சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க ஆள் வந்தாச்சு! மீனாவுக்கு வந்த சப்போர்ட்.. ரோகிணிக்கு செம பல்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மே 16ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பது இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் மீனாவை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்து அவருடைய அம்மாவை விஜயா அவமானப்படுத்த கடைசியில் விஜயாவுக்கு பிரச்சனை கொடுப்பதற்காக முத்துவின் பாட்டி மீண்டும் ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கல்யாண நாளை மறந்துட்டீங்களே என்று மீனா முத்துவிடம் சண்டை போட முத்து நாம இருவரும் சந்தோஷமாக மாலை மாற்றிய கல்யாணம் தான் எனக்கு ஞாபகம் இருக்கிறது என்று சொல்ல, மீனா சந்தோஷப்படுகிறார். பிறகு இருவரும் எப்போது முதல் முதலாக பார்த்துக் கொண்டார்கள், ஆரம்பத்தில் இவர்கள் இருவருக்கும் வந்த பிரச்சனைகள் எல்லாவற்றையும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

Siragadikka aasai serial May 16th promo and episode full update

அப்போதும் மீனா முதலில் உங்களை பார்க்கும் போது பொறுக்கி என்று திட்டினேனே என்று சொல்ல, அதற்கு முத்து ஆமாம் இப்பவும் நான் பொறுக்கியா இருக்கேனா?? என்று கேட்க அதற்கு மீனா இப்போ நீங்க எனக்கு மனசுக்கு பிடிச்ச புருஷன் என்று சொல்கிறார். பிறகு அடுத்த நாள் மீனா அண்ணாமலைக்கு காபி கொடுத்துக் கொண்டிருக்கும்போது மீனாவின் அம்மா வீட்டிற்கு வர அண்ணாமலை அவருடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது விஜயாவிடம் மீனாவின் அம்மா பேச விஜயா அவரை அவமானப்படுத்துவது போலவே பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஸ்ருதி தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்ததும் மீனாவின் அம்மா அவரிடம் நலம் விசாரிக்க அதற்கு ஸ்ருதி நீங்க அன்னைக்கு கொண்டு வந்த முறுக்கு கொண்டு வந்தீங்களா? என்று கேட்டு வாங்கி சாப்பிட விஜயா இதெல்லாம் சாப்பிடாத இவங்க என்ன எண்ணெயில செஞ்சாங்களோ என்று சொல்ல,

அதற்கு ஸ்ருதி அவங்க எல்லாம் நல்ல எண்ணெயில் தான் செஞ்சி இருப்பாங்க. கடையில் வாங்கி சாப்பிடுறதை விட வீட்டில் செஞ்சதை சாப்பிடறது தான் நல்லது என்று பதிலடி கொடுக்கிறார். பிறகு ரோகிணி அங்கு வந்ததும் மீனாவின் அம்மா உங்க அப்பா ஜெயிலில் இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். மனசு கஷ்டமா இருந்துச்சு சிதம்பரத்தில் ஒரு கோவில் இருக்கு அங்க போயிட்டு வந்தா எல்லாம் நல்லதா நடக்கும் என்று சொல்கிறார்.

அதற்கு கோபமான விஜயா வீட்டில் நடக்கிறது எல்லாம் அங்க போய் சொல்லிட்டாளா? என்று சொல்லி திட்டி அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம் உங்க வேலை எதோ அதை மட்டும் பாருங்க என்று கோபப்படுகிறார். பிறகு அந்த நேரத்தில் முத்து வீட்டுக்கு வந்ததும் மீனாவின் அம்மா கல்யாண நாளுக்காக உங்களை கூப்பிட வந்தோம் என்று தான் வாங்கிட்டு வந்த துணிமணிகளை எடுத்துக் கொடுக்க அதற்கு முத்து இதெல்லாம் எதற்காக செய்யறீங்க? நாம எல்லாம் ஒரே குடும்பம் தான்.

நான் உங்களை அத்தையா நினைக்கல என்னுடைய அம்மாவா தான் நினைக்கிறேன் என்று சொல்ல விஜயா அவமானப்படுகிறார். பிறகு மீனாவின் அம்மா கிளம்பியதும் ரோகிணி மற்றும் விஜயா இருவரும் மீனாவிடம் எப்படி வீட்டில் நடக்கிற விஷயத்தை எல்லாம் சொல்லலாம் என்று திட்ட, அதற்கு மீனா ஒரு குடும்பத்துல அப்பா இல்லாத கஷ்டம் என்னன்னு அப்பா இல்லாதவங்களுக்கு தான் தெரியும்.

அந்த வருத்தத்துல தான் நான் சொன்னேன் என்று பதிலடி கொடுக்கிறார். பிறகு முத்துவும் மீனாவும் ரூமில் பேசிக் கொண்டிருக்கும் போது தான் திட்டியதைப் பற்றி மீனா சொல்லிக் கொடுக்கிறார்களா என்று விஜயா ஒட்டு கேட்டுக் கொண்டிருக்கும்போது ரூமில் இருந்த மீனா வெளியே வந்து விடுகிறார். அப்போது விஜயா நிற்பதை பார்த்து பயப்படாதீங்க நான் நீங்க திட்டுனதை எல்லாம் சொல்ல மாட்டேன்.

எனக்கு இந்த குடும்பத்தோட நிம்மதி முக்கியம் என்று அடுத்த பல்பு கொடுத்து போகிறார். அதை தொடர்ந்து முத்து மீனாவுக்காக ஒரு கிப்ட் வாங்கிட்டு வந்து அண்ணாமலையையும் விஜயாவையும் நிற்க வைத்து அவர்களின் காலில் விழப்போகும்போது அங்கு முத்துவின் பாட்டி வீட்டிற்கு வர முத்து ஓடிப்போய் பாட்டியை தூக்கி சுற்றுகிறார்.

அண்ணாமலை அம்மாவை கீழே இறக்கி விடுடா என்று சொல்ல பாட்டி சொல்லாம கொள்ளாம வந்து இருக்கீங்க என்று மீனா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார். அதற்கு விஜயாவும் அதானே அத்தை திடீர்னு வந்து இருக்கீங்க? நீங்க வரதை சொல்லலையே என்று கேட்க அதற்கு விஜயா உன்கிட்ட சொல்லி சம்மதம் வாங்கிட்டு தான் நான் வரணுமா? என்று கேட்க, அப்படி எல்லாம் இல்ல அத்தை என்று விஜயா சொன்னது உன் அக்கறை பற்றி எனக்கு நல்லாவே தெரியும் என்று பாட்டியும் விஜயாவுக்கு பதிலடி கொடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+