சிறகடிக்க ஆசை: முத்து- மீனா உருப்படியாக செய்த வேலை.. கலங்கிய விஜயா! அண்ணாமலை கண்டுபிடித்த விஷயம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial May 11th episode update) சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று மே பதினொன்றாம் தேதிக்கான எபிசோடில், என்னதான் அசிங்கப்பட்டாலும் முத்துவும் மீனாவும் மீண்டும் விஜயாவையும் அண்ணாமலையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று பிளான் போடுகின்றனர். அதே நேரத்தில் எதிர்பார்க்காத சில சம்பவங்களும் நடந்து இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai serial episode) இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், முத்துவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது முத்து, என் கூட பேசாம உன்னால எத்தனை நாள் இருக்க முடியும் என்று கேட்க, அதற்கு மீனா நீங்க சண்டை போட்டுட்டு இருந்தா எப்போதான் வந்து பேசுவீங்க என்று நான் வெயிட் பண்ணிட்டு இருப்பேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

முத்து பிளான்
ஏற்கனவே விஜயா ஸ்ருதி வீட்டிலும், அண்ணாமலை மீனா வீட்டிலும் வசித்து வரும் நிலையில், இருவரும் நீண்ட நாட்களாக பேசிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். இதனால் இவர்கள் இருவரையும் பேச வைக்க வேண்டும் என்று முத்து மீனாவும் ப்ளான் போடுகின்றனர். விஜயாவை நேரடியாக அழைத்து வரலாம் என்று முத்து கூறினாலும், "உங்க அம்மா இங்கே வரமாட்டாங்க" என்று மீனா மறுக்கிறார். அதேபோல் அண்ணாமலையை சென்று பார்க்கச் சொன்னாலும் அவர் சம்மதிக்க மாட்டார் என்பது இருவருக்கும் தெரியும்.
இதையடுத்து முத்து ஒரு பிளானை சொல்கிறார். அண்ணாமலை குளிக்கும் நேரத்தில் அவரது மொபைல் போனை எடுத்து விஜயாவுக்கு ஒரு மிஸ்டு கால் விடுகிறார். அந்த மிஸ்டு காலை பார்த்ததும் விஜயா உடனே அண்ணாமலைக்கு போன் பண்ணுகிறார். பின்னர் இருவரும் பேசத் தொடங்குகிறார்கள். "எப்படி இருக்க?" என்று அண்ணாமலை கேட்க, "நன்றாக தான் இருக்கேன்" என்று விஜயா பதிலளிக்கிறார்.

ஏமாற்றும் விஜயா
பிறகு ஸ்ருதி வீட்டில் சாப்பாடு எப்படி இருக்கு? நல்லபடியா தூங்குறியா? என்றெல்லாம் அண்ணாமலை கேட்க, அதைக் கேட்டு விஜயா ரொம்ப எமோஷனலாகிறார். ஆனாலும் அதை எல்லாம் காட்டிக் கொள்ளாமல் இங்கே நான் ரொம்ப நல்லா இருக்கிறேன் ஆனா நாம எப்போ நம்மளுடைய வீட்டுக்கு போவோம் ?அதற்கான வேலைகளை முத்துவை பார்க்க சொல்லுங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அண்ணாமலைக்கு தெரிந்த விஷயம்
அதன் பின்னர் "எதற்காக மிஸ்டு கால் கொடுத்தீங்க?" என்று விஜயா கேட்க, "நான் போன் பண்ணினேனா?" என்று குழப்பமடைந்த அண்ணாமலை தனது போனை சரிபார்க்கிறார். அப்போது அருகில் முத்து மற்றும் மீனா இருப்பதை பார்த்து, இதெல்லாம் அவர்களுடைய வேலைதான் என்று புரிந்துகொள்கிறார். பிறகு அண்ணாமலை முத்துவை திட்டுகிறார் ஆனாலும் விஜயாவிடம் பேசியதால் தனக்கு மனபாரம் குறைந்த மாதிரி இருப்பதாகவும் சொல்கிறார்.
முத்துக்கு சர்ப்ரைஸ்
மற்றொரு பக்கத்தில், முத்து மற்றும் மீனா ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாசுக்கு போகிறார்கள். அங்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைத்து பதற்றமாக சென்ற அவர்கள், உள்ளே சென்று பார்த்தபோது பலரும் இருப்பதை கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். இதனால் முத்து சற்றே நிம்மதி அடைகிறார். அப்போது அந்த வகுப்பிற்கு ஸ்வேதா வருகிறார். "உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது" என்று முத்து முன்பே கூறியதை நினைவூட்டிய அவர், அந்த சர்ப்ரைஸ் என்னவென்றால், அந்த கிளாசில் இங்கிலீஷ் டீச்சரே இவர்தான் என்று சொல்கிறார். இதைக் கேட்ட முத்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்.
அதன்பின்னர், வகுப்பில் உள்ள அனைவரும் எழுந்து தங்களை பற்றி இங்கிலிஷில் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஸ்வேதா அறிவுறுத்துகிறார். அந்த நேரத்தில் முத்துவின் நண்பர் முருகன் அங்கு வருகிறார். அவர் தனது வருகைக்கான காரணத்தை கூறும்போது, "பொண்டாட்டி தொல்லை தாங்க முடியல, அதனால தான் இங்க வந்தேன்" என்று நகைச்சுவையாக பேசுகிறார். மேலும், தனக்கு ஆபீஸில் பதவி உயர்வு கிடைத்திருப்பதால் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியிருக்கும், அதனால் தான் தனது மனைவி இங்கிலிஷ் கற்றுக்கொள்ள அனுப்பியதாகவும் கூறுகிறார்.
அடுத்ததாக மீனா தான் பதவியில் இருப்பதால் பலரிடம் பேசுவதற்கு இங்கிலீஷ் பயன்படும் என்பதற்காக வந்ததாக சொல்கிறார். அதேபோல முத்து தன்னுடைய காரில் சவாரி வருபவர்களிடம் பேசுவதற்காகவும், தன்னுடைய வீட்டை திரும்ப பெறுவதற்காகவும் தான் இங்கிலீஷ் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எமோஷனலாக பேசுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications