சிறகடிக்க ஆசை: சத்யாவால் முத்து போட்ட சண்டை.. துணிக்கடையில் தொங்க போகும் போட்டோ! சிக்கிய விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மே 17ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் முத்துவின் திருமண நாளுக்காக சத்யா வாங்கி கொடுத்த சட்டையால் சண்டை வருகிறது. மறுபக்கத்தில் வீட்டிற்கு வந்த முத்துவின் பாட்டி விஜயாவை பாடாய்படுத்துகிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாட்டி வீட்டிற்கு வந்ததும் முத்து பாட்டியிடம் இன்னைக்கு என்ன நாள் என்று தெரியுமா? என்று கேட்க அதற்கு பாட்டி இன்னைக்கு உங்களுடைய கல்யாண நாள். அது தெரிஞ்சு தானே அதற்காக வீட்டிற்கு வந்தேன் என்று சொன்னதும் முத்து மீனாவிற்காக தான் ஒரு மோதிரம் வாங்கிட்டு வந்திருப்பதாக சொல்லிக் கொடுக்க அதை பார்த்து நல்லா இருக்குடா... நீ இப்போ ரொம்பவே மாறிட்ட என்று பாராட்ட, அண்ணாமலை மீனா அவனை நல்லபடியா மாத்திட்டா என்று சொல்கிறார்.

அதற்கு பாட்டி எப்பவும் பொண்டாட்டி பேச்சைக் கேட்டு இப்படியே நல்லபடியா நடந்து கொள்ளு என்று சொல்ல விஜயா என்னத்த சொன்னீங்க? பொண்டாட்டி பேச்சை கேட்டு நடக்கணுமா? என்று கேட்க நல்லது சொன்னால் கேட்டு நடக்கணும் கெட்டது யார் சொன்னாலும் கேட்டு நடக்கக்கூடாது என்று பதிலடி கொடுக்கிறார். அதைத் தொடர்ந்து மீனாவும் முத்துவையும் மீனாவின் அம்மா வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர்.
விஜயா டல்லாக உட்கார்ந்து இருப்பதை பார்த்து ரோகிணி என்ன ஆச்சு ஆன்ட்டி உங்க மூஞ்சி டல்லா இருக்கு என்று கேட்க அதற்கு மனோஜ் பாட்டி வந்தாலே அம்மாவுக்கு பியூஸ் போயிடும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது பாட்டி விஜயா என்று கூப்பிட ரோகிணி இதோ வந்துட்டேன் அத்தை என்று மனோஜை பிடித்து தள்ளிவிட்டு செல்கிறார். அடுத்ததாக முத்துமீனா வீட்டிற்கு வந்ததும் பக்கத்து வீட்டுக்காரர்கள் மீனாவின் அம்மா சீதா எல்லோரும் வாழ்த்து சொல்லி இந்த சட்டை உங்களுக்கு நல்லா இருக்கு என்று சொல்கின்றனர்.
அதற்கு முத்து ஆமா பாட்டி கூட நல்லா இருக்குன்னு சொன்னாங்க. எந்த கடையில் வாங்கினீங்க? என்று கேட்க மீனாவின் அம்மா நான் வாங்கல மாப்பிள்ளை, உங்களுக்காக சத்தியா தான் பார்த்து பார்த்து வாங்கிட்டு வந்தான் என்று சொல்ல, அந்த நேரத்தில் சத்யாவும் வீட்டிற்கு வருகிறார். உடனுக்கு கோபமான முத்து உங்க அம்மா வாங்குனதுனு தானே சொன்ன? ஏன் அவன் வாங்குனதுனு என்கிட்ட சொல்லல? என்று கோபப்பட,
மீனா யார் வாங்கினா என்னங்க எங்க வீட்ல இருந்து வாங்கி தந்தது தானே என்று சொல்ல அதற்கு சத்தியா ஏன் நான் வாங்கி கொடுத்த சட்டை எல்லாம் போட மாட்டாரா? என்று நக்கலாக கேட்க அதற்கு முத்து இதையெல்லாம் போட்டா என்னை நானே செருப்பால அடிச்சுக்கிட்டதுக்கு சமம் என்று சட்டையை கழட்டி வீசிவிட்டு வேகமாக கிளம்புகிறார். மீனாவும் முத்துவை நிற்க சொல்லியே பின்னாடி ஓடி வர எல்லாரும் முத்துவை நிறுத்த முயற்சி செய்கிறார்கள்.
அதற்கு முத்து இப்போ நீ வரியா இல்லையா? என்று மீனாவிடம் கோபப்பட மீனாவும் பிரச்சனை வேண்டாம் என்று முத்துவோடு போய்விடுகிறார். காரில் முத்து போய்க் கொண்டிருக்கும் போது மீனா இப்படி சட்டை போடாம போனீங்கன்னா உங்க அம்மா என்னதான் தப்பா பேசுவாங்க என்று கோபப்பட, முத்து ஒரு துணி கடைக்கு காரை விடுகிறார்.
அதற்கு மீனா நீங்க வர வேண்டாம் இப்படியே வந்தா நல்லா இருக்காது நான் போய் வாங்கிட்டு வரேன் என்று சட்டை வாங்க கடைக்கு போக முத்துவும் கூடவே இறங்கி கடைக்கு போகிறார். அப்போது கடைக்காரர் என்ன சார் பனியனோடு வந்து இருக்கீங்க? என்று கேட்க அதற்கு முத்து அப்போதான சட்டை போட்டு பார்த்து வாங்க முடியும். அதனாலதான் என்று முத்து கவுண்டர் கொடுக்கிறார்.
அதற்கு கடைக்காரர் நீங்க எங்க கடை மேல வச்சிருக்கற நம்பிக்கையை பார்த்து எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று கடையில் வேலை பார்க்கும் எல்லோரையும் கூப்பிட்டு முத்துவுடன் ஒன்றாக சேர்ந்து செல்பி எடுக்க வைத்து அந்த போட்டோவை நெட்டில் போட்டு வைரல் ஆக்கணும் பெருசா ப்ரைம் போட்டு கடையில் மாட்ட வேண்டும் என்று சொல்ல மீனா சிரிக்கிறார்.
அதற்கும் முத்து நெட்ல எல்லாம் போடாதீங்க ஒரு வைரலால் நான் பட்ட பிரச்சனை போதும் இப்பதான் அதிலிருந்து வெளியே வந்திருக்கிறேன் என்று சொல்ல அதற்கு கடைக்காரர் அப்போ பிரேம் போட்டு மாட்டிக்கிறோம் என்று அனுமதி கேட்க முத்துவும் சரி என்கிறார். பிறகு சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு முத்து வீட்டிற்கு கிளம்பி வருகிறார். அந்த நேரத்தில் வீட்டில் எல்லா வேலைகளையும் பாட்டி விஜயாவை செய்ய வைக்க விஜயா சோர்வாக உட்கார்ந்து இருக்கிறார்.
அப்போது முத்துவும் மீனாவும் வீட்டிற்கு வந்ததும் பாட்டியும் அண்ணாமலையுடன் முத்துவிடம் போகும்போது ஒரு சட்டை போட்டு இருந்த வரும்போது வேற சட்டையோட வர என்று கேட்க அதற்கு முத்து இதுவும் அவங்க எடுத்து கொடுத்தது தான். அந்த சட்டை ஆணியில் மாட்டி கிழிஞ்சிடுச்சு என்று சொல்ல அந்த நேரத்தில் மீனா டீ கொட்டிடுச்சி என்று சொல்ல இருவரும் வேறு விதமாக சொல்வதைப் பார்த்து விஜயாவிற்க்கு சந்தேகம் அதிகம் ஆகிறது. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications