சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு சரியான செருப்படி பதில் கொடுத்த மீனா.. முத்துவா இப்படி எல்லாம் பேசியது?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மே 1ஆம் தேதிக்கான எபிசோட்டில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் ஜீவாவிடம் இருந்து 30 லட்சம் வாங்கிய மனோஜ் மற்றும் ரோகிணி மாற்றி மாற்றி பேசுவதால் முத்து மற்றும் மீனாவிற்கு சந்தேகம் வந்திருக்கிறது. அதை பற்றி ரோகிணி மீனாவிடம் முத்துவை பற்றி பேசி வாங்கி கட்டிக் கொள்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜ் ரோகிணியின் அப்பா 15 லட்சம் ரூபாயை என்னுடைய பெயருக்கு அனுப்பி வைத்தார் என்று சொன்னதைக் கேட்டு முத்து கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். அது எப்படி ரோகிணிக்கு அனுப்பாம உனக்கு அனுப்புனாங்க என்று மீனா ஸ்ருதி, ரவி எல்லாரும் சொல்ல அதற்கு ரோகிணி அவர்தானே பிசினஸ் தொடங்க போகிறார்? அதனால் அவருடைய அக்கவுண்டுக்கு பணத்த போட்டுடாங்க இல்லன்னா பிறகு பிரச்சனை வரும்னு சொன்னதால மாமா மனோஜ் பெயருக்கு அனுப்பி இருக்காங்க என்று சமாளிக்கிறார்.

அதற்கு விஜயாவும் நீ சொன்னா சரியாக இருக்கும். ஆனால் இந்த முத்துக்கு மனோஜை பார்த்து பொறாமை அதனாலதான் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார் என்று கூறுகிறார். அதைத் தொடர்ந்து தங்களுடைய ரூமுக்கு போனதும் ரோகிணி மனோஜை போட்டு அடிக்கிறார். இனி இந்த பணம் விஷயத்தில் ஏதாவது பேசுனா அவ்வளவுதான்.. எந்த விஷயத்தையும் அவங்க முன்னாடி உளறிடாத என்று சொல்ல, மனோஜும் சரி என்று சொல்கிறார்.
பிறகு மீனா கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது அங்கு வரும் ரோகிணி உங்க புருஷன் ஏன் எங்க விஷயத்துல தலையிடறாரு அவருக்கு வயித்தெரிச்சலா? இல்ல பொறாமையா? இனி எங்க விஷயத்துல தலையிட வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று சொல்ல அதற்கு மீனா எந்த வயித்தெரிச்சலும் இல்லை. அவர் சந்தேகத்தை தான் கேட்டார். நீங்க பேசுற பேச்ச பார்த்தா எனக்கே சந்தேகம் வருது. உண்மையா உங்க அப்பா தான் அனுப்பினாரா? என்று மீனா பதிலடி கொடுக்கிறார்.

அதற்கு ரோகிணி நாங்க உங்க விஷயத்தில் தலையிடுறோமா எதற்காக முத்து எங்க விஷயத்தில் தலையிடுறாரு? என்று கேட்க, அதற்கு மீனா நாங்க கார் வாங்கின போது நீங்களும் தான் துருவி துருவி விசாரிச்சீங்க. அப்போ எதுக்கு அப்படி கேட்டீங்க என்று கேட்க அதற்கு ரோகிணி அது தெரிஞ்சுக்கலாம் என்று கேட்டேன் என்று பதில் சொல்ல, அது போல தான் இப்பவும் என் வீட்டுக்காரர் தெரிஞ்சுக்கலாம் என்று கேட்கிறார் என்று பதிலடி கொடுத்துவிட்டு கிளம்புகிறார்.
இதை தொடர்ந்து முத்து விடம் சென்ற மீனா நீங்க ஏன் வாயை வச்சுட்டு சும்மா இருக்க மாட்டேங்கறீங்க? ரோகிணி விஷயத்தில் நீங்க தலையிடாதீங்க. நீங்க பேசிட்டு போயிருவீங்க. பிறகு அத்தையும் ரோகிணியும் என்னை விட மாட்டாங்க என்று சொல்கிறார். அதற்கு முத்து உன்னை யார் என்ன சொன்னாங்க? இப்பவே நான் கேட்கிறேன் என்று கிளம்ப நீங்க ஒண்ணுமே செய்ய வேண்டாம் என்று மீனா அனுப்பி வைக்கிறார்.

பிறகு ரோகிணியும் விஜயாவும் ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது அங்கு பிஏ வருகிறார். அவர் ரோகிணியிடம் நான் கேட்ட ஒரு லட்சம் ரூபாய் பணம் எப்ப தர போற அப்படி தரவில்லை என்றால் நான் உன் வீட்டுக்கு வந்து உன் குடும்பத்தை பற்றியும் உன் பிள்ளை பற்றியும் சொல்லுவேன் என்று மிரட்டுகிறார்.. இதனால் பணம் தருவதாக அவரை அனுப்பி வைத்துவிட்டு மனோஜிடம் தான் பணம் கேட்கணும் ஆனால் அவனை ஏமாற்றுகிறது இதுதான் கடைசியாக இருக்கணும் என்று ரோகிணி வித்யாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
வீட்டுக்கு வந்த ரோகிணி மனோஜிடம் என்ன செய்கிறா என்று கேட்க உலகத்தில் இருக்கிற பணக்காரங்க எப்படி முன்னுக்கு வந்தாங்க என்று பார்க்கிறேன் என்று சொல்ல, அதற்கு ரோகிணி யாரையும் பார்த்து எதுவும் பண்ண வேண்டாம். நாமாக என்ன பண்ண முடியுமோ அதைத்தான் பண்ணனும் என்று அட்வைஸ் பண்ணுகிறார். பிறகு மனோஜ் பணத்தை வட்டிக்கு கொடுப்போமா என்னுடைய பார்க் நண்பன் சொன்னான் என்று கேட்க,
அதற்கு ரோகினி யோசித்து விட்டு பிஏவுக்கு காசு கொடுக்க இதுதான் வழி என்று சரி நானே உன்னிடம் முதலில் வாங்குகிறேன். எனக்கு ஒரு லட்ச ரூபாய் வட்டிக்குதா என்று கேட்டு 2000 ரூபாயை அனுப்பி வைத்துவிட்டு ஒரு லட்சத்தை வாங்கிக் கொள்கிறார். அதோடு பார்த்தியா நீ இருந்த இடத்திலே 2000 ரூபாய் சம்பாதிச்சுட்ட என்று மனோஜ்க்கு வாழ்த்துக்கள் சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications