சிறகடிக்க ஆசை: போதையில் ஜீவா பணத்தைப் பற்றி உளறிய மனோஜ்.. அவமானப்பட்டு நிற்கும் ரோகிணி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மே 11ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் புது பிசினஸ் தொடங்குவதற்குள் மனோஜ் கார் வாங்கிக் கொண்டு வந்து நிற்க அதற்கு பார்ட்டி வைக்கும் போது மனோஜ் குடித்துவிட்டு ஜீவாவிடம் வாங்கிய பணத்தை பற்றி உளறுகிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மனோஜும் ரோகிணியும் புது கார் வாங்கி கொண்டு வந்து வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு மனோஜ்
அம்மாவுக்கு போன் போட்டு ஆரத்தி கரைத்துக் கொண்டு வாங்க நாங்க புது கார் வாங்கி இருக்கோம் என்று சொன்னதும், விஜயா சந்தோஷத்தில் எல்லாரையும் நக்கல் செய்து அவமானப்படுத்திய படியே புது காருக்கு ஆரத்தி கரைத்துக் கொண்டு வர எல்லோரும் கீழே வருகின்றனர்.

புது காரை பார்த்ததும் இது எவ்வளவு என்று அண்ணாமலை விசாரிக்க 4 லட்சம் என்று மனோஜ் சொன்னதும் முத்து இந்த காருக்கு 2 லட்சம் தான் ஆகும். நான் தான் உங்களுக்கு கார் வாங்கி தரேன்னு சொன்னேனே இப்போ எதற்கு கார் வாங்கினீங்க? என்று கேட்க அதற்கு
மனோஜ் நாங்க பிசினஸ் பண்ண போறோம். அதுக்கு நாலு இடத்துக்கு போறதுக்கு கார் வேணும் என்று சொல்ல ரவி கார் வாங்கியதற்கு ட்ரீட் வை என்று சொல்கிறார்.
முதலில் ட்ரீட் வைக்க முடியாது என்று சொல்லும் மனோஜ் பிறகு ஆளுக்கு ஒரு பீர் வாங்கி தரேன் என்று சொல்கிறார். அதுபோல மூன்று பீர் வாங்கிகொண்டு அண்ணன் தம்பி மூன்று பேரும் மாடியில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது முத்து நான் இன்னைக்கு குடிக்க போறது இல்ல. நான் குடிக்காமலேயே நீங்க எல்லாரும் என்னை குடிச்சேன்னு வச்சு செஞ்சீங்க. இன்னைக்கு குடிக்கிற மூடு இல்ல என்று சொல்ல ரவி மற்றும் மனோஜ் குடிக்கின்றனர்.
நான் வாங்கிட்டு வந்த பீர் வேஸ்டா போயிடக் கூடாது என்று மனோஜ் ரெண்டு பீரை குடித்துக் கொண்டிருக்கும் போது அடுத்து என்ன பிசினஸ் செய்யலாம் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு முத்து 4 கார் வாங்கி வாடகைக்கு விடு என்று சொல்ல, அதற்கு மனோஜ் அதெல்லாம் வேண்டாம் இன்னொருத்தன் சொகுசா இருக்குறதுக்கு நான் கார் வாங்கணுமா? என்று சொல்கிறார்.
அடுத்த ரவி ஹோட்டல் பிசினஸ் தொடங்கு என்று சொல்ல, அதெல்லாம் முடியாது இன்னொருத்தன் நாக்கை எல்லாம் நம்பி இன்வெஸ் பண்ண முடியாது என்று சொல்கிறார். அதோடு "நானே இந்த பணத்தை எவ்வளவு கஷ்டப்பட்டு அவா கிட்ட இருந்து வாங்கினேன்.." என்று சொல்ல அதிர்ச்சியான முத்து, "என்ன சொன்ன யாருகிட்ட இருந்து பணம் வாங்குன? அவான்னு சொல்ற" என்று கேட்க,
அதற்கு மனோஜ் நான் ரோகிணி அப்பாவை தான் சொன்னேன். ரோகிணி கிட்ட இருந்து வாங்குனதை தான் அவா என்று சொன்னேன் என மனோஜ் சமாளித்து விடுகிறார். மறுபக்கத்தில் மீனா, ரோகிணி, ஸ்ருதி மூவரும் டீ குடித்தபடியே மேலே எல்லாரும் பிசினஸ் பற்றி பேசிக்கொண்டு இருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதோடு இன்னைக்கு எல்லாரும் குடிக்க போறாங்க. நான் ரவிக்கு ஒரு பீர் குடிக்க பெர்மிஷன் கொடுத்திருக்கிறேன் என்று ஸ்ருதி சொல்கிறார்.
அதற்கு ரோகிணியும் ஆமா நானும் மனோஜ்க்கு ஒரு பீர் குடிக்கிறதுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறேன். ஆனால் முத்து அப்படி கிடையாது இன்னைக்கு நல்ல குடிச்சிட்டு வருவாரு அவருக்கு பெர்மிஷன் வாங்கணும் என்று அவசியமும் கிடையாது என்று சொல்ல, மீனா இன்னைக்கு அவர் குடிக்க மாட்டாருனு எனக்கு தோணுது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் ஸ்ருதி ரவிக்கு போன் போட்டு நேராயிடுச்சு கீழே வா என்று சொல்கிறார். ரோகிணியும் மனோஜ்க்கு போன் போட்டு கீழே வா என்று சொல்கிறார். ரோகிணி ஃபோன் பண்ணுனதும் போதையில் இருக்கும் மனோஜ் மாடியிலிருந்து குதிக்க போக முத்து அவரை கைத்தாங்கலாக மாடியில் இருந்து கூட்டிட்டு வருகிறார். அப்போது ரோகினி நான் சொன்னேன்ல முத்து நடக்க முடியாமல் தள்ளாடிட்டு வராரு பாருங்க என்று சிரிக்க அதற்கு ஸ்ருதி தள்ளாடிட்டு வரது உங்க புருஷன்.
அவரை தான் முத்து கைதாங்கலாக கூட்டிட்டு வராரு என்று நோஸ்கட் செய்ய ரோகிணி அதிர்ச்சியில் அவமானப்பட்டு நிற்கிறார். பிறகு
ரூமுக்கு வா என்று ரோகிணி மனோஜை கூப்பிட மனோஜ் ஹாலில் எல்லாரும் முன்னாடியும் போதையில் அட்ரா சிட்டி செய்ய கோபமான ரோகிணி மனோஜை அடித்து ரூமுக்கு கூட்டிட்டு போகிறார். ரவி ஸ்டடியாக இருப்பதால் நீ தப்பிச்சா என்று ஸ்ருதி கூட்டிக்கொண்டு போகிறார்.
எல்லாரும் போன பிறகு நீங்க எவ்வளவு குடிச்சீங்க என்று மீனா முத்துவிடன் கேட்க முத்து நான் குடிக்கவே இல்லை என்று சொல்ல மீனா பொய் சொல்லாதீங்க. உண்மைய சொல்லுங்க என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications