுத்துக் கொண்டிருக்கிறார். கடைசியில் அந்த நபர் நீங்க ஒரு வாய் கூட குடிக்கலையே என்று கேட்க,
அதற்கு முத்து குடிகாரன் இன்னொரு குடிகாரனை குடிக்க கூப்பிட்டால் நான் வரலைன்னு முகத்தில் அடித்த மாதிரி சொல்லக்கூடாது. அதனால்தான் நான் வந்தேன். என் பொண்டாட்டிக்கு என்னால எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கா. அதனால நான் குடிக்க மாட்டேன் என்று சொல்ல மீனா இதையெல்லாம் கேட்டு சந்தோஷப்பட்டு முத்துவை மேலே கூட்டிக்கொண்டு போக அண்ணாமலை பங்க்ஷன் எல்லாம் முடிஞ்சிட்டு வா, உள்ள போகலாம் என்று கூட்டிட்டு போகிறார்.

அந்த நேரத்தில் விஜயா ரோகிணி யை இழுத்து வந்து இப்ப உங்க அப்பா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு வா என்று சொல்ல, அதற்கு ரோகிணி ஆன்ட்டி அவர் எங்கே இங்கே இருக்கிறார்? என்று கேட்க, அதற்கு விஜயா அவர் வரலனு இப்பதான் உனக்கு தெரியுதா என்று கோபப்படுகிறார். அதற்கு அண்ணாமலை அந்த பொண்ணை எதற்கு திட்டிக்கிட்டு இருக்க? அந்த பொண்ணு அவங்க அப்பா வரலைன்னு கவலையில் தானே இருக்கும்? என்று சொல்ல,
அதற்கு ரோகிணி இப்போதைக்கு நீங்க தான் எனக்கு அப்பா அம்மா என்று சொல்லி அவர்கள் காலில் விழுந்து அழுவது போல டிராமா போடுகிறார். பிறகு வித்யாவோடு தனியா இருக்கும்போது ரோகிணி அழுது கொண்டு இருக்க, அதற்கு வித்யா தான் தனியா வந்துட்டியே இன்னும் எதுக்கு அழுது டிராமா பண்ணிட்டு இருக்குற என்று கேட்க, அதற்கு ரோகிணி எப்படி எல்லாம் பேசுறாங்க பாருடி என்று சொல்கிறார்.
அதோடு இன்னைக்கு எங்க அப்பா வரலன்னா என்னை வீட்டை விட்டு அனுப்பி வச்சிருவாங்க போல என்று சொல்ல, அதற்கு வித்தியா மனோஜ் உன் பேச்சை மட்டுமே கேட்கணும் என்றால் நீ மனோஜை கூட்டிட்டு தனி குடித்தனம் போயிடு.. இல்லன்னா இப்படித்தான் நீ தினமும் பயந்துட்டு இருக்கணும் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
அதைத் தொடர்ந்து நாளைக்கு என்று வெளியான வீடியோவில் ஸ்ருதி போட்டு இருந்த மாலையை மீனா எடுத்து பார்த்துக் கொண்டிருக்கும்போது ஸ்ருதியின் செயின் காணாமல் போய்விட்டது என்று வாசுதேவன் பிரச்சனை செய்து மீனாவை நீ தான் திருடுனியா என்று அவமானப்படுத்துகிறார். இதனால் பொறுத்துக்கொள்ள முடியாத முத்து வாசுதேவனை போட்டு அடித்து விடுகிறார். ஸ்ருதியின் பெற்றோர் நினைத்தபடியே பிரச்சனை வந்திருக்கிறது. ஆனால் இனி குடும்பம் உடைபட போகிறதா? இல்லையா? என்று அடுத்த வாரத்தில் பார்க்கலாம்.
-
பிரேம்ஜியுடன் காதலா? 40 வயது வரை அவர் கல்யாணம் பண்ணாத காரணம்.. ஓபனாக பேசிய சோனா! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications